Monday, January 2, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪ இருபத்திநான்கு.

ராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪  இருபத்திநான்கு.

     சதியானவர்  அநேக  சிவன் , விஷ்ணு ,பிரம்மா

போன்றவர்களின்    அநேக  அவதார  மகிமைகளை
பார்த்துள்ளார்.
இங்கு வித விதமான
வேஷத்தில் எல்லா தேவதைகளும்
ஸ்ரீ ராமரின்  பாதங்களை வணங்கி
 சேவை செய்துகொண்டிருக்கின்றனர்.  

அவர் அங்கே எண்ணிக்கையில் அடங்கா பதிவிரதைகள்,
அந்தணப் பெண்கள், லக்ஷிமிகளைப் பார்த்தார்.
அந்த அந்த  தேவர்களுக்கேற்ற
   மனைவி வேடத்தில்    சக்திகள்இ ருந்தனர்.

எங்கெல்லாம் பார்வதி தேவி ரகுநாதரைப் பார்த்தாரோ ,

அங்கெல்லாம்  அத்தனை தேவர்களையும் பார்த்தார்.

அநேக வடிவம் எடுத்து எல்லா
 தேவர்களும் ராமருக்கு  பூஜை
செய்துகொண்டிருந்தனர்.
ஆனால்  ராமரின்  மறுவடிவத்தைப்
பார்க்கவில்லை.

சீதையுடன் அதிக  ராமரைப் பார்த்தார்.
ஆனால் அவரின் வேஷம்
 பலவடிவங்களில் இல்லை.
அதே ராமர் , அதே  சீதை , அதே இலக்குமணர்.
இப்படி அவர்களைப்பார்த்து தேவி  பயந்துவிட்டார்.
அவர் இதயம்  நடுங்க  ஆரம்பித்தது.
உடலின் உணர்வுகள் போய்க்கொண்டிருந்தது.
அவர்  கண்ளை  மூடிக்கொண்டு
வழியில் உட்கார்ந்துவிட்டார்.
  பின்னர்  கண்  திறந்து  பார்த்தால் ,
தக்ஷகுமாரிக்கு  எதுவும்  தென்படவில்லை.
பிறகு  ராமனை   வணங்கிக்கொண்டே ,
சிவபகவான்  இருந்த இடத்திற்கு சென்றாள்.

   சிவனிடம்  சென்றதுமே
சிவபகவான்  சிரித்துவிட்டு
நலம் விசாரித்து
  ராமரை  எப்படி  சோதித்தாய்  என வினவினார்.

    தேவி ரகுநாதனின் அச்சத்தால் உண்மையை மறைத்து
சொன்னார் :--
    நான் எதுவும்  சோதிக்கவில்லை.
 உங்களைப்போன்றே  வணங்கினேன்.
 நீங்கள்  சொல்வது பொய்யல்ல
 என்பதில்  முழு நம்பிக்கை  உண்டு.

ஆனால் சிவன் தேவி செய்ததை தெரிந்து கொண்டார்.
 பிறகு  ராமனின் மாயைக்கு சிரம் தாழ்த்தி வணங்கினார்.
தேவியையே பொய் பேச வைத்த
நிலைக்குத்  தூண்டிய
ஸ்ரீ ராமரின் சக்தியை அறிந்தார்.
ஸ்ரீ   ஹரியின்  விருப்பம் எதிர்காலத்தில்  மிக
சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிவன்
மனதில்  எண்ணினார்.

 தேவி பார்வதி சீதையின் வடிவம்
 எடுத்ததை எண்ணி வருந்தினார்.
நான்  இப்பொழுது  தேவியிடம் அன்பு செலுத்தினால் ,
பக்தி மார்க்கம் மறைந்து விடும்.
மிகவும் அநியாயமாகும் என்று  நினைத்தார்.

தேவி மிகவும்  பவித்திரமானவள்.
ஆகையால் அவரை  விட முடியாது.
அன்பு செலுத்தினால்  மிகவும்  பாவமாகிவிடும்.
வெளிப்படையாக  சிவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால்
அவர்  மனதில்  மிகவும் வேதனைப்பட்டார்.
  அப்பொழுது  சிவன் ராமச்சந்திரரின்
சரண கமலங்களை வணங்கினார்.
ஸ்ரீ ராமனை வணங்கியதுமே  அவர்  மனதில்
உதித்த   எண்ணம் , தேவியின்  இந்த உடலுடன் மீண்டும்
கணவன் -மனைவி உறவுடன் சந்திக்க முடியாது.
என்று  சிவன் சங்கல்பம் செய்துகொண்டார்.

   நிலையான அறிவுகொண்ட  சிவன் ,
 இந்த எண்ணங்களுடன் கைலாசம்  சென்றார்.
அப்பொழுது அவருக்கு ஒரு  அசரீரி  கேட்டது--
 ஹே  மஹேஷ்! உங்களுக்கு வெற்றி கிட்டட்டும்.
நீங்கள்  பக்தியில் உறுதியாக உள்ளீர்கள்.

உங்களைத்தவிர  வேறு யாரும்
 இப்படி  பிரதிக்ஞை செய்ய  முடியாது.
நீங்கள் ராமரின் பக்தர்.  அவரை ஆமோதிப்பவர்.
நீங்கள் பகவான்.
இந்த அசரீரியைக்கேட்டு தேவியின் மனதில் கவலை
 உண்டாயிற்று.
உடனே சிவனிடம் அவர் செய்த  பிரதிக்ஞை பற்றி கேட்டார்.
நீங்கள் சத்தியத்தின் இருப்பிடம்.
தீன பந்து.  இவ்வாறு பலவிதங்களில்  தேவி  கேட்டும்
முவ்வுலக தேவன்  சிவன்  எதுவும்  சொல்லவில்லை.

   சதி தேவி ,  சகலமும் அறிந்த சிவன் எல்லாம் அறிந்துகொண்டார்
என்பதை தெரிந்து கொண்டார்.
நான் சிவனிடம் கபடமாக இருந்தேன்.
பெண்ணின் குணமே  அறியாமையும் மூடத்தனமும் ஆகும்.
   பாலுடன்  தண்ணீர்  சேர்ந்தால்
   பாலைப்போலவே விலையாகிறது.
 ஆனால்  கபடம்   என்ற  புளிப்பு  சேர்ந்ததுமே  ,
  பால் திரிந்து விடுகிறது.
 தண்ணீர் பிரிந்து விடுகிறது.
பாலின்  ருசி போய்விடுகிறது.
 தன் பொய்யான நடத்தையால் தேவியின் மனதில்
பல வித  எண்ணங்களும் கவலைகளும்  ஏற்பட்டன.
அவைகளை வர்ணிக்க இயலாது.
சிவபகவான்  இரக்கத்தில்  ஆழ்  கடல்.
அதனால் தான்  அவர் வெளிப்படையாக தேவியின்
குற்றத்தைக் கூறவில்லை.
சிவபகவானின்  நிலை  கண்டே
அவர்     தன்னை தியாகம்  செய்ததை
 அறிந்து கொண்டார்.
தான்  செய்த  பாவத்தை அறிந்து கொண்டார்.
அவர் மனம் குயவனின் அடுப்பின் தணல் போல்  எரிந்தது.

 ரிஷப  வாகனன்  சிவன்,
 தேவியின் கவலை அறிந்து
அவருக்கு   மகிழ்ச்சி  அளிக்க  எண்ணி ,
அழகான  கதைகளைச் சொன்னார்.
வழியில் பலவித வரலாற்றுகளைச்  சொல்லி
விஸ்வநாதர் கைலாயத்தை அடைந்தார்.

 அங்கே  தன்   பிரதிக்ஞைப்படி
 பத்மாசனம் போட்டு
அமர்ந்துகொண்டார்.
அவருடைய  அகண்ட
 முடிவில்லா சமாதி  நிலை துவங்கியது.

 கைலாயத்தில் சதிதேவியும்  வசிக்க ஆரம்பித்தார்.
 அவர் மனதில் மிகவும் கவலை ஏற்பட்டது.
 இந்த ரகசியத்தை யாரும் அறியமாட்டார்கள்.
 அவரின் ஒவ்வொவொரு நாளும்
 ஒரு யுகம் கழிந்ததுபோலாகியது.
 இந்த துன்பக்கடலை எப்பொழுது கடப்பேன்
 என்ற
கவலை அதிகரித்தது.
நான்  ராமரை  அவமதித்தேன் .
கணவனின் வாக்கை பொய்யென அறிந்தேன்.
அதன் பலனை பிரம்மா கொடுத்துவிட்டார்.
ஆனால் சங்கரர் பாராமுகமாக  இருக்கும்பொழுது
என்னை உயிரோடு ஏன்  வைத்துள்ளார்.
சாதியின் இதயத்தின் வெறுப்பை  வெளியிட முடியவில்லை.
அறிவுள்ள  சாதி ராமரை நினைத்து வேண்டினார்.
இறைவா! நீங்கள் ஏழைகள்  மேல்
இரக்கப்படுபவர்  என்று சொல்கிறார்கள்.
நீங்கள் இன்னல்களைப்போக்குபவர் என்று
புகழ்கிறார்கள்.
 நான் உங்களிடம் என் இந்தஉடல்
மடிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
எனக்கு சிவனின் மேல் அதிக அன்பு உள்ளது.
என்  அன்பின் விரதம் மனம் ,வாக்கு மற்றும்
 செயலால்  உண்மையானது.
 எல்லாம் தர்சிக்கிற இறைவா!
எந்தவித  துன்பமும்  இல்லாமல்  பொறுக்கமுடியாத
இந்த மனத்துன்பம் போக
 விரைவில் நான் மரணமடையச் செய்யுங்கள்.

தக்ஷணின் மகள்   சதி   இவ்வாறு மிகவும் துன்பத்தில் இருந்தாள் .
அவளின் பயங்கர துன்பத்தை வர்ணிக்க முடியாது.
87 ஆயிரம் ஆண்டுகள்  கழிந்த பின்
சிவபகவான்   தன்  சமாதிநிலையிலிருந்து எழுந்தார்.
 அவர் ராமநாமத்தை ஜபிக்கத் துவங்கினார்.
சதி சிவனின் சமாதிநிலை  முடிந்தது   அறிந்து
சிவனின் பாதரவிந்தங்களை வணங்கினார்.
சிவபகவான்  அவர் அமர்வதற்கு  ஆசனம் அளித்தார்.













No comments: