ஆலயங்கள் ஆன்மீக ஸ்தலங்கள். அதற்கென்று ஆசாரங்கள், நியமங்கள் ,புனிதம் நிறைத்த அந்த இடங்களில் இன்று செய்யும் சாஸ்திரத்திற்கு மாறான செயல்கள்,ஆலயச் சுற்றுப்புற சுவர்களை சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுவது வருமானம் வரும் என்று இஷ்டப்பட்ட நேரத்தில் தேர் இழுப்பது,பூஜை நேர மாற்றங்கள்,பூஜை நேர நீடிப்பு,ஆலயங்கள் முன்னாள் கடவுளைப்படைத்தவன் முட்டாள்,கடவுள் இல்லை என்றவாசகம், ஆலயத்திற்குள் துப்புவது,சில இடங்களில் ஆலயத்திற்குள் திறந்த வெளி கழிப்பிடம்,தூய்மை இன்மை ,பல பாழடைந்த கோயில்கள்,இதை எல்லாம் நிர்வகிக்க ஒரு இயக்கம் இல்லை.
ஒரு நடிகை செருப்பு போட்டு நடந்ததற்கு அதுவும் கிரிவலத்தில் போராட்டம்,கொடும்பாவி எரிப்பு. இப்படி செய்கிறார்களே !பாதுகை ஆண்ட நாட்டில். செருப்பு என்பது பாத ரக்ஷை. கட்டை அந்தக்காலம். காலத்திற்கேற்ப பஞ்சகச்சம் ,குடுமி மாறிவிட்டது,வரவேற்க வேண்டியது. அந்த கிரிவழி ப்பாதையில் .கேலிக்கூத்து.அழகு நிறைத்த குளம் உள்ள அழகான சிவன் கோயில் திண்டிவன பாண்டி ரோடில் பக்கத்தில் பார்த்தேன். குளமும் கோயிலும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இவ்வாறு எத்தனையோ? இதற்கு ஒரு முயற்சி இல்லை.
இப்பொழுது ஆங்கில புத்தாண்டு பூஜைகள் போராட்டம் .அன்று நடக்கும் அவலங்கள்-----ஆண்டவனே மனிதர்களுக்கு நல்ல புத்தி கொடு. நல்ல புத்தி.புத்தியுள்ள மனிதர்களே அனைவரும். எனது பிரார்த்தனை உன் விஷயத்திலாவது சத்தியம் நேர்மை.
Tuesday, December 29, 2015
ஆலயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment