Tuesday, January 3, 2017

रामचरित मानस ராமசரித மானஸ்- பாலகாண்டம் -இருபத்தேழு

       மைனா தன் கணவரிடம் சொன்னார் :-
                 தகுந்த வரம் கிடைக்கவில்லை என்றால் மலையின் இயற்கை குணமே ஜடம்தான்.இதை எண்ணி திருமணம் செய்யுங்கள். பின்னர் வருந்தவேண்டிய நிலை ஏற்படும். இதை சொல்லி கணவரின் காலில் விழுந்தாள் . அப்பொழுது ஹிமவான் சொன்னார் :-
  " நிலவில் நெருப்புகூட  உண்டாகலாம் , ஆனால் நாரத முனிவரின் வாக்கு
       பொய்யாகாது ."
அன்பே! கவலையை விட்டுவிட்டு இறைவனின் நினை.
பார்வதியை  படைத்தவர்  நல்லதே  செய்வார்.
மகளின் மேல் அதிக அனுப்பு இருந்தால் , அவளிடம்
 சிவன்  கிடைக்க  கடும்  தவம் செய் என்று சொல்.
மற்ற  வழிகளினால்   இந்த மனக்கிலேஷம் போகாது.

நாரதரின் இந்த  வாக்கு , ரஹசியத்துடனும்

தகுந்த  காரணத்துடன்  கூடியது.
சிவபகவான் அனைத்து  குணமும் கொண்ட அழகுக் குன்று.
இதை எண்ணி  பொய்யான  சந்தேகத்தை விட்டு விடு.
சிவன் அனைத்து விதத்திலும்  களங்கமற்றவர்.

கணவனின் ஆறுதலான சொல் கேட்டு , மனமகிழ்ச்சியுடன் மகள்
பார்வதியிடம்  சென்றாள் .
 மகளைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வடிந்தது.

அவளை அன்புடன் மடியில் வைத்துக்கொண்டார்.

மீண்டும் மீண்டும் தழுவினாள்.
ஜகத்ஜனனி  பவானி அனைத்தும் அறிந்தவள்.
அம்மாவின் மனநலன் புரிந்து கொண்டு
அவளை மகிழ்விக்க மென்மையாக சொன்னாள்:-
   அம்மா! நான் ஒரு கனாகண்டேன். அதில் ஒரு
அழகான வெள்ளை நிற அந்தணர் கீள்க்கண்ட  உபதேசம் செய்திருக்கிறார் :-
அப்பொழுது தாய் மகளிடம் சொன்னாள்:-
நாரதரின் வாக்கை  சத்தியவாக்காக கருதி ,
நீ கடும் தவம் செய். உன் பெற்றோர்களுக்கும் அவர் வாக்கு
நல்லதாகவே தோன்றுகிறது.
தவம் சுகமளிக்கக் கூடியது.
துன்பத்தைப் போக்கவல்லது.
தவ வலிமையினால் தான் பிரம்மா உலகைப் படைக்கிறார்.
தவ வலிமையால் தான் விஷ்ணு உலகைக் காக்கிறார்.
தவ வலிமையினால்தான் சம்பு ருத்ர ரூபத்தில் சம்ஹாரம் செய்கிறார்.
தவ வலிமையால்  தான் சேஷன்  உலகின் சுமை  சுமக்கிறார்.
பவானி! படைப்புகளெல்லாம் தவத்தின் அடிப்படையில் தான் .
இதை மனதில் ஏற்று நீ தவம் செய்.
இதைக்கேட்டு  அம்மாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவர் ஹிமவானை அழைத்து மகளின்  கனவைக் கூறினாள்.
பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறி , பார்வதி தேவி
தவம் செய்ய புறப்பட்டாள்.

அன்புள்ள குடும்ப உறுப்பினர்கள் , பெற்றோர்கள் எல்லோரும்
வியாகூலம் (கவலை)அடைந்தனர். அனைவரும் மௌனமானார்கள்.
அப்பொழுது வேத ஞானியான முனிவர் வந்து பார்வதிதேவியின்
மகிமைகளைக்  கூறி எல்லோருக்கும் ஆறுதல்  அளித்தார்.



No comments: