ராமசரித மானஸ்--பாலகாண்டம் -௪௪ .நாற்பத்திநான்கு
கலகப்பிரியரும் விளையாட்டு முனிவருமான
நாரதர் அந்த நகருக்கு வந்தார்.
அங்கு அனைவரிடத்திலும்
எல்லா நிலையையும் கேட்டார்,
எல்லா செய்திகளும் கேட்டுவிட்டு
அரண்மனைக்கு வந்தார்.
அரசர் அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தினார்.
பின்னர் தன மகளை அழைத்துவந்து நாரதரிடம் காட்டி
மகளின் குணநலன்கள் பற்றி கேட்டார்.
அவளின் அழகைக்கண்டதும்
நாரதர் தன வைராக்கியத்தை மறந்து
அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவளுடைய சாமுத்ரிகா லக்ஷணம் கண்டு
முனிவர் தன் நிலை மறந்தார். மனதில் மிக மகிழ்ந்தார்.
வெளிப்படையாக அவள் லக்ஷணங்களைக் கூறவில்லை.
அவர் மனதிலேயே நினைத்தார் ,
இவளை மணப்பவன் ,
மரணமடைய மாட்டான்.
போர்க்களத்தில் அவனை யாரும் வெல்லமுடியாது.
ஷீல்நிதியை மணப்பவனுக்கு
அனைவரும் சேவை செய்வர்.
எல்லா லக்ஷணங்களையும் சிந்தித்து
அறிந்து முனிவர் அவைகளை தன்
மனதிலேயே வைத்துக்கொண்டார்.
சில லக்ஷணங்களை கற்பனையால்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மனதில் இதையே நினைத்தார் --
எப்படியாவது இவளை நானே மணந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஜபதவத்தால் எதுவும் நடக்காது.
ஆண்டவா!இந்தப்பெண் எனக்கு எப்படி கிடைப்பாள்.
இப்பொழுது எனக்கு அதிக அழகும் ,
உயரமும் கம்பீரமும் வேண்டும்.
ராஜகுமாரி என்னை விரும்பி மாலையிட வேண்டும்.
நாரதர் இறைவனிடம் அழகான தோற்றம்
கேட்டுப் பெற விரும்பினார்.
ஆனால் பகவான் வெகு தொலைவில் உள்ளார்.
ஆனால் ஹரியைப்போன்று
எனக்கு நன்மை அளிப்பவர் யாரும் இல்லை.
ஆகையால் இப்பொழுது
அவர்தான் எனக்கு உதவியாளர்.
அந்தசமயம் அவர் பகவானை மிகவும் வேண்டினார்,
அப்பொழுது மாயைகளும் லீலைகளும் செய்யும்
ஆண்டவன் தோன்றினார்.
பகவான் ஹரியைக் கண்டதும்
நாரதர் மிகவும் மகிழ்ந்தார்.
தனது விருப்பம் நிறைவேறும் என்று நினைத்தார்.
அவர் கண்கள் குளிர்ந்தன.
நாரதர் மிகவும் வருத்தத்துடன் அனைத்து
கதையையும் சொன்னார்.
தனக்கு உதவும்படி வேண்டினார்.
பிரபு! எனக்கு உங்கள் அழகைத் தாருங்கள்.
நான் எப்படியாவது அந்த ராஜகுமாரியை
அடையவேண்டும் என்றார்.
எனக்கு பயன் அளிக்க சீக்கிரம் உதவுங்கள்,
நான் உங்களின் தாசன்.
தன் மாயையின் மிகப்பெரிய பலத்தை நினைத்து
ஹரி பகவான் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
நாரதரே ! உங்களுக்கு அதிக நன்மை
ஏற்படும் படியே செய்வேன்.
வேறு எதுவும் செய்யமாட்டேன்.
என்வாக்கு பொய்யாகாது.
முனிவரே! யோகியே! நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ,
பத்தியத்தை முறிக்க மருந்து கேட்டாள், மருத்துவர் தரமாட்டார்.
இவ்வாறே உனக்கு நன்மை செய்ய நிச்சயித்து விட்டேன்.
இவ்வாறு கூறி இறைவன் மறைந்துவிட்டார்.
மாயையின் வயப்பட்ட முனிவர், முட்டாளாகிவிட்டார்.
இறைவனின் தெளிவான சொல்லையும் புரிந்துகொள்ளவில்லை.
ரிஷிராஜ் நாரதர் சுயவரம் நடந்த மண்டபத்திற்குச் சென்றார்.
அரசர்கள் தங்களை மிகவும் அலங்கரித்துக்கொண்டு ,
தங்கள் பரிவாரங்களோடு தங்கள்
தங்கள் ஆசனத்தில்
அமர்ந்திருந்தனர். .
நாரதர் தன்னை மிகப் பெரிய அழகன் என்றும் ,
ராஜகுமாரி தனக்குத்தான் மாலை இடுவாள் என்றும் நம்பி
மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்.
ஆனால் பகவான் மிகவும் கருணையுடன் முனிவரின்
நலனுக்காக அவர் தோற்றத்தை மிகவும் அசிங்கமாக்கிவிட்டார்.
அந்த அழகற்ற தோற்றத்தை யாரும் வர்ணிக்க முடியாது.
எல்லோரும் அவரை நாரதர் என்றே வணங்கினர்.
அங்கே இரண்டு சிவ -கணங்கள் நாரதரை கண்காணித்துவந்தனர்.
அவர்கள் எல்லா ரஹசியத்தையும் அறிந்திருந்தனர்.
அவர்கள் அந்தணர் வேடத்தில் வந்திருந்தனர்.
அவர்கள் மிகவும் நகைச்சுவையாக இருந்தனர்.
நாரதர் மிகவும் கர்வத்துடனும் நம்பிக்கையுடனும்
எங்கு உட்கார்ந்தாரோ ,
அங்கே இந்த இரண்டு சிவகணங்களும் அமர்ந்தனர்.
அந்தணர் வேடத்தில் இருந்ததால்
அவர்களின் நாடகம் யாருக்கும்
புரியவில்லை.
அவர்கள் நாரதர் காதில் படும்படியாக
பரிகாசமாகப் பேசினார்கள்.
கடவுள் இவருக்கு நல்ல அழகாய் கொடுத்திருக்கிறார் .
இவர் அழகைக்கண்டு ராஜகுமாரி காதல்கொள்வாள்.
இவரை வானரர் !(ஹரி ) என்றறிந்து தேர்ந்தேடுத்துவிடுவாள்.
நாரதர் மாயையில் வசத்தில் கட்டுண்டுடதால்
சிவகணங்களின் கேலியை தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை.
அறிவு மயங்கிய மோகநிலையில் இருந்தார். அவர்கள் இவரைப்
புகழ்வதாகவே நினைத்தார்.
அரசகுமாரி மட்டுமே அந்த நாரத
உருவத்தைப் பார்த்தார்.
அவருடைய முகம் குரங்குமுகமாக இருந்தது.
உடல் பயங்கரமாக இருந்தது.
கன்னியின் இதயத்தில் கோபம் உண்டாகியது.
கையில் வைரமாலை எடுத்துக்கொண்டு
தோழிகளுடன்
அன்னப்பறவைபோல் நடந்து
அரச குமாரர்களை கண்கள் நோட்டமிட்டன.
நாரதர் அழகின் கர்வத்தால் துடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ராஜகுமாரி திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவரின் நிலைகண்டு சிவகணங்கள் சிரித்தன.
பகவானும் அரச வேடத்தில் அங்கு வந்தார்.
ராஜகுமாரி மகிழ்ந்து
அவருக்கு வரமாலை அணிவித்தாள்.
லக்ஷ்மி நிவாசன் ராஜகுமாரியை அழைத்துச் சென்றார்.
அரசர்கள் கூட்டம் நிராசை அடைந்தது.
மோகத்தின் காரணமாக முனிவரின் அறிவு மழுங்கிவிட்டது.
அரசகுமாரி சென்றதும் அவர் மிகவும் வருந்தினார்.
அப்பொழுது சிவகணங்கள் அவரிடம் ,
நீங்கள் சென்று கண்ணாடியில்
உங்கள் முகம் பாருங்கள் என்றனர்.
இப்படி சொல்லிவிட்டு அவர்கள் பயந்து ஓடினார்கள்.
முனிவர் தண்ணீரில் எட்டி தன் முகத்தைப் பார்த்தார்.
தன் உருவத்தை பார்த்ததும் முனிவரின் கோபம் அதிகரித்தது.
அவர் சிவகணங்களுக்கு கடுமையான சாபம் இட்டார்.
நீங்கள் இருவரும் கபடமானவர்கள் . பாவிகள்.
நீங்கள் ராக்ஷசர்களாகக் கடவீர்.
நீங்கள் என்னை கேலி செய்தீர்கள். அதன் பலனை அனுபவியுங்கள்.
உடனே அவர் கோபத்துடன் லக்ஷ்மிபதியை சந்திக்கச் சென்றார்.
நான் அங்குபோய் சாபம் கொடுப்பேன் அல்லது இறந்துவிடுவேன் என்று
நாரதர் நினைத்தார்.
அவர் உலகத்தில் என்னை கேலிக்கு ஆளாக்கியுள்ளார்.
அரக்கர்களுக்கு எதிரியாகிய விஷ்ணு வழியிலேயே நாரதரை சந்தித்தார்.
உடன் லக்ஷ்மியும் அதே ராஜகுமாரியும் இருந்தனர். .
தேவர்களின் ஸ்வாமியான ஹரி
மிகவும் இனிமையாக கேட்டார்--
முனிவரே!கவலையுடன் எங்கே செல்கிறீர்கள்?
இந்த சொல்லைக்
கேட்டதுமே நாரதருக்கு மிகக் கோபம் வந்துவிட்டது.
மாயையில் கட்டுண்டதால்
மனத்தில் அறிவு வேலை செய்யவில்லை.
முனிவர் சொன்னார்-
"உங்களுக்கு மற்றவர்களின் சுகத்தை பார்க்கமுடியாது.
நீங்கள் பொறாமை கொண்டவர். கபடவேடதாரி."
கடல் கடையும் போது நீங்கள்
சிவனை பைத்தியம் ஆக்கினீர்கள்.
தேவர்களைத்தூண்டி விட்டு
அவரை விஷம் குடிக்கத்தூண்டிவிட்டீர்கள்.

No comments:
Post a Comment