ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --இருபத்தெட்டு
பிராண பதியான சிவனின் பாதங்களை இதயத்தில் வைத்து
வணங்கி பார்வதி வனத்தில் தபம் செய்யச் சென்றார்.
பார்வதியின் மிக அழகான மென்மையான உடல்
தவம் பண்ண தகுதியற்றது. இருந்தாலும்
கணவனின் பாதங்களை நினைத்து எல்லா
சுகங்களையும் தியாகம் செய்துவிட்டார்.
சுவாமியின் சரணங்களில் தினம் புதிய அனுராகங்கள்
உண்டாகியது. தன் மெய் மறந்து தாபத்தில் ஈடுபட்டார்.
ஓராயிரம் ஆண்டுகள் வரை வெறும்
பழங்களும் கிழங்குகளும் சாப்பிட்டார்.
பிறகு நூறாண்டுகள் காய்கறிகள் மட்டுமே
சாப்பிட்டு நாட்களை கழித்தார்.
சில நாட்கள் தண்ணீரும் காற்றுமே உணவாகின.
சில நாட்கள் கடுமையான உபவாசம் .(பட்னியாக ) இருந்தாள்.
மூவாயிரம் ஆண்டுகள் உதிர்ந்த இலைகளை சாப்பிட்டார்.
பிறகு காய்ந்த இலைகள் சாப்பிடுவதையும் விட்டுவிட்டார்.
அதனால் தான் பார்வதியின் பெயர் அபர்ணா என்றாகியது.
தவத்தின் காரணமாக மெலிந்த உமாவின் உடல் பார்த்து ஆகாயத்தில் இருந்து கம்பீரமான இறைவனின் குரல் வந்தது.
பர்வத ராஜ குமாரியே! கேள் .
உன்னுடைய மனவிருப்பம் வெற்றிபெற்றுவிட்டது.
இப்பொழுது எல்லா பொறுக்கமுடியாத இன்னல்களை விட்டு விடு.
இப்பொழுது உனக்கு சிவபகவான் கிடைப்பார்.
ஹே பவானி ! தீரர்கள் , முனிவர்கள் ஞானிகள் தோன்றினர்.
ஆனால் இப்படிப்பட்ட தவம் யாரும் செய்யவில்லை.
இப்பொழுது நீ இந்த மென்மையான
பிரம்மாவின் வாணியை எப்பொழுதும் சத்தியம் நிரந்தரமான
பவித்திரமாக அறிந்து உன் இதயத்தில் வைத்துக்கொள்.
உன்னை உன் தந்தை அழைக்க வந்தால் பிடிவாதத்தை விட்டுவிட்டு
வீட்டிற்குச்செல். உன்னை சப்த ரிஷிகள் சந்திப்பார்கள்.
அப்பொழுது இந்த அசரீரி உண்மை என தெரிந்துகொள்.
ஆகாயத்தில் இருந்துவந்த பிரம்மாவின் குரல் கேட்டதுமே ,
பார்வதி மிகவும் மகிழ்ந்தாள். யாக்யவல்கியர் பரத்வாஜரிடம் சொன்னார் :-
நான் இப்பொழுது பார்வதியின் அழகான கதை சொன்னேன்.
இப்பொழுது சிவனின் கதை கேள்.

No comments:
Post a Comment