Tuesday, January 10, 2017

रामचरितमानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -முப்பத்தாறு .

रामचरितमानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -முப்பத்தாறு .

        மாப்பிள்ளைக்கு   பலவிதமான  வரதக்ஷணை கொடுத்து  ஹிமாசலம் சொன்னார் ---நீங்கள் முழுமையான முழுமுதற்கடவுள்.
நான் உங்களுக்கு என்ன கொடுக்கமுடியும். ? என்று சொல்லி சிவனின்
சரண  கமலங்களைப்  பிடித்துக்கொண்டார்.
அப்பொழுது கிருபைக்கடலான சிவ- பகவான் தன் மாமனாருக்கு
எல்லாவித தைரியத்தையும் ஆறுதலையும் அளித்தார்.
பிறகு அன்புடன் மைனா சிவனின் பாதகமலங்களைப்பிடித்து
வணங்கி சொன்னார்--
ஜகன்னாதரே  !  எனக்கு இந்த உமா   உயிரைப்போன்று  அன்பானவள்.
நீங்கள்  இவளை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.
இவளின் எல்லா அபராதங்களையும் மன்னித்துக்கொண்டே இருங்கள்.
நீங்கள் மகிழ்ந்து எனக்கு இந்த வரம்  அளியுங்கள்.

சிவபகவான் தன் மாமியாருக்கும் ஆறுதல் சொன்னார்.
 பிறகு  அவர்கள் சிவனை  வணங்கி வீட்டிற்குச் சென்றனர் ,
மைனா  பிறகு   அம்மா பார்வதியை அழைத்தார். பிறகு மடியில்
அமரவைத்து  உபதேசம்  செய்தார்.
பார்வதி! எப்பொழுதும் சிவனுக்கு பாத பூஜை செய்யவும்.
பெண்களுக்கு இதுதான்  தர்மம். பெண்களுக்கு கணவன் தான்  தெய்வம்.
வேறு தெய்வம் இல்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டே மைனாவின் கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்தது. . அவர் பெண்ணை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
பிறகு பிரம்மா  உலகத்தில் பெண்ணை ஏன்  படைத்தார் ?அடிமைக்கு கனவிலும் சுகம் கிடைக்கவில்லை. இதைச் சொல்லி அம்மா அன்பினால்
மிகவும் கவலைப்பட்டது. ஆனால் வருத்தப்பட இது நேரமல்ல என்று
அறிந்து அவர் தைரியமாக இருந்தார்.

மைனாவின் அன்பைப்பற்றி சொல்வது கடினம். அவள் அடிக்கடி பார்வதியின்  காலில்  விழுந்தாள். பவானி அனைத்துப்
பெண்களையும் சந்தித்துவிட்டு தன் தாயை அனைத்துக் கொண்டாள்.
பார்வதி அம்மாவை மீண்டும் சந்தித்துவிட்டு  சென்றாள்.
எல்லோரும் ஆசீர்வாதம் செய்தனர்.  பார்வதி மீண்டும் மீண்டும் அம்மாவைப்
பார்த்துக்கொண்டே சென்றாள்.
பிறகு தோழிகள் பார்வதியை சிவனிடம் அழைத்துச் சென்றனர்.

மகாதேவர் எல்லா  யாசகர்களையும்   திருப்தி செய்துவிட்டு
பார்வதியை அழைத்துக் கொண்டு கைலாசத்தை அடைந்தார்.
எல்லா தேவதைகளும் மகிழ்ச்சி அடைந்து பூமாரி  பொழிந்தனர்.
ஆகாயத்தில்   அழகான   பெரிய முரசுகள்  முழங்கின.


      ஹிமவான் சிவனை விடுவதற்கு உடன் சென்றார்.
சிவபகவான் அவரைத் திருப்திபடித்தி  விடைகொடுத்தார்.
 மலை அரசர்   உடனே வீட்டுக்கு வந்தார். அவர் எல்லா
மலைகளையும்  நதிகளையும் அழைத்தார்.
ஹிமவான் மரியாதையுடன் எல்லோருக்கும் விடை கொடுத்தார்.

    சிவபகவான் கைலாசமலையை  அடைந்தார்.
எல்லா  தேவர்களும்   தங்கள் லோகத்திற்குச் சென்றனர்.
 துளசி தாசர் சொல்கிறார் --
பார்வதியும் சிவனும் உலகத்திற்கே தாய் -தந்தையர்கள்.
ஆகையால் நான்  அவர்களின் அழகை  வர்ணிக்கமுடியாது.

  சிவனும் பார்வதியும் மிகுந்த  மகிழ்ச்சியுடன்  இருந்தனர்.
சிவகணங்களுடன்  கைலாசத்தில் வசித்தனர்.
அவர்கள் தினந்தோறும்
புதிய புதிய இடங்களுக்குச் சென்றனர்.
இவ்வாறு ஆனந்தமாக பொழுது கழிந்தது.

அவர்களுக்கு ஆறுமுகம் கொண்ட  
குழந்தை கார்த்திகேயன் பிறந்தான்.
அவன் தாரகாசூரனை வதம் செய்தான்.
 வேதங்கள் , சாஸ்த்திரங்களில்  புராணங்களில்
சுவாமி கார்த்திகேயனுடைய பிறப்பு பற்றிய கதைகள்
புகழ்பெற்றது. அதை உலகமே அறியும்.

ஷண்முகனின் பிறப்பு, செயல், வீரம் ,ப்ரதாபம் ,
போன்றவற்றை  உலகமே அறியும்.
அதனால் சிவனின் மகனின் கதையை
 சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்.

சிவன் -பார்வதியின் இக்கதையை
சொல்லும் -பாடும்     ஆண்களும்பெண்களும்
எப்பொழுதும் நலம் பெற்று சுகமான  வாழ்க்கை வாழ்வார்கள்.

மலைமகளின்  கணவன்  மகாதேவனின் கதை கடல் போன்றது.
ஆழமானது. அதை வேதங்களாலும் கடக்க முடியாது.
அப்படி இருக்க படிக்காத மந்தபுத்தி  உள்ள துளசிதாசரால்
எப்படி வர்ணிக்க முடியும்.
  சிவபகவானின் சுகமான ஆனந்தமான ரசம்
 நிறைந்த கதைகேட்டு  பாரத்வாஜ முனிவர் மிகவும் மகிழ்ந்தார்.
அவருக்கு  கதைகேட்கும் ஆர்வம் அதிகரித்தது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.  உடல் புல்லரித்தது.
 அன்பினால் கவரப்பட்டு பேசமுடியவில்லை.
அவரின் இந்த நிலை பார்த்து ஞானி முனிவர் யாக்ய வல்கியர் மகிழ்ந்தார்.
முனீஸ்வரரே !உங்களுக்கு பிறவிப்பயன் கிடைத்துவிட்டது.
உனக்கு கௌரியின் கணவன் சிவன் உயிரைவிட மிகவும் அன்பானவன்.

சிவனின் மேல் அனுப்பு இல்லாதவர்களை ,
ஸ்ரீ ராமர் கனவிலும் விரும்ப மாட்டார்.
விஸ்வநாதர் சிவனின் மேல் கபடமில்லா
அன்பு இருப்பதுதான்  ராம பக்தியின் லக்ஷணம் .

சிவனைப்போன்று ரகுநாதரின் மேல் பக்தி கொண்டோர் யாரும் இல்லை.
ராமரின் பக்தியால் பாவமே செய்யாத
மனைவி சதியைத் துறந்து வாழ்ந்தார்.
பிரதிக்ஞை செய்து ராமரின் மீதுள்ள பக்தியைக் காட்டினார்.
ராமருக்கு சிவனைப்போன்று அன்பானவர  யாரும் இல்லை.
நான் முதலில் சிவனின் சரித்திரத்தை கூறி ,
உன்னுடைய ரகசியத்தைத் தெரிந்துகொண்டேன்.
நீ ராமனின் பவித்திரமான தொண்டன்.
எவ்வித தோஷமும் இல்லாதவன்.
நான் உன்னுடைய குணத்தையும்
 ஒழுக்கத்தையும் தெரிந்துகொண்டேன்.

இப்பொழுது நான் ஸ்ரீ ராமச்சந்திரரின் லீலைகளைச் சொல்கிறேன் . கேள் .
முனிவரே! இன்று உங்களை சந்தித்ததினால் , என் மனதில்   இருக்கும்
ஆனந்தம் சொல்ல முடியாது.

No comments: