Sunday, December 27, 2015

ப்ரஹ்மானந்தம்

அனைவருக்கும் காலைவணக்கம்.

அகிலத்தை ஆட்டிப்படைக்கும்
ஆண்டவன் லீலை அளவற்றது.
மனிதன் வேட்டையாடும் மிருகங்கள்.மனிதனை வேட்டையாடும் மிருகங்கள்.
விஷ ஜந்துக்கள் நுண் கிருமிகள்
பல நோய்கள் அனைத்திற்கும் மருந்துகள்.
நோயின் ஆரம்ப நிலை.நோயின் முற்றிய நிலை
அறிகுறி தெரியாமலேயே முற்றும் நோய்கள்
நோய் தெரிந்தாலும் மருந்தில்லா நோய்கள்
கோடீஸ்வரன் ஆனால் அன்பு மனைவியில்லை
மனைவி மிகவும் அன்பாக இருந்தும்
சபலபுத்தியுள்ள ஆண்கள்
அரசன் ஒருகாலத்தில் அந்தப்புரத்தில் அழகிய பெண்களை நிரப்பி தன் பெருமையை நிலைநாட்ட
படையெடுப்பு
மாற்றான் மனைவியை
அடைய விருப்பம்
மாற்றான் பொருளை கொள்ளையடிப்பது
மாற்றானை ஒழித்து ஆட்சிபிடிப்பது
கொடுங்கோல் ஆட்சி
ஆணவத்தால் அகிலத்தை
ஆள படைஎடுப்பு

உடன் கட்டை ஏறுதல்
குழந்தை இல்லை என்றால்
அதற்கு இன்றைய விந்து தானம்
இராமாயணத்திலும்உண்டு
மஹாபாரதத்திலும் உண்டு
ஆற்றில மிதந்த  கள்ளப்பிள்ளைகள்
குளக்கரைப்பிள்ளைகள்
ஆலயப்பிள்ளைகள்
பூமிப்பிள்ளைகள்
இயேசு சீரடிசாயி போன்ற
பெற்றோர் அறியா பிள்ளைகள்
வளர்ப்புப்பிள்ளைகள்
தவமிருந்து பெற்ற பிள்ளைகள்
அனாதைப்பிள்ளைகள்
பிறவிக்குருடு செவிடு
கைகால்தலை ஆடிக்கொண்டிருக்கும்
பிள்ளைகள்
பைத்தியக்காரப் பிள்ளைகள
பூர்ண ஆயுசு அல்பாயுசு
அஞ்சும் மனிதன் அஞ்சா மனிதன்
இந்த வையகத்தில் பொருளாதரமருந்தும் வருந்தும்
பணம்படைத்தவர்கள்
பதவியிலிருந்தும் பதரும் கண்ணீர் விடும் ஜன்மங்கள்
ஏழ்மை நிலையில்  ஏற்றம்
அனைத்தையும் செய்யும்
ஆண்டவன் 
நம்மை அமைதி மனநிறைவுடன்
வாழ அமைத்ததே ஆன்மீகம்.
ஆன்மீக வழி அன்பு வழி
ஆன்மீகம் ஸத்ய வழி.
ஆன்மீகம்  புனித வழி.
ஆன்மீகம் வையகம் வாழவைக்க
இறையடியார்களால்
தோற்றுவித்த வழி.
அறவழி
இல்லறம் இன்பமாக அமைய காட்டிய வழி.
பிழை இல்லா புனித பற்றற்ற பாதையே ஆன்மீகம்.
அன்புடன்  மனத்தூய்மையுடன்
இறைவனையே சரணாகதி அடையுங்கள்.
அதுவே பரமானந்தம்



No comments: