Saturday, December 12, 2015

ப்ரார்த்தனை

காலை வணக்கம்.

அனைவரையும் அகிலத்தையும்
மூஞ்சூறு வாஹனன் ஞானம் அளித்து காக்க.
மயில் வாஹனன் மனநிறைவு தந்து காக்க.
காளை வாகனன் கருணையுடன் காக்க.
கருடவாஹனன் அஷ்டலக்ஷிமியுடன் காக்க.
தாமரையில் வீற்றிருப்பவள்
கலைகளின் ஞானம்தந்து காக்க
சிம்ம வாஹினி சக்தி வீரம் தந்து காக்க.
காலபைரவன் காலபயம் நீக்கி காக்க.
கருங்குதிரைவாகன கருப்பண்ணசாமி
காவல் தெய்வமாக காக்க.
ஆன்மீகஆசாரியர்கள்
மனிதஒற்றுமை  மனிதநேயம் வளர்த்து அகிலத்தைக் காக்க.
அல்லா ஏசு  சிவன்
விஷ்ணு  அன்பை பண்பை
அஹம்சை அறம் தானம் தர்மம்
செய்வோரை காப்பவர்களே.
இயற்கையான ஒற்றுமையை
சுயநலத்தால் வேற்றுமையாக்கும்
மத போதகர்கள் மனம் மாறி
ஒற்றுமை வளர்க்க தெய்வங்களே.!
நல்லறிவு தாருங்கள்.
நன்மை புரியுங்கள்
மனித இன ஒற்றுமைக்கும்
மனித மகிழ்ச்சிக்கும்
மனிதநேயத்திற்கும்
மதபேத வன்முறை ஒழியவும்
ப்ரார்த்திப்போம்.
இயற்கையைக்காப்போம்.
இயற்கை எய்துவதை நிறுத்தமுடியாது என்பதை மனத்தில் கொள்வோம் .

No comments: