இயற்கை மிக சக்தி வாய்ந்தது .
இயற்கையின் வளம் மகிழ்ச்சி தரக்கூடியது.
இயற்கையைப் பேண,
இயற்கையையே தெய்வமாக வழிபட்ட முன்னோர்கள்.
ஆனால் ,நகரம் என்ற செயற்கை ஆடம்பரம்
ஆஸ்தி தந்தது. பொழுதுபோக்கு அம்சங்கள் தந்தது.
பெரும் மால்கள் தந்தது. பணம் .பணம்.பணம்.
கடன் தர வங்கிகள்,கடன் வாங்கித்தர தரகர்கள் ,
கடன் வாங்கத்தூண்ட முகவர்கள் ,
பார்த்ததெல்லாம் வாங்கிக்குவித்த மக்கள் , இன்று
மாரி வெள்ளத்தால் பரிதாப நஷ்டத்தில்
சிந்திக்கவேண்டும் தவணை முறையில் வாங்கிய
மரத்தூள் அழுத்திய மரக்காட்டில் அழகுதான் ;ஆ னால்
மழை தண்ணீர் ஊறியதால் தூள்;தூள் ;
தெய்வப்படங்கள் இன்று தெரு குப்பைத்தொட்டியில்
இயற்கை சீற்றத்தால் இயல்பான வாழ்க்கை பாதிப்பு.
மதங்கள் மறந்த நட்பு ,
மனம் நிறைந்த களங்கமில்லா அன்பு.
இறைவனின் லீலையால் ஒன்று சேர்ந்த சரித்திரம்.
இறைவனை வணங்குவோம் ;இயற்கையைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment