கற்கால மனிதன்
தற்கால மனிதன்
அறிவியல் முன்னேற்றம்
ஆனந்தமே என்றாலும்
இன்றைய சூழல் பணமே
உயர் கல்வி ஞானம் பணம்
ஆனால் ஆண்டவன் அருள்
இல்லையேல் அமைதி இல்லை.
இன்பம் இல்லை
இன்னல் மயம் அவனியாகும்.
இறைவன் அருள் பெற்றால்
இன்னலில் வரும் இன்பம்.
இன்னலும் இன்பமாகும்.
இந்நில உலகம் மாயை .
நிலையற்றது உலகம்.
இதில் மதங்கள் ஜாதிகள் மொழிகள்
இதனால் வரும் போராட்டங்கள்.
மனநிறைவற்ற பக்தி
பக்தியில் போராட்டம்.
மனித நேயமற்ற வெறுப்பு
மதத்தின் பெயரால் போராட்டம்.
அன்பு அஹிம்சை அறம் இதுவே மதம்.
சூரிய உதயம் சந்திசோதயம்
காற்று நீர் நிலம் நெருப்பு
அனைவருக் கும் பொது.
சுனாமி ஒரு குறிப்பிட்ட
மதத்தினரை மட்டும் தாக்கவில்லை
இறைவன் ஒருவனே.
No comments:
Post a Comment