இறைவா! மனிதன் பிறந்தால்
இன்னலின்றி இருக்கவேண்டும்.
நீ எடுத்த மனிதாவதாரத்திலும்
நல்லவர்கள் நசுக்கப்படுவது ,
துன்பப்படுவது என்றே வாழ்ந்து காட்டியுள்ளாய்.
உன் தூதர்களாக வந்தவர்களும்
இன்னல் அனுபவித்தவர்களே.
இயற்கை இன்னல்,
பிறப்பிலே இன்னல்
வளர்ப்பிலே இன்னல்
ஆசையால் இன்னல்
அன்பால் காதலால் இன்னல்
போட்டி பொறாமையால் இன்னல்
பெண்ணாசை பொன்னாசையால் இன்னல்
பேராசையால் இன்னல்
சிற்றின்பத்தால் இன்னல்
அனைத்திற்கும் சான்று
ஆணவத்தால் இன்னல்
முதுமையில் இன்னல்
இன்னாலில்லா மனிதவாழ்க்கை
இன் நிலவுலகில் இல்லை
ஆஸ் திகளாலும் இன்னல் ,
வாரிசால் இன்னல்
வாரிசின்றி இன்னல்
வறுமையால் இன்னல்
பயங்கர மிருகங்களால் இன்னல்
கொசு போன்ற பூச்சிகளால் இன்னல்
இந்த இன்னல்களின்றி வேண்டும்
மனித ஜன்மம் .கிட்டுமா இப்புவியில் .
No comments:
Post a Comment