Wednesday, July 24, 2024

வலி பெயர் வலி

 பெயர் வலி.

சே. அனந்த கிருஷ்ணன் வணக்கம்.

 தலைப்பு++++காதல் வலி.

 ++++++++++++++

 காதல் என்பது காத்தல். காத்திருத்தல் ஏக்கம். அந்த காதல் வெளிப்படுத்துவதில் தயக்கம்.

 தயக்கம்  பல காரணங்கள்.

 பணம்,ஜாதி,மதம். பதவி பல காரணங்கள்.படிப்பு தடையாக முடியாது. பொதுவாக உடல் இன்பக் காதல் வேறு. ஆழ்மனக்காதல் வேறு.

 ஒருதலைக் காதல் வேறு. இரு உள்ளம் கலந்த காதல் வேறு.

 இப்படி காதல் பற்றி பல நினைவுகள் எண்ணங்களுடன் சென்ற கருப்பாயி 

 அழகாக இருந்தாலும் கல்லூரியில் படித்தாலும் தன் பெயரால் தாழ்வு மனப்பான்மை. தன்னுடன் படித்த 

 ஜிதேந்திரன் பெயரிலேயே ஒரு சாதித்துவம். காதல். அவனுக்கும் ஒரு காதல். இருவருக்கும் கண்கள் சந்தித்தன. உள்ளங்கள் ஏங்கின.

 ஆனால் காதல் சொல்லத் தடை கருப்பாயி ஜிதேந்திரா பெயர்தான்.

 வலியுடன்  தயக்கத்துடன் பிரிந்தனர்.

 சிதேந்திரன் சியாமா  என்ற பெண்ணை திருமணம் செய்தான்.

 அதன் பொருள் கருப்பாயி என்று புரியவில்லை. கருப்பாயி வெள்ளையப்பன் திருமணம் .

 ஆனால் தமிழ் பெயரல்ல.  சுவேதா ராஜ் . வெள்ளை அரசன் பொருள் புரியவில்லை. காதல் வலி இருவருக்குமே. பெயரில் என்ன என்றாலும் தமிழ் பெயர் வலி ஏற்படுத்தும். மூப்பனார் தான் கருப்பையா ? இந்த வலி மாறுமா?

 நடைமுறையில் இல்லை.


சே. அனந்த கிருஷ்ணன்.

जीवन शरण

 [24/07, 9:26 am] sanantha.50@gmail.com: नमस्ते वणक्कम्।

एस.अनंतकृष्णन का।

--------------------

 अस्थाई जीवन।----

+++++++++++




लोग समझते हैं 

पद हैं अधिकार है।

 अंगरक्षक है,

 पर न जानते

 अंगरक्षक ही काल बनेगा।

प्रधान मंत्री को भून डालेगा।

 बम बनकर आएगा,

 शरीर को छिन्न-भिन्न कर देगा।

 कौन सुरक्षित है,अगजग में।

 द्वारका समुद्रतले,

 धनुष्कोटी केवल उजड़े  हैं।

 पूम्पुकार का पता नहीं।

 किले राजमहल उजड़े पड़े हैं।

 मिथ्या शरीर मिथ्या जगत।

 कृष्ण के रहते महाभारत में 

 कितने अधर्म वध,

 रामायण में कपट संन्यासी वेश,

 फिर भी आज कदम कदम पर पाखंड।

 न कोई यहाँ सुरक्षित आराम।

 करोड़पति भले ही वातानुकूलित कमरे में हो,

 वह भी बूढ़ा बन जाता है,

 धन जवानी न दे सकती।

 यम सबकी आँखों मेँ धूल झोंक आ जाता है, हा हाकर मच जाता है।

 सुनामी, मुकुट विषैला कीटाणु 

  न जाने डिंगु, जाने अंजाने रोग।

 केंसर,हार्ट अट्टेक।

 धनी से फुटपाथवासी हँसता है

 निश्छल निष्कपट सहज स्वाभाविक आनंद।

 मीठी नींद सड़क पर।

 अपना अपना भाग्य, 

‌अपना अपना राग 

 अपनी अपनी डफ़ली।

 यही है सांसारिक जीवन।

 चंद दिनों के मेहमान।

 एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक 

 सौहार्द सम्मान प्राप्त हिंदी सेवी।

[24/07, 10:52 am] sanantha.50@gmail.com: இறைவன் 

 அவனை வழிபட்டு 

 அவனுக்கு பயந்து 

 வாழ்ந்த 

 பக்தி வாழ்க்கையே

 பேரானந்தம்.

 பரமானந்தம்.

 அதற்கு ராம் பக்தர் தியாகராஜர்

 பல ராம் பக்தர்கள் 

  வாழ்ந்த காலம்.

 இறைவன் அருள் 

 பெற்ற காளிதாசர்

 அருணகிரி 

 துளசிதாசர் 

 கபீர் சூர்தாசர்

 ஆண்டாள் மீரா

 இவர்கள் என்றும் இருப்பார்கள்.

 கருணை நிதி பெற்றவர்கள்.

 இந்த ஆழ் மன பக்தி 

 ஆங்கில மயக்கத்தில் 

 பொருளாதார வளர்ச்சி 

 அருளாதாரம் மறந்து 

 பொருள் +தாரம் -வாழக்கை.

 பெற்றோர்கள் ?

 பொருள் +தாரம்

   சற்றே அருள் ஆதாரம் பெற

 ஆண்டவனை சரணடைவோம்.

Thursday, July 11, 2024

இறைவன்

 ஆன்மீகம் என்பது மனிதசக்திக்கு அப்பால் இருக்கும் ஒரு சக்தியை  வழிபடவேண்டும்.

 அது பஞ்ச தத்துவங்கள்.

 அவை இயற்கையில் 

 இறைவனால் படைக்கப்பட்டவை.

 முஸ்லிம் கங்கை

 கிறிஸ்தவ ஆகாயம் 

 ஹிந்து காற்று 

 புத்தர் அக்னி நிலம் 

 மாவீரர்  நிலம் 

  சீக்கிய சீலம் 

 என்றெல்லாம் கிடையாது.

 இந்த ஐந்து தத்துவங்களும் 

  தாவரங்கள் விலங்குகள் புழுக்கள்  பறவைகள் புல் பூண்டு செடி கொடி என்று அனைத்திற்கும் பொது.

 சுனாமி கொரானா பூகம்பம் புயல் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே என்று கூறமுடியாது.

  இவை அனைவருக்கும் இன்னல் தருபவை.

  இந்த ஐந்து தத்துவங்களும் ஒரே இறைவனுக்கு ஷா கட்டுப்பட்டவை.

 இவைகளை மாசு படுத்துவது ஏரிகள்  மூடப்படுவது 

நதிகளின் அகலம் குறைப்பது.

 புகைமண்டலம் எழுப்புவது

 கழிவு நீரை நதிகளில் சேர்ப்பது

மலைகளை தரைமட்டம் ஆக்குவது

 காடுகளை அழிப்பது 

 இவை எல்லாம் இறைவனை இயற்கையை அவமதிப்பது .

 அந்த பஞ்சதத்துவங்கள்

 சீற்றம் அடைந்தால்

 மனிதன் அறிவியல் அழிந்து விடும்.

  ஆகையால் இயற்கை போற்ற வேண்டும்.

 மோடி கோயில் 

 சோனியா கோயில் 

 குஷ்பு கோவில் 

 ஜெயலலிதா எம்ஜிஆர் கோவில் 

 என்று கட்சி வளர்ச்சிக்காக சுயநல ஆலயங்கள்.

 ராமர் கிருஷ்ணர் காலம் போன்றவை.

 இராமர் காளி துர்க்கை சிவன் உபாசகர் அல்லா  ஏசு  என்று  மனித இனத்தைப் பிரித்து 

 மனித நேயமற்ற சூழலை உருவாக்கி

 இனப்படுகொலை 

 தான் மதங்கள்.

 தர்மம்  என்பது  அறம்.

 அறம் பொதுவானது.

 மதம் மாறக்கூடியது.

 மதம் பல பிரிவுகளாக 

 கருத்து வேறுபாடுகள் உடையதாக மாறும்.

 சிவனுக்கு பல ஆதீனம்.

 ஆதினங்களுக்குள் சண்டை.

 விஷ்ணு ஏசு அல்லா பல பிரிவுகள்.

 இவை சுயநல அகங்கார கும்பல்கள்.

  காற்று இல்லை என்றால் மத வேறுபாடின்றி அனைவருக்கும் மூச்சு திணரும்.

தண்ணீர் தாகம் அப்படியே.

 கடல் நீர் உப்பு.

 அது மதம் சார்ந்து இனிப்பாக மாறாது.

 கரும்பு இனிப்பு.

 மதம் சார்ந்து கசப்பாக மாறாது.

 பாலைவனம் மதம் சார்ந்து சோலைவனம் ஆகாது.

 அனைத்தும் ஒரே கடவுள் கட்டுப்பாட்டில்.

 மனிதன் படைத்த ஆலயங்களில் காட்சிகள் மாறும்.

 இறைவனின் இயற்கை மாறாது.

 இயற்கை சீற்றங்கள் மனிதனின் உடனடி பயன் பெறும் முயற்சியால் ஏற்படுவை.

 அறம் /தர்மம் வளர்ப்போம்.

 மதம் மனித மனக் குழப்பம்.

 மனித ஒற்றுமைக்குக்கேடு.

  போலிகள் அனைத்து யுகங்களிலும் உண்டு.

 சிந்திக்க இறைவன் இயற்கை அளித்த கருத்துக்கள் சிந்திக்க.

 சே. அனந்தகிருஷ்ணன்.

Wednesday, July 10, 2024

Hindi

 தமிழ் இலக்கியம்

 நிறைந்த செம்மொழி.

 மிகவும் பழமையான மொழி.

உலகின் தொன்மையான மொழி.


 ஹிந்தி வரலாறு அறிந்து கொள்ளுங்கள். 

 தமிழ் இளைஞர்களே!


       ஹிந்தி கடி போலி என்ற பெயரில் 

 இரண்டரை மக்கள் டில்லி மீரட் ஆக்ரா பகுதிகளில் பேசப் பட்ட  மொழி.


 அது ஹிந்தி யாக வளர்ச்சி பெறத் தொடங்கியது 1900 கி.பி.

 அதாவது 124ஆண்டுகளான மொழி.

 இன்று உலகில் மூன்றாவது 

பெரிய மொழி.

 தமிழகத்தில் 15000ஹிந்தி பரப்புனர்கள்.

 இரண்டு லட்சம் மாணவர்கள்.

 தமிழக அரசு ஆதரவின்றி படித்து வருகின்றனர்.

 பொது மக்கள் ஹிந்தியை ஆதரித்து பேசியும் வருகின்றனர். 

கவிப் பேரரசர் கண்ணதாசன்  ஹிந்தி மயிலே ஆடு.

 தாயகம் உன்னைத் தாங்கும்

 என்று  கவிதை பாடியுள்ளார். முத்தமிழ் காவலர் 

கி. ஆ. பெ விஸ்வநாதன் அவர்களும் இறுதி காலத்தில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று 

கூறியுள்ளார். பேராசிரியர் 

 சாலமன் பாப்பையாஅவர்களும்

ஹிந்தி அவசியம் பற்றி கூறியுள்ளார்.


 ராமேஸ்வரம் கன்னியாகுமரி போன்ற ஸ்தலங்களில் சங்கு வியாபாரிகள் ஹிந்தி பேசு கின்றனர்.

   1900 த்திற்கு முன்னால் இருந்த ஹிந்தி இலக்கியம்  ஹிந்தி அல்ல.

 வித்யா பதி  மைதிலி மொழி 

 துளசிதாசர் அவதி மொழி 

 மீரா சூர்தாஸ் வ்ரஜ பாஷை.

 கபீர் கலப்பட மொழி.


    1900ஆண்டுதான் பாரதேந்து  ஹரிச்சந்திரர் கடிபோலியில் இலக்கியம் படைத்தவர்.

 அவர் தன் தோஹையில் 

 தாய்மொழி முன்னேற்றமே 

அனைத்து முன்னேற்றத்திற்கும் 

 ஆணிவேர் என்று கூறியுள்ளார்.


  பாரதத்தில் பத்துக் கோடி தமிழர்கள்.

 அதில் 40%திராவிடக்கட்சி எதிர்ப்பு.

   பாஜகவின்   செயல்பாடு 

தமிழின் பெருமையைசெங்கோல்  பாராளுமன்றத்தில் வைத்து பெருமை படுத்தியது பாராளுமன்றத்தில் தமிழ் இலக்கியங்கள் பேசுவது புறநானூறு திருக்குறள் புகழப்படுவது என தமிழ் புகழ் வடநாட்டு மக்கள் தமிழ் அறியத் தூண்டு கிறது.

 ஹிந்தி பழம் பெரும் மொழி என்று கூறவில்லை.

 அதன் பெரும் வளர்ச்சி வியக்கத்தக்கது.

 இதை தமிழ் இளைஞர்கள் புரிந்து தெளிய வேண்டும்.

  தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு 

 தமிழ் பேசுவது அழகல்ல என்ற மன நிலை தமிழகத்தில் மட்டுமே.

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பெருமை அல்ல.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.


சே. அனந்த கிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

 ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.

 

 

 


  

Friday, April 19, 2024

tபக்தியும் பாரதமும்

ஓம் நமஹ சிவாய.பாரதம் --பாரினில் பக்தியில் மேன்மையான பாரதம் பக்தி என்பது புரிவது எளிது அதில் நம்பிக்கை ஏற்படுவது எளிதல்ல.காரணம் மனிதன் உடனடி பலன் பெற நினைப்பவன் இந்த உடனடி என்பது பக்தியில் முடியுமா?அதை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க புரிய தெளிய இறைவனைத் தேடுகிறோம். 
     சனாதன தர்மம்  சத்தியத்தின் தர்மம்.அறம்என்பது வேறு.மதம் என்பது வேறு.அறம் அகில உலகிற்கும் பொது.தர்ம சிந்தனை அகில உலகிற்கும்  பொது.வையகம் வாழ மனிதநேயம் ஏற்பட தர்மம்.
மதம் சுயநலமானது.அதில் இறைவனை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும்,இந்தவிதமான மந்திரங்கள் ,வணங்கும் முறை,வணங்கும் நேரம்,உருவ வழிபாடு,அபிஷேகம்,பூமாலை,
சாம்பிராணி,கற்பூரம்,விளக்கு,மெழுகு வர்த்தி அர்ச்சனை ஆராதனை என்ற நெறிமுறையுடன்  கட்டுப்பாடான பக்தி.
     
  அதனால் மதம் மனிதனைப் பிரிக்கிறது.குரான்,பைபிள்,புராணங்கள் மனிதனை மனிதனாக்க
இறை தூதர்களால் ,ரிஷிகள்,முனிவர்களால் ஏற்படுத்தப் பட்டவை.
   இறைவனால் ஏற்படுத்தப்பட்டது தர்மம்.அறம்.ஓளவையார் திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் அறம் காணலாம்.
  அறம் செய விரும்பு என்றால் அது மதமல்ல.மனிதர்களுக்கான 
பொது செயல்.இது தான் பக்தி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் அறம்.ஔவையார் ஈவது விளக்கேல். இது பொது.
இட்டார் பெரியோர்,இடாதார் இழி குலத்தோர். பொது நெறி.

     பக்தி நடுநிலை. மதம் குறுகிய வழி முறை.தர்மம் பரந்தநிலை.
தர்மம் காற்று.தர்மம் தண்ணீர்.தர்மம் நெருப்பு.தர்மம் பூமி.தர்மம் ஆகாயம். பஞ்ச தத்துவங்கள்.இவை அனைத்து மதத்தினருக்கும்
தேவை.அனைத்து தாவரங்கள்,விலங்குகள் இவை இன்றி உயிர் வாழமுடியாது. இதை உணர்ந்து விருப்பு வெறுப்பு இன்றி அன்பு செலுத்துவது பக்தி.
இராமலிங்க அடிகளார் காட்டிய நெறி சமரச சன்மார்கம்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ

இது தான் பக்தி.

தொடரும்






Friday, March 8, 2024

பக்தி

பக்தி என்பது ஆடம்பரமல்ல. ஆழ்மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடவேண்டும். சர்வவியாபியான ஆண்டவன் ஆனந்தக் கூத்தனே. உலக மாயை இன்னல்கள் அளிப்பதும் அவனே. இன்னல் வந்தால் தானே இறைவனை மக்கள் நினைக்கிறார்கள். கபீர் தாசரின் ஈரடி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும். துன்பத்தில் அனைவரும் இறைவனை வழிபடுகின்றனர். இன்பத்தில் இறைவனை நினைப்பதே இல்லை. இன்பத்திலும் நினைத்தால் துன்பத்தில் ஏற்படாது. இராமலிங்க அடிகளார் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும். உனை மறவா திருக்கவேண்டும். மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வில் வாழவேண்டும். இது தான் பிரார்த்தனை. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.

Saturday, February 3, 2024

ராமர் கபீர் எண்ண அலைகளில் ராமர்

 வணக்கம்.

அயோத்தி இராமர்  ஆலயம்  இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 
கபீர்தாசர் பார்வையில் இராமர்  முவ்வுலகிலும் உயர்ந்தவர்.
 ஒரு இராமர் தசரதரின் மகன்.
ஒரு இராமர்  அனைத்து உலகிலும் இருப்பவர்.
ஒரு இராமர் அனைவருக்கும் அன்பானவர்.
ஒரு இராமர் மூஉலகிலும் வியக்கத்தக்கவர்.
 மூன்று இராமரை உலகம் அறியும்.
நான்காவது இராமரின் இரஹசியம் யாரும் அறிவதில்லை.கபீர்.

 ராம்,ராம் என்பதே கபீரின் குரு மந்திரம்.

தசரத ராமர்  உடல் உருவம் உள்ளவர்.

 கபீருக்கு  இரண்டு  இராமர்கள். 
ஒருவர்  வைஷ்ணவ  இராமர். 
மற்றவர் இராமர்.
வைஷ்ணவ இராமர் நாம  ஜபம் செய்விப்பவர்.
இராமர்  முக்தி அளிப்பவர்.

இராமரும் ரஹீமும் ஒருவரே. இரண்டு என்பது பிரமையே.
கபீரின் இராமர் மதசார்பற்றவர்.
அவர்ஒருவர் ஆனால் உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.