Sunday, December 6, 2015

உன் கருணையால் ஜீவிக்கிறோம் . எங்களைக் காப்பாற்று.

அன்புள்ள  இறைவா ! 
கருணையுள்ள  கடவுளே !
பூமி குளிர ,செழிக்க  மழை 

 தேவை தான்.

தேவைக்கு அதிகமானால்
 அமிர்தமும் நஞ்சு தான்.

சென்னை மக்கள் மேல் என்ன கோபம்.
சற்றே உன் கோபத்தைக் குறைத்து 

மழையை  நிறுத்திக்கொள்.

அச்சத்துடன் வாழ்கிறோம் . மன 

அமைதி இன்றி வாழ்கிறோம். நல்ல 

தண்ணீர் இன்றி  தண்ணீர் 
ஓட தவிக்கிறோம் .
நிரம்பி வழியும் தண்ணீருடன் 
எங்கள் கண்ணீரும் பொருள்களும் 
துயரம் கலந்து செல்கின்றன.
எங்கள் துயர் நீக்க மானிட சக்தி முடியாது.
பகவானே! உன் கருணைப் 
பார்வையால் தான் முடியும்.
கருணை மழை  பொழிந்து 
கார்மேக மழையை  நிறுத்து.
உன் குழந்தைகள் நாங்கள். 
உன் கருணையால் ஜீவிக்கிறோம் .
எங்களைக் காப்பாற்று.
இறைவா !வான் மழையை  நிறுத்தி 
காக்க !எங்களையும்  எங்கள் உடமையையும்.




No comments: