Sunday, December 27, 2015

முருகா.! சரணம்

பழனிமலை வாசா
பக்தர்கள் நேசா
பஞ்சாமர்தப் ப்ரியா
பாலாபிஷேகப் ப்ரியா
பிதாவிற்கு ஞானோபதேசம் தந்த
மயூர் வாஹனா

புஷ்பக்காவடிப்ரீயா
பூலோகநாயக
செந்தில் நாதனே!
சேவல் கொடியோனே
சரணம் சரணம்
போற்றி .!போற்றி!
உன்னருள்போதும் உன்னத வாழ்க்கைக்கு.
உடனிருந்து காப்பாய்
உமைபாலா! சிவபாலா.!
சிங்காரவேலா.!
சிக்கல் தீரவே உன்னை சிக்கெனப் பிடித்தேன்.
சிந்தனை வளர எண்ணங்கள் நிறைவேர
சங்கடங்கள் தீர உன்னருள் வேண்டும்
உத்தமி புதல்வா.
முருகா..! ஷண்முகா!முத்துக்குமரா!
உன் க்ருபாகடாக்ஷம் வேண்டுமையா!

No comments: