இவ்வுலகியலி்ல் விடுபட்டு
மன சாந்தியுடன் வாழ வழிகாட்டுவது ஆன்மீகம்
ஆனால் அதற்கு கல்லூரி
பயிற்சி என்பதை விட
மன ஒருமைப்பாடு அவசியம்.
இதற்கு ஒரு மணி நேரம் அல்லது
குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் தேவை.
நாம் நம் அன்றாட செயல்களில்
நம் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதும்
மன நிறை வைத் தருவதும் எது என்று தெரியும் .சில செயல்கள்
நமக்கு வேதனை தரும்.
மற்றவர்களைப் புண்படுத்தும்.
நாம் செய்த ஒரு செயலுக்கு
பலரின் ஆதரவோ பலரின் எதிர்ப்போ இருக்கும்.
எனக்கு விநாயகர் விசர்ஜனம்
பிடிக்கவில்லை அது ஆண்டுக்காண்டு பதட்டத்தை உண்டாக்குகிறது.
கோஷ்டி சண்டைகள்
எங்களுக்கு அனுமதி அனுமதியில்லை என்ற போராட்டங்கள்.
என்ன செய்வது?
இக்கருத்தை வெளி யிடுவதற்கு
மனதில் போராட்டம் .
ஆனால் என்னை எழுதத்தூண்டும்
சக்தி எது புரியவில்லை.
மனிதனுக்கு சமுதாய நலச் சிந்தனை தேவை.
அது ஆன்மீக சிந்தனையுடன்
சேர்ந்துஇயங்குவதால்
சத்தியம் நேர்மை தான தர்ம சிந்தனைகள் செயல்பாடுகள்
ஓங்கிவளர்கின்றன.
வள்ளுவர் சிந்தனை
மலர் மிசை ஏகினார் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்
என்றவர்
அரசியல் அமைச்சர் கல்வி அறம்
என்று பல ஒழுக்க நெறிகளைக் கூறுகிறார்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் இவை நான்கும்
மிழுக்கா இயன்றதறம் என்கிறார்.
என்பிலாதவனை வெயில் போல்
காயுமே அன்பில்லாதவனை அறம்
என்கிறார்.
No comments:
Post a Comment