Saturday, December 26, 2015

அன்பு ஆண்டனைக் கண்டவர்கள்

இறைவனைக் கண்டவர்கள்

இவ்வுலகினில் யாரென்று

உள்ளத்தால் உண்மையாக
ஊடுருவி பார்த்த போது
எளிய ஆடம்பரமற்ற
உள்ளத்தால் பக்தி செலுத்திய
அடியார்களே இறைவனைக்கண்டருள் பெற்றுள்ளனர்.
யாகம் பல செய்தவர்கள்
அரசர்கள் பேரரசர்கள்
பெரும் செல்வந்தர்கள்
தங்கள் நலம் தங்கள் பதவி
சந்தான பாக்யம் என்ற சுயநலத்திற்கே வேள்விகள் தான தர்மங்கள் செய்து வாழ்ந்தனர்.
தங்கள் கோட்டை தங்கள் வளரச்சிக்கே ஆள்பவர்களின்
ஆண்டவன் பக்தி
வையகம் தழைக்க  நல்வழிகாட்ட
சாந்தி ஒற்றுமை தான தர்மங்கள்
அறநெறி வாழ நன்நெறி காட்டியவர்கள்
அடியார்கள்
அரசமரத்தடியிலும்
காட்டிலும்
அடவியிலும் வாழ்ந்தவர்கள்.
அரச பதவி துறந்தவர்கள்
ஆடையையும் துறந்தவர்கள்
ஆடம்பரமற்றவர்கள்
வையகம் ஒரு குடு்ம்பம்  என்றே
வாழ்ந்தவர்கள்.
வையகம் வாழ்க என்றே மனிதநேயம் வளர்த்தவர்கள்
அன்பே ஆண்டவன் என்றவர்கள்
உண்மையே கடவுள் என்றவர்கள்
ஆசையைத் துறந்தவர்கள

ஆசை ஒழித்தால்
நாமே பேரரசர்
என்றவர்கள்
அலௌகீக வாழ்க்கையில்
ஆழ்நிலை பக்தியில்
அஹம் ப்ரஹ்மாஸ்மி அதாவது
நாமே கடவுள் என்ற
நிலை அடைய
வழி காட்டியவர்கள்.
ஆன்மீக ஒழுக்க நெறி வளர்த்தவர்கள்
கோவணத்துடனே
வாழ்ந்த ரமண ரிஷி
கோவணமே இல்லாமல்
  வாழ்ந்த மஹாவீர்
அரச ஆடம்பரம்
துறந்து வாழ்ந்த புத்தர்
கிழிந்த ஓரங்கி
எளிய வாழ்க்கை வாழ்ந்த
சீரடி   சாய்பாமா
அல்லா ஏசு   அனைவரும்
எளிய  வாழ்க்கை அன்பு
பண்பு மனித ஒற்றுமை வளர்த்தவர்கள்
வெளிஆடம்பர   சக்தி
விரும்பா பக்தர்கள்.
பணத்தால் பாவம் போகும் என்ற
நிலை மாற்றி பாவத்தை உணர்ந்தால் இறை அருள்
கிட்டும். அன்பே ஆண்டவன் .




















No comments: