ஆங்கிலப்புத்தாண்டு வருகிறது.
ஆடம்பரமாக ;ஆடல் பாடல் குடி கூத்து கும்மாளம் என.
ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் அளவிற்கு
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.
வாழ்த்துக்களும் தமிழ்ப்புத்தாண்டில் அதிகம் வருவதில்லை.
தமிழ்ப்புத்தாண்டு தந்தையர் தினம் போல் .
ஆங்கிலப்புத்தாண்டு காதலர் தினம் போல்.
பண்பாட்டை கட்டுப்பாட்டை மீறி
ஐந்து நக்ஷத்திர ஹோட்டல் கும்மாளம்.
நீச்சல் குளம் மேடை போட்டு சரிந்த நாள்.
டாஸ்மாக் கடைக்கு கும்மாளம்.
ஆங்கிலேயர்கள் சென்றாலும் இந்தியர்கள் வாழ ஆங்கிலம்.
இந்திய பாரம்பரியம் மறக்க ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்.
அதிகமான இளைஞர்கள் கொண்டாடும் நாள்.
ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் குறைய வேண்டும்.
இளைஞர்களே! ஏழைகள் நடுத்தரமக்கள் இன்புற்றிருக்க குடியை மறந்து விடுங்கள்.
இந்த ஆங்கிலப்புத்தாண்டில் குடிகாரர்களால் அரசுக்கு வருமானம் வரக்கூடாது.
குடியை நிறுத்தி ஏழை மத்திய தர மக்கள் தாழ்வதை தடுப்போம்.
டாஸ்மாக் வருமானம் மூடுவிழா நடத்த பிள்ளையார் சுழி போடுவோம்.
No comments:
Post a Comment