Sunday, January 29, 2017

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --அறுபத்தைந்து

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --          அறுபத்தைந்து

       தோழியே !ராமரின்  தரிசனம்  மிக மிக துர்லபம் .
நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் ராமரின்
தரிசனம் கிடைத்துள்ளது. அதனால் தான் இந்த தரிசனம் செய்யும் நல்ல யோகம்  கிடைத்துள்ளது.

தோழியே ,இந்த திருமணம் அனைவரின் நன்மைக்காக .
மற்றொரு தோழி ,"இந்த சிவதனுஷ் மிகவும் உறுதியானது.
இந்த கருப்பு  அரசகுமாரன்  ,மென்மையான உடல் உள்ளவன்.
எல்லோருமே  தர்மசங்கடத்தில் உள்ளனர். இதைக் கேட்டு மற்றொரு தோழி சொன்னாள்----பார்ப்பதற்குத்தான்  இவர்

சிறியவர். ஆனால் அதிக சக்திசாலியானவர்.
இவர் சரண  கமலக்களின் ஸ்பர்சத்தினால் கல்லான மிகப்பெரிய   பாவியான அஹல்யா  பெண்ணாகிவிட்டாள்.

இவர் வில்லையா  உடைக்கமாட்டார்.?
இந்த நம்பிக்கையில்
உறுதியாக இருக்கவேண்டும்.
 சீதையை  அழகாகப்  படைத்த  இறைவன்
நன்கு சிந்தித்துத்  தான் இந்த கருநீலவண்ணனைப்
படைத்துள்ளார்.
அனைத்துப்  பெண்களும்   மனதில் மிக மகிழ்ந்தனர்.
   ராமரும்-லக்ஷுமண்   இருவரும்  சென்ற இடமெல்லாம்
மகிழ்ச்சி  பொங்கியது.
இரண்டு  சகோதரர்களும் நகரத்தின் கிழக்குத்திசையில் சென்றனர். அங்கே வில்போட்டிக்கான அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது . மிகவும் நீளமான அகலமான நன்கு அமைக்கப்பட்ட  மைதானம்.
நான்கு பக்கங்களிலும் அரசர்கள் அமர மிகப்பெரிய
ஸ்வர்ணமேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
பின்னால் வட்டவடிவில் காவலர்கள் மேடைகள் உயர்ந்து காணப்பட்டது.
நகரமக்கள் அமர மிக உயர்ந்த  மேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
அவைகளுக்கு  அருகிலேயே  மிகப்பெரிய அகலக்கண வெள்ளைக் கட்டிடங்கள்  பல வண்ணங்களில் அமைக்கபட்டிருந்தன. அங்கே தன் தன் குல வழக்கப்படி பெண்கள் அமர்ந்து பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நகரத்தின் பாலகர்கள் ராம-லக்ஷ்மணர் களுக்கு அந்த வில்
போட்டி நடக்கும் இடத்தைக் காட்டினர்.
பாலகர்கள் இந்த காரணத்தைக் கொண்டு அன்பின் வயப்பட்டு ராமரின் அழகான அங்கத்தைத் தொட்டு ஆனந்தப்பட்டனர்.
பாலகர்களின் அன்பினால் மகிழ்ந்து அவைகள் காட்டிய வேள்வி பூமியை மிகவும்  புகழ்ந்தனர். இதனால் பாலகர்களின் உத்சாஹமும் ஆனந்தமும் அன்பும் அதிகரித்தன. அவர்கள் தங்கள் விருப்பப்படி அவர்களை அழைத்தனர். இரு சகோதரர்களும் அவர்களுடன்
மிக ஆனந்தமாகச் சென்றனர்.  

No comments: