ராமசரித மானஸ்- பாலகாண்டம் --அறுபத்து மூன்று.
அங்கு வந்த இரண்டு அழகான அரசகுமாரர்கள் ,
இருவரும் , கருப்பு-வெள்ளையாக அனைவரின் பார்வைகளுக்கும் சுகத்தை அளிப்பவர்களாகவும் ,
மனம் கவர் கள்வர்களாகவும் இருந்தனர். ஸ்ரீ ராமர் அங்கு வந்ததும் அனைவரும் எழுந்துநின்றனர். ரிஷி அவரை தன் அருகில் அழைத்து உட்கார வைத்தார்.
இரண்டு சகோதரர்களைப் பார்த்து அனைவரும் மிக மகிழ்ந்தனர். அனைவரின் கண்களிலும் ஆனந்த்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. உடல் புல்லரித்தது.
ராமரின் இனிய அழகான தேகத்தைக் கண்டு
ஜனகர் தன் மெய்மறந்து போனார்.
மனது அன்பால் மூழ்கியது கண்டு ஜனகர் தன் விவேகத்தால் தைரியமாக்கிக் கொண்டு
முனிவரை வணங்கி ஆனந்தக்குரலில் சொன்னார் ---
"முனிவரே ! சொல்லுங்கள். இந்த இருவரும் முனிகுலத்தின்
ஆபரணங்களா ? அல்லது அரச வம்ச பாலகர்களா?
வேதங்களில் புகழப்பட்ட பிரம்மனே இரட்டை சகோதரர் களாக வந்துள்ளனரா ?
என்னுடைய வைராக்கியமான மனம் இவர்களைப் பார்த்ததும் நிலவைக்கண்டு மகிழும் சகோரப்பறவை
போன்று மகிழ்கிறது. முனிவரே! மிகவும் ஆவலுடன் கேட்கிறேன். இவர்கள் யார் என்பதை மறைக்காமல் சொல்லுங்கள்.
இவர்களைப் பார்த்ததும் என் மனம் பிரம்ம சுகத்தை பெற்றுள்ளது.
முனிவர், "அரசே! நீங்கள் சொன்னது சரியே! உங்கள் வாக்கு பொய்யாகாது. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இவர் மிக அன்பானவர்.
முனிவர் சொல் கேட்டு ராமர் மனதிற்குள் புன்னகை பூத்தார்.
அவர் முனிவரிடம் ரகசியத்தை சொல்லவேண்டாம் என சமிக்ஞை செய்தார்.
அப்பொழுது முனிவர் சொன்னார் ,"இவர்கள் ரகுகுல திலகர் தசரதரின் புத்திரர்கள். என் நன்மைக்காக என்னுடன் அனுப்பியுள்ளார்.
இவர்கள் ராமனும் லக்ஷ்மணனும் ஆவார்கள்.
நல்லொழுக்கமும் வீரமும் பலமும் பெற்றவர்கள்.
இவர்கள் அரக்கர்களை வதம் செய்து என்னுடைய வேள்வியை காப்பாற்றயுள்ளனர். இதற்கு இந்த வையகமே சாக்ஷி.
உங்களுடை தரிசனத்தால் நான் மிகவும் புன்னியவானானேன். கருப்பும் வெள்ளையும் உள்ள இரண்டு சகோதரர்களும் ஆனந்தத்திற்கே ஆனந்தம் அளிப்பவர்கள்.
இவர்களுடைய பரஸ்பர அன்பு மிகவும் புனிதமானது. மிகவும் அழகானது. அது மனதை மிகவும் கவர்கிறது.
அதை சொற்களால் சொல்ல முடியாது.
பிரம்மா -ஜீவன் போன்று இவர்களுடைய அன்பு இயற்கையானது.
ஜனகர் அடிக்கடி பிரபுவைப் பார்த்து ஆனந்தமடைகிறார்.
முனிவரைப் புகழ்ந்து வணங்கி அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு அழகான மாளிகையில் முனிவரை தங்கவைத்தார் .
அது சகல வசதியும் மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது.
பிறகு அனைத்துவிதமான பூஜைகள் செய்து அரசர் விடைபெற்றார்.

No comments:
Post a Comment