விநாயகப் பெருமான் தோற்றப்பொலிவு பற்றி பல கதைகள் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். .
இன்றுவரை எனக்குத்தெரிந்த கதை :--பார்வதி குளிக்கச்செல்லுமுன்
விநாயகரை காவல் வைத்துச் சென்றதாகவும் ,பரமசிவனையும் விநாயகர் தடுத்ததால் சண்டை ஏற்பட்டு அதில் பரமசிவம் விநாயகர் தலையைத் துண்டித்ததாகவும் பின்னர் யானை கழுத்தை ஓட்டவைத்ததாகவும் கஜமுகன் வரலாறு.
இன்று திரு. சம்பந்தம் எழுதி வெளியிட்ட " கருணை புரியும் கணேச மூர்த்தி என்ற நூலில் விநாயகர் தோற்றம் விளக்கும் மூன்று புராணக்கதைகள் படித்தேன்.
காஞ்சி புராணம் :--ஒரு சமயம் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் கைலாயத்தில் உள்ள மந்திர மண்டபத்தில் நுழைந்தனர். அங்கே பொறிக்கப்பட்ட பிரவணம் பிரிந்து அகரம் ஆன் யானையாகவும் உகரம் பெண்யானையாகவும் மாறின.. இரண்டும் சேர்ந்ததால் கஜமுகத்துடன் விநாயகர் தோன்றினார்.
கந்த புராணம் /;-நந்தவனத்தில் இருந்த சித்திர மண்டபத்தில் இருந்த பிரவணம் பிடியாகவும் களிராகவும் மாறின.இரண்டும் கூடியபொழுது விநாயகர் தோன்றினார் .
விநாயக புராபுராணம் :-ஒருமுறை சிவனும் பார்வதியும் பொழில் வளங்களையும் சோலைகளையும் மண்டபங்களையும் பார்த்துகொண்டிருந்தனர். அங்குள்ள ஓவியங்களைப் பார்க்கும்போது ஆண்யானை உருவத்தை சிவனும் பெண்யானை உருவத்தை பார்வதியும் பார்த்தனர். அதேநேரத்தில் பெரோளிவடிவமாக விநாயகப்பெருமான் தோன்றி உமதேவியையும்சிவபெருமானையும் வணங்கினார்.
இதை ஞானசம்பந்தர் :-
பிடியத னுருவமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
No comments:
Post a Comment