Thursday, January 5, 2017

रामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது.

रामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது.


   ராமர் கூறியதை ஏற்று சிவன் சொன்னார் ,
 இது தகுந்த செயலல்ல. ஆனால்
 நீங்கள் சொல்வதை  மறுக்க முடியாது.
உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு அதை
பின் பற்றுவது  எனது  மேலான கடமை.

தாய், தந்தை, குரு ஆகியோரின் கட்டளையை
 சிந்திக்காமலேயே சுபமானது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் நீங்கள் எனக்கு அனைத்துவிதத்திலும்
நன்மை அளிப்பவர். என் நலம் விரும்புபவர்.
நான் உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறேன்.

சிவபகவானின்  பக்தி ,ஞானம், தர்மசிந்தனையுடான  வாக்கு ,
ஆகியவற்றைக்கேட்டு  ஸ்ரீ ராமர் மிகவும் திருப்தி அடைந்தார்.
ராமர்  சொன்னார் -- உங்களுடைய பிரதிக்ஞை  முடிந்துவிட்டது.
இப்பொழுது நான்  சொன்னதை  மனதில் வைத்துக்கொள்ளவும் .
இதைக்  கூறியதும்  ராமர்  மறைந்துவிட்டார்.
சிவபகவன் ராமரின் உருவத்தை மனதில் பதிந்து கொண்டார்.

அப்பொழுதே சப்தரிஷிகள் சிவபகவானிடம் வந்தனர்.
அவர்களிடம் மென்மையாகக் கூறினார் ;-
நீங்கள் பார்வதியிடம்  சென்று  அவரின் அன்பை சோதியுங்கள்.
ஹிமவானை பார்வதியை அழைத்துவர அனுப்புங்கள்.
பார்வதியின் சந்தேகத்தைப் போக்குங்கள்.
 சப்தரிஷிகள் அங்கு  சென்று தவமே உருவெடுத்தது போன்று
தவத்தில் ஈடுபட்ட பார்வதியைப் பார்த்தனர்.
 முனிவர்கள்  அவரிடம்  கேட்டனர் ;-
மலைமகளே! நீ ஏன் இப்படி கடினமான தவம்
செய்துகொண்டிருக்கிறாய் ?
நீ யாரை ஆராதனை செய்கிறாய்?
என்ன விரும்புகிறாய் ?
எங்களிடம் உன் உண்மையான ரகசியத்தை ஏன் சொல்லவில்லை ?

பார்வதி தேவி சொன்னாள்:-
 என் தவ விஷயம் சொல்ல என்  மனம் வெட்கப்படுகிறது.
நீங்கள் என் முட்டாள்தனத்தைக் கேட்டு சிரிப்பீர்கள்.
மனம் பிடிவாதம் செய்கிறது. தண்ணீரில் சுவர் எழுப்ப விரும்புகிறது.
நாரதர் சொன்னதை சத்திய வாக்காக  கருதி ,
இறக்கைகட்டி  பறக்க விரும்புகிறேன்.

நான் சிவனையே கணவனாக விரும்புகிறேன்.
 என் அறியாமையைப் பாருங்கள்.
பார்வதியின்  வார்த்தைகளைக்கேட்டு  முனிவர்கள் சிரித்தனர்.
 உன் உடல் மலையால் உருவானது.
நாரதரின் உபதேசம் கேட்டு யாருடைய வீட்டில் வசிக்கிறாய் ?

அவர் தக்ஷனின் மகன்களுக்கு உபதேசம் செய்தார்.
அவர்கள் திரும்பிவரவில்லை.
சித்திரகேதுவின்  வீட்டை அவர்தான் அழித்தார்.
இதே நிலைதான்  ஹிரண்ய கஷ்யபுவிற்கு  ஏற்பட்டது.

நாரதர் உபதேசம் கேட்ட ஆண்களும் பெண்களும்
 வீட்டைவிட்டு வெளியேறி
பிச்சைக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
அவர் மனம் கபடமானது. உடலில் நல்லவர்களின் தோற்றப்பொலிவு.
அவர் அனைவரையும் தன்னைப்போலவே ஆக்க விரும்புகிறார்.
 அவரின் பேச்சை நம்பி
 வருத்தமான எல்லாவற்றியும் அலட்சியம் செய்கின்ற,
குணமற்ற,வெட்கமில்லாத, கெட்ட வேடமுள்ள ,
மனித மண்டை ஓடுகளை மாலையாய் அணிந்த ,
குலமற்ற , வீடுவாசல் இல்லாத, உடலில் பாம்பை சுற்றிவைத்திருக்கிற
நிர்வாணமான சிவனை  கணவனாக அடைய விரும்புகிறாய்.
இப்படிப்பட்ட வரனை அடைவதால் உனக்கு என்ன சுகம் கிடைக்கும்?
நீ அந்த மோசக்காரனின் தூண்டுதலால் தவறு செய்கிறாய் .
முதலில் பஞ்சாயத்தார் சொன்னதால் சதியை திருமணம் செய்தார்.
ஆனால் அவரை கைவிட்டு கொன்றுவிட்டார்.

இப்பொழுது சிவனுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.
பிச்சை எடுத்து சாப்பிடுகிறார். ஆனந்தமாக துயில்கிறார்.
இப்படிப்பட்ட தனிமையில் வசிக்கின்ற வருடன்  மனைவி  இருக்கமுடியுமா ?
நாங்கள் சொல்வதைக்கேள். உனக்காக நல்லவரனைப் பார்த்துள்ளோம்.
அவன் அழகன்.
சர்வ வல்லமை படைத்தவன்.
 பரிசுத்தமானவன்.
சுகமளிப்பவன்.
நல்ல ஒழுக்கம் உடையவன்.
அவனுடைய புகழையும் லீலைகளையும் வேதங்கள் பாடுகின்றன.
 அவன் குற்றமற்றவன்.
அவன் எல்லா நற்பண்புகளையும் கொண்டவன்.
வைகுண்டத்தில் இருப்பவன். லக்ஷ்மியின் கணவன்.
இப்படிப்பட்ட  வரனை அழைத்துவந்து உன்னுடன் சேர்த்துவிடுவோம்.

இதைக்கேட்ட மலைமகள், ஆம் ,நான் மலையிலிருந்து தோன்றியவன் .
என் பிடிவாதத்தை விடமாட்டேன். உடல் அழியட்டும். கவலை இல்லை.
தங்கமும் கல்லில் இருந்துதான் தோன்றுகிறது.
நெருப்பில் புடம் போட்டாலும் அது தன குணத்தை விடுவதில்லை.
அதனால் நான் நாரதர் கூறியபடி தான் இருப்பேன்.
அதை விடமாட்டேன்.
வீடு அமைந்தாலும் சரி, பாழடைந்தாலும்  சரி ,
நான் இதற்கு அஞ்சவில்லை.
குருவின் வாக்கில்  நம்பிக்கை இல்லை என்றால் ,
அவனுக்கு சுகமும் சாந்தியும் , வெற்றியும் கனவிலும் கிட்டாது.

மகாதேவர் தீய குணங்களின் பவனம்.
விஷ்ணு அனைத்து  குணங்களின் இருப்பிடம்.
ஆனால் மனம் எதில் ஈடுபடுகிறதோ, அதில் தான் அதற்கு சுகம்.
முனிவர்களே! நீங்கள் முதலிலேயே சந்தித்திருந்தால் ,
உங்கள் கூற்றை  ஏற்பேன்.
நான் இப்பிறவியில் சிவனை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
ஏற்றபின்  குணம் -குற்றங்களை அறிந்து எண்ணி என்ன பயன் ?

உங்கள் மனது பிடிவாதமாக  இருந்து திருமணம் செய்ய விரும்பினால்
உலகில் எத்தனையோ வரன்கள்-வதுக்கள் இருக்கின்றனர்.
விளையாடுபவர்களுக்கு சோம்பேறித்தனம் இருக்காது.
வேறு எங்காவது சென்று விளையாடுங்கள்.

எனது கோடி பிறவிகளிலும் சிவனையே மணந்து கொள்வேன் . இல்லையெனில்  குமரியாகவே  இருந்துவிடுவேன்.
சிவனே வந்து நூறுதடவை சொன்னாலும்
நாரதரின் உபதேசத்தை விடமாட்டேன்.
 நான் உங்களின் கால்களில் விழுகிறேன்.
நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.
மிகவும் நேரமாகிவிட்டது.
பார்வதியின் சிவனிடத்தில் உள்ள அன்பு கண்டு கேட்டு ,
முனிவர்கள் சொன்னாற்கள்:--
உலகமாதாவே!நீங்கள் வாழ்க!வாழ்க!
ஜெயம் உண்டாகட்டும்.
நீங்கள்  மாயை. சிவன் பகவான்.
நீங்கள் இருவரும் அனைத்து உலகங்களுக்கும்
தாய் -தந்தையர்கள். முனிவர்கள் முனிவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தனர்.
பார்வதிதேவியின் பாதங்களை வணங்கிவிட்டு சென்றனர்.
 முனிவர்கள் ஹிமவானை பார்வதியை அழைத்துவர அனுப்பிவிட்டு
பிறகு சிவனை சந்தித்து  பார்வதியின் நிலையைக் கூறினர்.

பார்வதியின் அன்பைக் கேட்டதுமே ,
 சிவபகவான் ஆனந்தசாகரத்தில்
மூழ்கிவிட்டார்.
சப்தரிஷிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் பிரம்மலோகத்திற்குத் திரும்பிச்சென்றனர்.
சிறந்த சிவன்  மனதை நிலைப்படுத்தி ராமரின்  தியானத்தில் ஈடுபட்டார்.

No comments: