Thursday, December 17, 2015

ஆன்மீகம்

ஆன்மீகம் அரிய விஷயங்கள் நிறைந்தது.   உலகிற்கு  அமைதி
தரும்  வழி காட்டி.
ஆன்மீக குரு ..தேவதூதர்கள்
தோன்றவில்லை என்றால்
உலகில் வாய்மை
பரோபகாரம் தானம் தர்மம்
மனிதநேயம்  அஹிம்சை
பாவச்சயல்கள் ஒரு கட்டுக்குள்
அடங்கி இருப்பதற்கு ஆன்மீகமே காரணம்.
அதற்கு ஆண்டவனின் மாற்ற முடியா தண்டனை முதுமை மரணம்.
இந்த தண்டனையில் இருந்து தப்ப
அதிகாரமலம் ஆஸ்திபலம் எதுவும் உதவாது.
பாதுகாப்புடன் வந்த இந்திராகாந்திக்கு     பாதுகாவலர்களே எமன்.
ராஜீவ் அன்பாக அருகில் வந்த குழந்தையே மனிதவெடி குண்டு
மரணம் அன்பாகவும் வருகிறது.
பாதுகாப்பிலும் வருகிறது.

ஆண்டவனின் அருள் வேறு.
ஆண்டவன் அளித்த அதிகார ஆஸ்தியைத் தவறாக பயன் படுத்தியது வேறு.
ஆஸ்தீகம் சூக்ஷம அறிவு அறிந்தவனே ஆன்மீகவாதி.

.

No comments: