என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
ஜனவரி பதினேழு இரண்டாயிரத்து பதினாறு பெரும் மழை சென்னை
பாதிப்பு இது சத்தியமான செய்தி
என்ற மதுரை விஜயலக்ஷ்மி முகநூல் செய்தி.
அதில் இன்னொருவர்
தனுஷ்கோடி போல் ஆனால்
உணர்வார்கள் .
என்னே உயர்ந்த எண்ணம்..!
தண்ணீரால் கண்ணீரில் மிதக்கும் சென்னை.
இந்த சோகத்திலும் அரசியல்
ஒட்டுப்படம் ஒட்டாப்படம்
அம்மா படம் இப்போ
அய்யா கலைஞர் படம் அப்போ.!ஃபிலிம் காட்டியது போதும்
உண்மை நாட்டுப்பணி எப்போ.!
திடீர் நகரம் உருவாக்கி
தாழ்வுப் பகுதியில் குடியேற்றி
மூழ்கிய பகுதியில் முழங்கால்
அளவு தண்ணீரில் அரிசி கொடுத்து
ஓட்டு வாங்கும் அரசியல ஒழிக்க
வழிப்பணர்வு எப்ப வரும்.
கோட்டூர் புரம் தாழ்வில்
மக்களை வசிக்கவைத்தவர் யார்.
ஓட்டு என்ற ஒன்றுக்காக அவர்களை மனசாட்சி இன்றி
மூழ்கடித்து வேடிக்கை பார்க்கும் கட்சிகள்.
நிவாரணம் கையேந்தி சாப்பாடு
காரணம் ஓட்டுப்போடும்
பள்ளத்தில் குடிசையில்
வாழும் ஏழைகள் அறியாமை.
அனுதாபம் காட்டி வெள்ளத்தில் உதவி பள்ளத்தில் குடியமர்த்திய
தலைவர் சுய நலம் அறிவது எக்காலம் .
Sunday, December 13, 2015
விழித்தெழுவது எப்போது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment