Tuesday, January 3, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு . (துளசிதாஸ் )

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு .

  நாரதர்   பார்வதி பிறந்த பூமியின் செய்திகேட்டு
 குதுகூலமாக ஹிமாச்சலத்திற்கு   வந்தார்.
பர்வதராஜர்  அவரை மிகவும்
மரியாதையுடன்  வரவேற்றார்.
அவரின் கால் களை  கழுவி
நல்ல ஆசனத்தில் அமரவைத்தார்.
பிறகு மனைவியுடன் சேர்ந்து வணங்கினார்.
அவரின் பாதங்கள்  கழுவிய  நீரை  வீட்டில் தெளித்தார்.
ஹிமாச்சல் தன்  பாக்யத்தை வர்ணித்து ,
தன் மகளை அவர் பாதங்களில்  போட்டார்.
முனிவரே!  நீங்கள் முக்காலமும் அறிந்தவர்.
எல்லாமும் அறிந்தவர். உங்களால் அனைத்து
இடமும் செல்ல முடியும் .
அதனால்  நன்கு பார்த்து பெண்ணின்
குண தோஷங்களை சொல்லுங்கள்.

நாரதர் சிரித்து  ரஹசியத்துடன்
மென்மையான  குரலில் சொன்னார் :-
உன் மகள் நல்ல குணவதி.
 இயற்கையிலேயே அழகும், நல்லொழுக்கமும் ,
அறிவும் உள்ளவள். குணங்களின் சுரங்கம்.
உமா,அம்பிகா, பவானி ஆகியவை இவளுடைய பெயர்கள்.

உங்கள் பெண் எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவள்.
தன்  கணவனுக்கு மிக அன்பானவள்.
இவள் தீர்க்க சுமங்கலி.
இவளால் இவளின் பெற்றோர்கள்  புகழ் பெறுவார்கள்.
 வையகம் முழுவதும் புகழ் பெறுவார்.
இவளுக்கு சேவை செய்தால் கடினம் எதுவும் இல்லை.
செய்யமுடியாதது எதுவும் இல்லை.
உலகில் பெண்கள்   இவரின் நாம ஜபம் செய்து பதிவிரதை  ஆவார்கள்.

ஹே  பர்வத ராஜனே!
 உன் மகள் நல்ல லக்ஷணம் பொருந்தியவள்.
இவளின்  கணவன்  குணமற்றவன்,
 மானம் இல்லாதவன்,
பெற்றோர் இல்லாதவன் ,
வருத்தமானவன் ,
அலக்ஷியமானவன்,
 யோகி,ஜடாமுடி உள்ளவன் ,
நிர்வாணமாக இருப்பவன், அமங்கலமான  வேடதாரி ,.
இவள்  கைரேகை அப்படித்தான் சொல்கிறது.
 நாரதமுனிவரின்  வார்த்தைகளைக் கேட்டு ,
அதை உண்மை என அறிந்து ,
ஹிமவானுக்கும் மைனாவிற்கும்
மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனால்நா பார்வதி தேவி மனதிற்குள்
மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
 வேறு யாரும்  இந்த ரகசியத்தை அறியவில்லை.
நாரதருக்கும் தெரியாது.
எல்லோரின் வெளி நிலை
  ஒரே மாதிரியாக  இருந்தாலும்
உள்ளறிவு வேறுபட்டது.
தோழிகள்,பார்வதி, மலையரசன் ஹிமவான் ,
எல்லோரும் ஆனந்தமாகவும் வருத்தமாகவும் இருந்தனர்.
பர்வதகுமாரி எதிர்கால கணவனின்  நிலை கேட்டு
கண்ணீர் வடித்தனர்.
தேவரிஷி நாரதரின் வாக்கு பொய்யாகாது.
இதை நினைத்து பர்வதகுமாரி அந்த நாரதர் கூற்றை
மனதில் ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சிவனின்    சரண கமலங்களில் அன்பு அதிகரித்தது.
ஆனால் அவர் கிடைப்பது கடினம்    என்ற ஐயம் மனதில்
எழுந்தது.
சந்தர்ப்பம் சரியில்லாததால்   தன்  அன்பை மனதில்
மறைத்துக்கொண்டு  தோழியின் மடியில் சென்று
அமர்ந்தார்.
தேவரிஷியின் வாக்கு பொய்க்காது என
ஹிமவான், மைனா  மற்றும் எல்லா புத்திசாலி  தோழிகள்
கவலைப்  பட்டனர்.
பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டு
 பர்வதராஜர்    என்ன செய்யலாம்?
வேறு உபாயம் என்ன ? என்று வினவினார்.
 முநீஸ்வரரான  நாரதர் சொன்னார் :-
பிரம்மா தலையில் எழுதியதை யாராலும் மாற்றமுடியாது.
தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், நாகர்கள்,முனிவர்கள்
யாரும் தலையெழுத்தை  அழிக்க முடியாது.
ஒரே உபாயம்  தான். தெய்வம்  விரும்பினால்
சித்திபெற  முடியும்.
நான் வர்ணித்தபடிதான்  வரன் உமாவிற்கு கிடைக்கும்.
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் நான் சொன்ன  வரனின் குறைகள்
 எல்லாம் சிவனிடம் உள்ளன.
சிவனுடன் திருமணம் செய்தால்
சிவனின் தோஷங்களும்  குணமாகவே சொல்வார்கள்.
விஷ்ணு ஆதிஷேசன் என்ற பாம்பை படுக்கை ஆக்கினாலும்
பண்டிதர்கள் யாரும் குறை சொல்வதில்லை.
சூரியனும் அக்னி தேவனும் நல்லவை தீயவை இரண்டையும்
ஏற்றாலும் அவர்களை யாரும் குற்றமாக  கருதுவதில்லை.
கங்கையில் நன்னீரும் கழிவுநீரும் கலந்தாலும் அதை
புனிதமற்றது என  யாரும் கூறுவதில்லை.

முட்டாள் மனிதர்கள்  ஞானத்தின் கர்வத்தால் , இவ்வாறு
போட்டியிட்டால் பல   யுகங்களுக்கு  நரகத்திலேயே இருப்பார்கள்.
ஜீவராசிகள் கடவுளுக்கு சமமாக முடியுமா ?
கங்கை ஜலத்தால்  செய்யப்பட்ட   மதுவை
சாதுக்கள் அறிந்தால் அருந்தமாட்டார்கள்.
ஆனால் அதே கங்கையில் கலந்தால் பவித்திரமாகிவிடுகிறது.
கடவுளுக்கும் ஜீவனுக்கும் அப்படியே வேறுபாடு உள்ளது.

சிவபகவான்  இயற்கையாகவே ஞானமுள்ளவர்.
அதனால் இந்த திருமணத்தால் நல்லதே நடக்கும்.
மகாதேவனை  ஆராதிப்பது கடினம்.
ஆனால் தவம் செய்தால் அவர் மிகவும் சீக்கிரமாக
திருப்தி அடைந்துவிடுவார்.

உன் மகள் தவம்  செய்தால் ,
திரிபுராரி மகாதேவரை கெட்டிக்காரரை விட்டுவிட முடியும்.
உலகில் வரன்கள்  அதிகம். ஆனால் இவளுக்கு சிவனைத்தவிர
வேறு  வரன்  கிடையாது.

சிவபகவான்  வரம் அளிப்பவர்.
சரணடைந்தவர்கள்   துன்பத்தைப்
போக்குபவர்.
கிருபைக் கடல், தொண்டர்கள் மனதை மகிழ்விப்பவர்.
சிவபகவானின் ஆராதனை செய்யாமல்,
கோடிக்கணக்கான யோகமும்  ஜபமும் செய்தாலும்
விரும்பிய  பலன்  கிடைக்காது.
இப்படி சொல்லி இறைவனை ஜபித்து நாரதர் ஆசிர்வாதம்  செய்தார்.
பர்வதராஜரே!நீ சந்தேகத்தை விட்டுவிடு.  இறைவன்  நல்லதே செய்வார்.
இவ்வாறு கூறிவிட்டு  நாரதமுனிவர் பிரம்மலோகத்திற்குச்
சென்றுவிட்டார்.
இனிமேல் நடந்ததைக் கூறுகிறேன் கேள்.
கணவனை தனிமையில் பார்த்து மைனா --நாதா!
நாரதர் சொன்னது எதுவும் புரியவில்லை என்றாள்.
நமது பெண்ணிற்கேற்ற வீடு,குலம், வரன்
உத்தமமாய் இருந்தால் திருமணம் செய்யுங்கள்.
நமது பெண் பார்வதி எனக்கு உயிருக்கும் மேலாக
பிரியமானவள்.
நான் ஒரு தகுதியற்றவனுடன்
அவள் திருமணம் செய்வதை விரும்பவில்லை.

No comments: