Monday, December 7, 2015

ரஹம் /தயை /இரக்கம் /மெர்சி

இறைவன் /கடவுள்/ஈஸ்வரன் /குதா /காட் /அல்லா /சிவா /விஷ்ணு .பிரம்மா 

சரஸ்வதி /லக்ஷ்மி /பார்வதி.

இறைத்தூதர்கள் --புத்தர் ,மகாவீர் ,சீரடி சாய் ,யேசு  .மேரி 

இத்தனை   சொல்லியும் அழைத்தும் மனிதர்களை பிரிக்கும் சக்தி .
மனிதநேயத்தை மறக்கடிக்கும் சக்தி ,
மனிதர்களுக்குள் வெறுப்பேற்றும் சக்தி 
மதவெறி ,இனவெறி ,ஜாதிவெறி ,சம்பிரதாய வெறி 
இத்தனையும் தூண்டும்  சுயநல மத அரசியல்  வாதிகள் 

இதை  மாயை /சைத்தான் /சாத்தான் என்பதறிந்தும்
 மதிகொண்ட  மனிதன் மதியற்ற ,அன்பற்ற,இரக்கமற்ற செயல் 
மதிமயக்கும் போதையில்  பிதற்றும் போது ,
போதைதெளிய  தண்ணீர் ஊற்றுவது போல் ,
இயற்கையின் சீற்றம் சுனாமியாக ,புயலாக ,எரிமலையாக ,பூகம்பமாக 
மனிதநேயத்தை உண்டாக்கும் இறைவனின் திருவிளையாடல் 
மனிதனுக்குள் தூங்கும் இரக்கத்தை ,தயையை  தட்டி எழுப்புகிறது.
அகிலத்திற்கு சவாலாக உள்ள மதவெறி ஒழிகிறது .
மனிதநேயம் ,பரோபகாரம் ,நேசம் பாசம் மிளிர்கிறது. 
சைத்தான் மதவெறி/போதை  காட்டிய திசம்பர் திங்கள் 
 இறைவனின் ஆக்ரோசத்தால் மழைநீர் தெளித்து தெளியவைத்தது.
இறைவன் காட்டும் அன்பு நெறி ,அற  நெறி,மனிதநேயம் 
பற்றற்ற சேவை   எங்கெங்கும் காண நேர்ந்தது.
ஞானம் தெளிந்த அறிவுள்ள மனிதர்களே விழிப்படையுங்கள் .
உருவம்  இறைப்பெயர் வேறுபட்டாலும் மனிதர்கள் 
தத்தம் மத மார்கத்தில் சென்றாலும் ரஹம் /தயை /இரக்கம் /மெர்சி 

மறக்காமல் பணியாற்றுங்கள். இதுவே இறைவனின் செய்தி.









No comments: