Saturday, January 7, 2017

ramacharithmaanas--ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -முப்பத்திமூன்று

ramacharithmaanas--ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -முப்பத்திமூன்று


  சிவபகவானின்  மஹிமை  அறிந்து  himaachal  மேன்மைபோருந்திய
முனிவர்களை மிக மரியாதையுடன் வரவேற்றான்.
அவர்கள் மூலமாக  சுப தினம், சுப நக்ஷத்திரம் நல்லநேரம் போன்றவற்றை
மிக ஆராய்ந்து வேதங்களின் விதிப்படி சீக்கிரமாக லக்னத்தை நிச்சயித்து
எழுதிவைத்தான் .
பிறகு  அந்த லக்ன பத்திரிகையை சப்தரிஷிகளிடம் கொடுத்தான்.
அவர்களுடன் பிரார்த்தித்தான்.
 அவர்கள் அந்த லக்ன பத்திரிகையை பிரம்மாவிடம் கொடுத்தனர்.
பிரம்மா அதை மிகவும் பிரியமாக படித்தார்.

பிரம்மா அங்குள்ள அனைவருக்கும் அதை படித்துக் காண்பித்தார்.
அதைக்கேட்டு எல்லா முனிவர்களும் தேவர்களும் மகிழ்ந்தனர்.
ஆகாயத்திலிருந்து பூ மழை பொழிந்தது.
வாத்தியங்கள் முழங்கின.  பத்து திக்குகளில் இருந்தும்
மங்கள  கலசங்கள் அலங்கரிக்கப்பட்டன.
 எல்லா தேவர்களும் தங்களுடைய வாகனங்கள் விமானங்களை
அலங்கரிக்கத் தொடங்கினர்.  நல்ல சகுனங்கள் தோன்றின.
தேவலோக அழகிகள் பாட்டுப்பாடினர்கள்.
 சிவகணங்கள் சிவனை அலங்கரித்தனர்.
ஜடா முகுடம் உண்டாக்கி அதில் பாம்புகளை அலங்கரித்தனர்.
அவர் பாம்புகளையே குண்டலமாகவும் கங்கனமாகவும்
அணிந்துகொண்டார். உடலில் விபூதி பூசிக்கொண்டார்.
ஆடைகளுக்குப்பதில்  புலித்தோல் அணிந்துகொண்டார்.

சிவனின் அழகான  நெற்றியில் நிலவு, தலையில் கங்கை,முக்கண்கள்,
பாம்புப் பூணல் , தொண்டையில் விஷம், கபாலமாலை போன்ற அசுப  அலங்காரம் இருந்தபோதிலும் அவர் நன்மைசெய்யக் கூடிய
கிருபை காட்டுகின்றவர்.
 ஒருகையில் திரிசூலம், ஒருகையில்  உடுக்கை,அழகாக காட்சி அளித்தது.
அவர் தன் காலைவாகனத்தில் புறப்பட்டார்.
 சிவனின் அழகைப்பார்த்து தேவமங்கைகள்  இந்த வரனுக்கு ஏற்ற மணமகள்  உலகில் கிடைக்காது என்று கூறினர்.

விஷ்ணு மற்றும் பிரம்மா முதலிய தேவர்கள் தன் தன் வாகனங்களில்
மணமகன் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
தேவர்களின் கூட்டம் மிகவும் அழகாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளைக் கேற்ற  தகுதியான ஊர்வலமாக இல்லை. அப்பொழுது விஷ்ணுபகவான் தன்
எல்லா திக்பாலகர்களையும் அழைத்து எல்லோரும் உங்கள் குழுக்களுடன்
தனித்தனியாக செல்லுங்கள் என்றார்.
சகோதரா!  நம்முடைய இந்த மணமகன் ஊர்வலம் மணமகனுக்கு
ஏற்றதாக இல்லை . மற்ற நகரத்திற்கு சென்று கேலிக்கு ஆளாவீர்களா ?
விஷ்ணுவின் கட்டளையைக்கேட்டு தேவர்கள் புன்னகையுடன்
தன் தன் சேனைகளுடன் தனித்தனியாக அணிவகுத்துச் சென்றனர்.
விஷ்ணுவின் கேலியான பேச்சைக்கேட்டு மகாதேவ் மனத்திற்குள் புன்னகைபூத்தார்.
தன அன்பான விஷ்ணுவின் பிரியமான சொற்கள் கேட்டு சிவபகவான் பிருகு முனிவரை அனுப்பி  தன் எல்லா கணங்களையும் அழைத்தார்.
 சிவனின் கட்டளை கேட்டதுமே எல்லோரும் வந்துவிட்டனர்.
சிவனை வணங்கினர். விதவிதமான சவாரிகள், விதவிதமான வேஷமிட்டவர்களைப்  பார்த்து  சிவபகவான் சிரித்தார்.
சிலருக்கு முகமில்லை. சிலருக்கு பலமுகங்கள் இருந்தன.
சிலருக்கு கைகால்கள் இல்லை. சிலருக்கு பல கண்கள் இருந்தன.
சிலருக்கு கண்களே இல்லை. சிலர் அதிக குண்டாக இருந்தனர்.
சிலர் மிக மெலிந்து காணப்பட்டனர்.
சிலர் புனிதமாகக் காணப்பட்டனர்.
சிலர் புனிதமற்று காட்சி அளித்தனர்.
சிலர் பயங்கரமான நகைகள் அணிந்தும் ,
கையில் மண்டையோடு எடுத்துக்கொண்டும் வந்தனர்.
எல்லோரும் உடலில் புதிய ரத்தத்தைத் தடவி இருந்தனர்.
நரி, கழுதை, நாய், பன்னி மற்றும் நரிமுகம் கொண்டவர்களும் வந்தனர்.
அனேகவித பிரேதங்கள், பிசாசுகள், யோகினிகள் சேர்ந்திருந்தனர்.
அவர்களை  எண்ணுவதும் வர்ணிப்பதும் மிகக் கடினம்.
பூதங்களும் பிரேதங்களும் ஆடினபாடின ஆனந்தமாக இருந்தன.

பார்ப்பதற்கு ஒழுங்கற்றும் மிகவும் விசித்திரமான
குரலோசையுடனும் இருந்தனர்.
மணமகனுக்கு ஏற்றதாக மணமகன் ஊர்வலம் இருந்தது.
வழியில் விதவிதமாக வேடிக்கை காட்சிகள் காட்டினர்.
ஹிமாச்சல் கட்டிய திருமண மண்டபம் மிக விசித்திரமாக இருந்தது.
உலகில் உள்ள அனைத்து சிறிய பெரிய மலைகள், வனங்கள்,  சமுத்திரங்கள், நதிகள் ,குளங்கள் அனைத்திற்கும் ஹிமவான் அழைப்பிதல் அனுப்பியிருந்தார.
அவைகள் எல்லாமே தன விருப்பப்படி அலங்கரித்து அழகான பெண்கள் மற்றும் தன கூட்டத்துடன் வந்துவிட்டன. எல்லோருமே அன்புடன் மங்கள கீதம் பாடினர்.
அனைவரும் தங்குவதற்கு ஹிமாச்சல் தகுந்த ஏற்பாடு செய்திருந்தார்.
எல்லோரும் வசதியாக தங்கினர் .
நகரின் அழகு பிரம்மாவின் படைப்பைவிட சிறந்திருந்தது.  அதற்கு முன் பிரம்மாவின் படைப்பு தாழ்ந்துவிட்டது.
நதிகள், கிணறுகள் ,குளங்கள்  ஆகியவற்றின் அழகை வர்ணிப்பது கடினம்.
ஒவ்வொரு வீட்டிலும்   சுபகாரியத்தை காட்டும் தோரணங்கள் , ப்சதாகைகள், கொடிகள் அலங்காரமாக நேர்த்தியாக காணப்பட்டன.
அங்குள்ள அழகான கெட்டிக்கார ஆண் -பெண்களைப்பார்த்து
முனிவர்களின் மனதிலும் மோகம் உண்டாகியது.
 ஜகதாம்பாள்  பிறந்த ஊரின் அழகை வர்நிக்கமுடியுமா ?
அங்கு சொத்து சுகம் , வெற்றிகள், தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருந்தன.
  மணமகன் வீட்டு ஊர்வலம் அருகில் வந்ததும் வரவேற்க தயாராகினர்.
மிகவும் ஆடம்பர வரவேற்பு.
தேவர்களின் வருகையால் மிகவும் மகிழ்ந்தனர்.
விஷ்ணுபகவானைப்பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர்.
ஆனால் சிவகனங்களைப்பார்த்து வரவேர்கவந்த யானைகள், குதிரைகள், மாடுகள் பயந்து ஓடின.
வயதானவர்கள் தைரியத்துடன்  நின்றனர்.
பையன்கள் உயிருக்கு பயந்து ஓடினர். அவர்கள் வீட்டை அடைந்ததும் பயத்தில் நடுங்கிக்கொண்டே  பேசினர் .

அவர்கள் சொன்னார்கள் , இது மணமகன்  ஊர்வலமா  அல்லது
எமதரராஜனின் படையா ? மணமகன் பைத்தியக்காரன் .
   காளை மாட்டில் வருகிறான்.
பாம்புகள், மண்டையோடுகள், விபூதி  தான் அவனுடைய நகைகள்.

மணமகனின் உடலில் சாம்பல் பூசப்பட்டுள்ளது.
பாம்பு  மற்றும் மண்டை ஓடுகள் தான்   நகைகள்.
அவன்   நிர்வாணமாகவும் ஜடா தாரியாகவும் இருக்கிறான்.
  அவனுடன்  பயங்கர முகமுடைய பூதங்கள், பிரேதங்கள் ,
பிசாசுகள்,யோகினிகள்,ராக்ஷசர்கள்   இருக்கிறார்கள்.
மணமகன் ஊர்வலம்  பார்த்து  பயப்படாமல்பிழைப்பவன்
  புண்ணியவானாவான்.
 அவன்தான் பார்வதியை
விவாஹம் செய்துகொள்ளப்போகிறான்.
 பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும்
இதையே  சொன்னார்கள்.
அது மகேஸ்வரரின் சமூஹம் என்றதும்
 பெற்றோர்கள் சிரித்தனர்.
பயப்படவேண்டாம் என்று விளக்கினர்.
பார்வதியின்  தாயார் ஆரத்தி யும்
 உடன் இருந்த பெண்கள் உத்தமமான பாட்டும்  பாடினர்.
மைனாவின் கையில் அழகான தங்கத் தாம்பாளம் இருந்தது.
இவ்வாறு  மைனா சிவபகவானை வரவேற்கச்  சென்றாள்.
 மகாதேவரை பயங்கர வேடத்தில் கண்டு பயந்தனர் ..
அதிகமானவர்கள் பயந்து அவரவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
சிவன் மணமகன் இல்லத்திற்குச் சென்றார்.
மைனா மிகவும் வேதனைப்பட்டாள் .
அவள் பார்வதியை தன்னுடன் அழைத்துச்சென்றாள் .
மிகவும் அன்புடன்  மடியில் உட்காரவைத்து  நீலத்  தாமரை  போன்ற கண்களில்  கண்ணீர் வடித்தவாறே ,  பிரம்மா  உனக்கு கட்டழகைக்

கொடுத்துள்ளார் . அந்த முட்டாள் உன்னுடைய கணவனை எப்படி
பைத்தியக்காரனாக்கினார்.?
கற்பகவிருக்ஷத்தில் பழுக்க  வேண்டிய   கனியை ,
காட்டயப்படுத்தி  கருவேல மரக் கனியாக்கியிருக்கிறார்.
நான் உன்னுடன் மலையிலிருந்து குதித்து விடுவேன்.
நெருப்பில் எரிந்துவிடுவேன்.   சமுத்திரத்தில்  குதித்து விடுவேன்.
வீடே  பாழாநாலும்   சரி , உலகில் அவப்பெயர் வந்தாலும் சரி
அதைப்பற்றி எனக்கு சிந்தனை இல்லை.
என் உயிர்  இருக்கும்  வரை இந்த பைத்தியக்கார வரனுடன்
உன் திருமணத்தை நடக்க விடமாட்டேன்.
மைனா வருத்தப்படுவதைப் பார்த்து ,
எல்லா பெண்களும் வருத்தப்பட்டனர்.
மைனா தன்  மகளின் அன்பினால் புலம்பிக்கொண்டும்
அழுதுகொண்டும் இருந்தாள் .

சொன்னாள் :- நான் நாரதருக்கு  என்ன  கெடுதல்  செய்தேன்.
அவர் என் வாழும் வீட்டை பாழ் படுத்திவிட்டார்.
பார்வதிக்கு நாரதர்  செய்த உபதேசத்தால்
இந்த பைத்தியக்கார வரனுக்காக அவள் தவம் செய்தாள்.
உண்மையிலேயே அவருக்கு எவ்வித மோகமும் இல்லை.
மாயை இல்லை. அவரிடம் தனம் இல்லை.
அவருக்கு மனைவியில்லை.எல்லாவிதத்திலும்
ஒதுக்கப்பட்டவராக இருக்கிறார்.
அவர் மற்றோருவீட்டை பாழ் படுத்துபவராக இருக்கிறார்.
அவருக்கு  எந்தவித வெட்கமும் இல்லை. அச்சமும் இல்லை.
அவர் மலட்டுப்  பெண் போல் உள்ளார்.
அவருக்கு பிரசவ வலியின் கொடுமை தெரியாது.
.









No comments: