துளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -- அறுபத்தொன்று
விஷ்வாமித்திர ரிஷியின் ஆஷ்ரமத்தில் ரகுநாதர் சில நாட்கள் இருந்து அந்தணர்களுக்கு சேவை செய்தார்.
அந்தணர்கள் பக்தியின் காரணமாக ஸ்ரீராமனுக்கும் ,லக்ஷ்மணனுக்கும் புராணங்களின் பல கதைகளைச்சொன்னார். அந்தக்கதைகள் அனைத்தும்
ஸ்ரீ ராமர் அறிந்தவைகளே.
அதற்குப்பின் ரிஷி விஷ்வாமித்திரர் மிகவும் மரியாதையுடன் ஸ்ரீ ராமரிடம் ,"வாருங்கள். மற்றொரு கதாபாத்திரம் பார்க்கலாம்" என்றார்.
அவர் தனுஷ் யாகம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன்
விஷ்வாமித்திர ரிஷியுடன் சென்றார்.
வழியில் ஒரு ஆஷ்ரமம் தென்பட்டது. அங்கே பறவைகள் ,மிருகங்கள் போன்ற எந்த ஒரு ஜீவ ஜந்துக்களும் தென்படவில்லை.
அங்கு ஒரு கல் தென்பட்டது. அதைப் பார்த்து ஸ்ரீ ராமர் அதென்ன என்று வினவினார்.
அப்பொழுது ரிஷி விவரமாக அந்த கல் கதையைச் சொன்னார்.
கௌதமமுனிவரின் மனைவி சாபத்தின் காரணமாக கல்லாகிவிட்டாள். கல்லானாலும் மிக தைரியத்துடன்
தங்களின் சரண கமலங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள் .
ரகுவீரரே! இவள்மேல் கிருபை காட்டுங்கள்.
ஸ்ரீ ராமரின் பவித்திரமான சோகங்களை போக்கும் பாதங்களின் ஸ்பர்சம் பட்டதுமே தபத்தின் சிலையான
அஹல்யா வெளிப்பட்டாள். பக்தர்களுக்கு சுகம் அளிக்கும்
ஸ்ரீ ரகுநாதரைப் பார்த்ததும் வணங்கினாள்.
அதிக அன்பும் பக்தியும் கொண்டதால், ஆனந்த பரவசத்தால்
பேசமுடியவில்லை. மிகவும் அதிர்ஷ்டசாலியான அஹல்யா ,
பிரபுவின் சரணங்களை சுற்றிக்கொண்டாள். அவளுடைய
கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பிறகு மனத்தை திடப்படுத்திக்கொண்டு ,
பிரபுவிடம் மிகவும் களங்கமற்ற சொற்களால் புகழத் தொடங்கினாள்-" ஞானத்தால் காட்சியளிக்கும் ஸ்ரீ ரகுநாதரே! நீங்கள் வாழ்க! நான் ஒரு புனிதமற்ற பெண்;
நீங்கள் உலகத்தையே புனிதமாக்குபவர்.
பக்தர்களுக்கு சுகம் அளிப்பவர்.
தாமரைக் கண்ணாளரே! பக்தர்களை பிறவித்தளையில் இருந்து விடுவிப்பவர். நான் உங்களிடம் சரணடைகிறேன்.
என்னைக் காப்பாற்றுங்கள்.
முனிவர் எனக்கு சாபம் கொடுத்து நல்லதே செய்திருக்கிறார்.
அதை நான் மிகவும் அனுக்கிரஹமாக ஏற்கிறேன்.
அந்த சாபத்தின் காரணமாக மறுபிறவியிலிருந்து
காக்கும் வல்லமை கொண்ட உங்கள் தரிசனம் கிடைத்தது.
இந்த உங்கள் தர்சனத்தை சங்கரர் மிகவும் பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்.
நான் ஒன்றுமறியாத அறிவிலி. என்னுடைய ஒருவேண்டுகோள் . எனக்கு எந்த வரமும் தரவேண்டாம்.
நான் விரும்புவது ஒன்றே. எனது மனம் என்ற வண்டு எப்பொழுதும் உங்கள் சரண கமலங்களையேசுற்றி அன்பு -பக்தி ரசத்தை எப்பொழுதும் உறிஞ்சட்டும்.
எந்த சரணங்களில் இருந்து கங்கை நதி தோன்றியதோ,
அதே புனித கால்களை என் தலைமேல் வைத்து முக்தி அளித்துள்ளார். அந்த கால்களிருந்து தோன்றிய கங்கையை
சிவபெருமான் தலையில் வைத்துள்ளார். அந்த சரண கமலங்களை பிரம்மா பூஜிக்கிறார். இவ்வாறு அடிக்கடி சரணங்களில் வணங்கி மனதிற்குப் பிடித்த வரம் பெற்று ,
கௌதமரின் மனைவி ஆனந்தத்துடன் தன் கணவன் இருக்கும் உலகத்திற்குச் சென்றாள்.
ஸ்ரீ ராமச்சந்திர பிரபு ஏழை பங்காளர் , அஹல்யா போன்று காரணமின்றியே பலருக்கு முக்தி அளித்துள்ளார்.
துளசிதாசர் சொல்கிறார்--மனமே! நீ கபடம் -வஞ்சனை மறந்து அந்த ஸ்ரீ ராமரையே பஜனை செய்யவும்.

No comments:
Post a Comment