ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தொன்பது
சதி உயிர்த்தியாகம் செய்ததிலிருந்து
சிவபகவானின் மனதில் வைராக்கியம் வந்துவிட்டது.
அவர் சதாசர்வகாலமும் ராமரை ஜெபிக்கத் துவங்கினார்.
அங்கு இங்கு எங்கு சென்றாலும் இராமரின் குணங்களின்
கதைகள் கேட்கத் துவங்கினார்.
சிதானந்தரும், சுகத்தின் இருப்பிடமும, மோகம் ,
ஆணவம் , காமமும் இல்லா சிவபகவான் ,
அனைத்து உலகிற்கும் ஆனந்தம் தருகின்ற ,
பகவான் இப்பொழுது ராமரை இதயத்தில் வைத்து
ஜபம் செய்துகொண்டே பூமியில்
சுற்றத் தொடங்கினார்.
அவர் சில இடங்களில் முனிவர்களுக்கு
ஞானோபதேசம் செய்வார்.
சில இடங்களில் ராமரின் புகழை வர்ணிப்பார்.
பகவான் சிவன் எந்தவித பலனையும் எதிர்பார்க்காதவர்.
இருந்தாலும் தன் பக்தனின் பிரிவுத் துன்பத்தால் ,
துக்கப்படவராக இருந்தார்.
இவ்வாறு நீண்ட காலம் கழிந்துவிட்டது.
ராமரின் சரணங்களில் நித்தம் புதிய அன்பு உண்டாகியது.
சிவபகவானின் கடின நியமங்கள்,
அவர் இதயத்தின் ஆழ்ந்த அன்பு ஆகியவற்றை
ராமர் கவனித்தார்.
நன்றியுள்ள , கிருபை நிறைந்த , ,
குணக்கருவூலமான, மிக சக்திவாய்ந்த ராமர்
காட்சி அளித்தார்.
ராமர் பலவிதங்களில் சிவபகவானை புகழ்ந்தார்.
உங்களைத்தவிர வேறு யாரும் இப்படிப்பட்ட
விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாது.
ராமர் பலவிதங்களில் சிவபகவானுக்கு விளக்கினார்.
பார்வதியின் பிறப்பைப் பற்றி சொன்னார்.
கிருபையின் பொக்கிஷமான ராமர்
பார்வதியின் மிகவும் புனிதமான செயலைப் பற்றி கூறினார்.
பிறகு சிவனிடம் சொன்னார்:-
என்னிடம் மிகுந்த அன்பு இருந்தால்,
என்னுடைய வேண்டுகோளைக் கேளுங்கள்.
நீங்கள் பார்வதியை மணந்து என் கோரிக்கையை
நிறைவேற்றுங்கள்.

No comments:
Post a Comment