பால முருகா ! பால முருகா ! பாலமுருகா !
பாப விமோச்சகா ;பக்த ரக்ஷகா !
அருணகிரிக்கு முக்தி அளித்த முருகா !
பொய்யா மொழிக்கு பாடம் கற்பித்த பாலகா !
ஒளவையை சுட்ட பழமா? சுடா பழமா ? என
ஞானம் அளித்த பாலமுருகா !
அப்பனுக்கு உபதேசித்த சுப்ரமணியா !
ஞானதேசிகா !ஞானகுமாரா !
ஞாலம் காக்கும் கலியுகவரதா !
துலாக்கோலாக தண்டிக்கும்
காவடிப்பிரியா ! உன் காலடியில் சரணம் !
கவலைகள் இல்லை ,
துன்பங்கள் இல்லை
உன்னைப் பற்றினேன் உலகியல் மறந்தேன் .
உன்னடியே சரணம் !உன் பங்கஜ பாதமே சரணம் !
உலகியல் மறந்தேன் ! உன்னையே நம்புகிறேன் !
எந்த நிலையிலும் இன்பமே காணுகின்றேன் .
முருகா !சரணம் !கந்தா சரணம்! ஷண்முகா சரணம் !
தன்னலம் மறந்தேன்!தஞ்சம் அடைந்தேன்!
ஷண்முகா!சங்கடம் தீர்ப்பாய் !ஜக பந்தம் அ றுப்பாய் !
ஜகத் ரக்க்ஷகா !கந்தா !கதிர்வேலா !சரணம் !
No comments:
Post a Comment