Monday, January 9, 2017

रामचरित मानस -ராமச்சரிதமானஸ்-பாலகாண்டம் -முப்பத்தைந்து

रामचरित मानस -ராமச்சரிதமானஸ்-பாலகாண்டம் -முப்பத்தைந்து

   நாரதரின் விளக்கம்  கேட்டு  மைனாவும் ஹிமவானும்
ஆனந்த சாகரத்தில் மூழ்கினர். நகரத்தில் இருந்த பாலகர் முதல் முதியோர்வரை  இருபாலரும்  மகிழ்ச்சி அடைந்தனர்.
அனைவரும்  பார்வதி தேவியை வணங்கினர்.
   நகரத்தில் மங்கள  பாட்டு பாடினர்.  எல்லோரும் விதவிதமான
தங்க கலசங்களை அலங்கரித்தனர்.   சமையல் கலை அறிவியல் படி
அனேக விதமான சமையல்கள் செய்தனர்.

  பவானி அம்மன் வீட்டு உணவுப்பொருள்களை  வர்ணிப்பது எப்படி ?
ஹிமாச்சலர்  மரியாதையுடன்  எல்லா  மணமகன் ஊர்வலத்தார்களையும்
விஷ்ணு ,பிரம்மா  மற்றும் எல்லா ஜாதி தேவர்களையும் அழைத்து உபசரித்தார்.

 சாப்பிடுபவர்களின் அதிக பந்திகள் அமர்ந்தனர்.
திறமைவாய்ந்த சமையல் கலைஞர்கள்  பரிமாரத் தொடங்கினர்.
பெண்கள் கூட்டம் தேவர்கள் சாப்பிடுவது  அறிந்து
கேலியாக மென்மையாகத் திட்ட ஆரம்பித்தனர்.
தேவர்களும் இந்த கேலி -பரிகாச திட்டுகளை ரசித்தனர்.
அதனால் சாப்பிடுவது தாமதமாகியது.
சாப்பிட்ட உணவின் ருசியான ஆனந்தத்தை வர்ணிக்க
கோடிக்கணக்கான வாய்கள் போதாது.
எல்லோரும் வாய்-முகம் -கைகள் அலம்பி ,
வெத்தலை பாக்கு கொடுக்கப்பட்டது.
உண்டபின் எல்லோரும்   தங்கும்  விடுதிக்குச் சென்றனர்.

பிறகு முனிவர்கள் லக்ன பத்திரிக்கை படித்து ,
முகூர்த்த நேரத்தில் அனைத்து தேவர்களையும் அழைத்தனர்.
 அழைத்த அனைத்து தேவர்களும் அமர தகுந்த ஆசனங்கள் போடப்பட்டது.
வேதத்தின் முறைப்படி வேதங்கள் படிக்கப்பட்டது.
பெண்கள் மங்களப் பாட்டுகளைப்  பாடினர்.

திருமண அரியணை பிரம்மாவாலேயே அமைக்கப்பட்டதால் ,
மிக அழகாக இருந்தது.
அந்தணர்களை வணங்கி ரகுநாதரை ஜபித்து
சிவன் தன் அரியணையில்  அமர்ந்தார்.
 முனிவர்கள் பார்வதியை அழைத்தனர்.
பெண்கள் அவரை நன்கு அலங்கரித்து அழைத்து வந்தனர்.
பார்வதியின் அழகைக் கண்டு  எல்லா தேவர்களுக்கும் ஆசை வந்துவிட்டது.
உலகத்தில் தேவியின் அழகை வர்ணிக்க  கவிஞர்கள்  இல்லை.

    பார்வதியை ஜகதாம்பாள் என்றும் சிவனின் மனைவி என்றும்
அனைத்து தேவர்களும் வணங்கினர்.

  ஜகத்ஜனனி  பார்வதியின் அழகை  வர்ணிக்க வேதங்கள்,
சேஷன்,மற்றும்
சரஸ்வதியாலேயே முடியாத நிலையில்
 துளசிதாசரால் எப்படி வர்ணிக்க முடியும்?

      அழகின் சுரங்கமான அன்னை பவானி சிவபகவான் இருக்கும்
மண்டபத்தை அடைந்தார். அவர் நாணத்தால் சிவனின் சரண்களைமட்டும்
மனம் என்ற வண்டுகளைக்கொண்டு பார்த்தார்.

 முனிவர்கள் ஆக்ஞைப்படி  சிவபகவானும் பார்வதியும் விநாயகப் பெருமானைத்  துதித்தனர்.
மனதில் தேவர்களை அநாதி என்று நினைத்து  திருமணத்திற்கு முன்
விநாயகர்  எப்படி வந்தார் ?என்று ஐயப்படவேண்டாம்.

 முனிவர்கள் வேதங்களில் கூறப்பட்ட விதிப்படி  திருமணம் செய்வித்தனர்.
ஹிமவான் தர்பை எடுத்து கன்னிகையின்
 கைபிடித்து சிவனுக்கு  சமர்ப்பித்தார்.

 மகேஸ்வரர் பார்வதியை மணந்தார்.
அப்பொழுது எல்லா தேவர்களும் மனதில் மகிழ்ந்தனர்.
மேன்மையான  ஞானமுடைய  முனிவர்கள்
வேத மந்திரங்களை உச்சரித்தனர்.
தேவர்கள் வெற்றிமுழக்கம் செய்தனர்.
பலவித வாத்தியங்கள் வாசிக்கப் பட்டன.
ஆகாயத்திலிருந்து  புஷ்ப மழை பொழிந்தது.

சிவபார்வதியின் திருமணம்  முடிந்தது. பிரபஞ்சம் முழுவதும்
ஆனந்தமும் திருப்தியும் அடைந்தது.
வரதக்ஷிணையாக  தாசிகள், தாசர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள்
ஆடைகள், நவரத்தினங்கள்  ,மணிகள்  கொடுக்கப்பட்டன.
அவைகளை வர்ணிக்க முடியாது. 

No comments: