Sunday, January 15, 2017

ராமசரிதமானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தைந்து

  ராமசரிதமானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தைந்து

     நாரதர் மீண்டும்  விஷ்ணுவின் மீது குற்றம் சாட்டினார் :--
அசுரர்களுக்கு மதுவும் , சிவனுக்கு விஷமும் அளித்து ,
நீங்கள் லக்ஷ்மியையும் அழகான மணியையும் எடுத்துக்கொண்டீர்கள்.
 நீ மிகப்பெரிய ஏமாற்றுக்காரன். சுய நலமுள்ளவன்.

எப்பொழுதும் கபடமாக நடந்துகொள்கிறாய்.

 நீ முற்றிலும் சுதந்திரமாக இயங்குகிறாய்.
மூளையே கிடையாது. மன இஷ்டம் போல் நடக்கிறாய்.
நல்லவனை கெட்டவனாகவும் ,
 கெட்டவனை நல்லவனாகவும்
மாற்றுகிறாய்.

மனதில் மகிழ்ச்சி-துன்பம் எதுவும் உணர்வதில்லை.

எல்லோரையும் மோசம் செய்து  அச்சமின்றி உலாவுகிறாய்.
அதனால் எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிறாய்.
நல்ல-கெட்ட செயல்கள் உனக்கு இடையூறாக இல்லை.
இன்றுவரை உன்னை யாரும் சரி படுத்தவில்லை.

என்போன்றவர்களைத் தூண்டிவிட்டு அவமானப்படுத்துகிராய்.
இதன் கேடு பலன் உனக்கு கட்டாயம் கிட்டும்.
 எந்த உடலை  எடுத்து என்னை வஞ்சித்தாயோ ,
உனக்கு அதே உடல்  உண்டாகட்டும். இதுதான் என்னுடைய சாபம்.

 நீ குரங்காக என்னுடைய உருவத்தை ஆக்கினாய்.
அதே குரங்குகள் உனக்கு உதவியாளர்களாக  ஆவார்கள்.
நான் விரும்பிய பெண்ணை  பிரித்து எனக்கு மிகவும் பெரிய துரோகம்
செய்துவிட்டாய்.  நீயும் மனைவியைப் பிரிந்து துன்புறுவாய்.

 முனிவரின் சாபத்தை சிரமேற்கொண்டு ,
மனதில் மகிழ்ச்சி பொங்க,
நாரதரிடம் மிகவும் பணிவுடன் நடந்து  தனது மாயையின்
சக்தியை போக்கிவிட்டார்.

 ஹரி தன்  மாயையை விலக்கியதுமே, அங்கே லக்ஷ்மியும் இல்லை.
ராஜகுமாரியும் இல்லை.  அப்பொழுது நாரதர் மிகவும் அஞ்சி ,
ஹரியின் பாதகமலங்களைப் பிடித்துக்கொண்டு
"சரணாகதி அடைந்தவர்களின் இன்னல் போக்குபவரே!
என்னை காப்பாற்றுங்கள்."
 கிருபை  உள்ளவரே! என் சாபம் பொய்க்கட்டும்.
 அப்பொழுது  தீன பந்துவான  ஹரி ,"இதெல்லாம் என் விருப்பமே "என்றார்.
 நாரதர் ,"நான் உங்கள் மீது பல பழி சுமத்தியுள்ளேன்.
நான் செய்த இந்த பாவங்கள் எப்படி போகும்?
 இறைவன் சொன்னார் --" ஷங்கரின்  சதநாமத்தை ஜபிக்கவும்.
இதனால் உடனே மனம்  சாந்தி அடையும்."
" சிவபகவானைப்போன்று வேறு யாரும்
எனக்கு பிரியமானவர்கள் இல்லை. "
இந்த நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்."

 முனிவரே! சிவனின் அருள் பெறாதவர்கள், எனக்கு பக்தர்கள் அல்ல.
இப்படி மனதில் உறுதி எடுத்துக்கொண்டு பூமியில் சஞ்சரிக்கவும்.
இப்பொழுது என் மாயை உன்னருகில் வராது.

பலவிதத்திலும் முனிவருக்கு அறிவுரை கூறி  ஹரி மறைந்துவிட்டார்.
முனிவர் ராமரைப் புகழ்ந்துகொண்டே
 பிராமலோகத்திற்குச் சென்றார்.

சிவகணங்கள்  முனிவரை மோகம் இன்றி
மகிழ்ச்சியுடன் வருவதைக்கண்டு
பயந்து அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டனர்.

அவரிடம் உண்மை நிலை கூறி வேண்டினர் :-
"நாங்கள் அந்தணர்கள் இல்லை. சிவா கணங்கள்.
நாங்கள் பெரும் அபராதங்கள் செய்துவிட்டோம்.
நீங்கள் கிருபை  உள்ளவர். எங்கள்  சாபத்தைப் போக்குங்கள்.
தீன பந்துவான நாரதர் சொன்னார் --
நீங்கள் இருவரும் ராக்ஷர்களாக மாறிவிடுங்கள்.
உங்களுக்கு ஐஸ்வர்யங்கள், சக்தி, கூறிய அறிவு கிடைக்கட்டும்.
நீங்கள் புஜ வலிமையால் உலகத்தையே வெல்லும் போது
விஷ்ணு மனித அவதாரம் எடுப்பார்.

 போரில் ஹரியுடன் போரிடும் பொது உங்கள் உயிர் பிரியும்.
உங்களுக்கு முக்தி கிடைக்கும். பிறகு உலகில் பிறவி எடுக்க மாட்டீர்கள்.
அவர்கள் இருவரும் முனிவரை வணங்கி சென்றுவிட்டனர்.
காலம் கூடிய போது அரக்கர்களாக பிறந்தனர்.

 தேவர்களை மகிழ்விக்கும் ,நல்லவர்களுக்கு சுகம் அளிக்கும் ,
பூமியின் சுமைகளைப் போக்கும்  பகவான் இந்த காரணத்தால் மனித அவதாரம்  எடுத்தார்  என்று வேதங்கள் கூறுகின்றன.

No comments: