Thursday, January 19, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -ஐம்பத்தொன்று

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -ஐம்பத்தொன்று

     கபட  தவசி மன்னன்  தன்  நண்பனைக்கண்டு மகிழ்ந்து
அவனிடம் தன் கதையைச்  சொன்னான்.
அப்பொழுது அந்த ராக்ஷசன் ஆனந்தமடைந்தான்.
 அரசே! நீ நான் கூறியபடி வேலை செய்ததால்
 நான் விரோதியை என் வசப்படுத்திவிட்டேன்.

 இப்பொழுது நீ உன் கவலை மறந்து தூங்கு.
கடவுள் மருந்தில்லாமலேயே நோயைப்போக்கிவிட்டார்.

விரோதியை வேரோடு சாய்த்து குலத்தோடு  அழித்து,
இன்றிலிருந்து நான்காவது நாள் உன்னை சந்திப்பேன்.

இப்படி கபட தவசி  அரசனுக்கு நம்பிக்கை அளித்து ,
மஹாமாயாவியும் மிகவும் கோவமுள்ளராக்ஷசன் சென்றான்.

அவன் பிரதாப் பானுவை குதிரையுடன் நொடிப்பொழுதில்
அரண்மனையில் விட்டுவிட்டான். அரசனை ராணிக்கு அருகில்
தூங்கவைத்துவிட்டு , குதிரையை குதிரை லாயத்தில் கட்டிவைத்தான்.

பிறகு ராஜ புரோகிதனை தூக்கிக்கொண்டு சென்றான்.

மாயையால் புரோகிதனின் புத்தியை பிரமையில் ஆழ்த்தி
அவனை தன் மலை குகையில் கொண்டுபோய் வைத்தான்.

தானே புரோஹிதானாக  வடிவெடுத்து ,
அவனுடைய அழகான படுக்கையில்
போய் படுத்தான்.
 அரசன் விடிவதற்கு முன்பே எழுந்தான்.
அவன் தன்னை தன் வீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
 மனதில் கபட முனியின் மகிமையை அனுமானித்து
மெதுவாக எழுந்தான்.
பிறகு  தன்  குதிரையில் ஏறி வனத்தை அடைந்தான்.

நகரத்தில் யாருமே இதை அறியவில்லை.
மதியம் அரசன் வந்தான்.
ஒவ்வொருவீட்டிலும் உற்சவம் நடந்தது.
 வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.
அரசன் புரோஹிதனைப்பார்த்தான்.
அப்பொழுது அந்த  நினைவில் ஆச்சரியப் பட்டான்.
அரசனுக்கு மூன்று நாட்கள் ஒரு யுகம் போல் கழிந்தன.
அவனுக்கு கபட முனி நினைவாக வே புத்தி வேலை செய்தது.
கபட முனி பேசியபடி செய்கை அறிந்து
 குரு உருவத்தில்
அவனைக்கண்டு மகிழ்ந்தான்.
அவன் உடனே குடும்பத்துடன் ஒரு லக்ஷம் அந்தணர்களை
போஜனம் செய்ய அழைத்தான் .

குருவானவர் வேதங்களில் சொன்னபடி
அறுசுவை உண்டி, நான்குவகை போஜனம்,
பல கூட்டு ,கறிகள்  தயார் செய்தான்.
அவைகளை எண்ண முடியாது.
பலவித மிருகங்களின் மாமிசங்களை சமைத்தான்.
அந்த துஷ்டன் சாப்பாட்டு வகைகளில்
மாமிசங்களையும் சேர்த்துவிட்டான்.
அரசன் எல்லா அந்தணர்களையும்
 சாப்பாட்டிற்கு அழைத்தான்.
கால்களை கழுவி சாப்பிட உட்காரவைத்தான்.
 அவன் சாப்பாடு பரிமாற ஆரம்பித்ததுமே   ஒரு அசரீரி கேட்டது.
அந்தணர்களே!எழுந்து உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.
இந்த சாப்பாட்டை சாப்பிடாதீர்கள்.
இதை சாப்பிட்டால் பெரும் தீங்கு வரும்.
சமையலில் பிராமணர் கள் சாப்பாட்டில் மாமிசமும் உள்ளது.
அசரீரியை நம்பி அந்தணர்கள் எழுந்தனர்.
ராஜா வியாகூலமடைந்தான்.
அவனுடைய அறிவு   மாயையின்  மோகத்தால்
வேலை செய்யவில்லை.
அவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட வராமல் இருந்தது

அவன் கெட்டிக்கரத்தனம் .
 பிராமணர்கள் எதுவும் சிந்திக்காமல்
 கோபத்தில் சாபமிட்டனர் .
அடே முட்டாள் ராஜா!
நீ உன் குடும்பத்துடன் ராக்ஷசனாகவேண்டும்.
அடே தாழ்ந்த க்ஷத்திரியனே!நீ குடும்பத்துடன் பிராமணர்களை அழைத்து
அவர்களை அழிக்கவிரும்பியுள்ளாய்.
ஒருவருடத்திற்குள் உனக்கு அழிவு வந்துவிடும்.
தண்ணீர் கொடுக்கக் கூட
யாரும் இருக்கமாட்டார்கள்.
சாபத்தைக்கேட்டு  அரசன் மிகக் கவலை அடைந்தான்.
பிறகு மற்றொரு அழகான அசரீரி கேட்டது.
அந்தணர்களே!நீங்கள் யோசித்து சாபம் அளிக்கவில்லை.
அரசன் எந்த தவறும் செய்யவில்லை.
இந்த அசரீரி கேட்டு அந்தணர்கள்
பிரமித்து நின்றனர்.
அப்பொழுது அரசன் பாகசாலைக்குச் சென்றான்.
அங்கே சாப்பாடும் இல்லை. அந்த பிராமணனும் இல்லை.
அப்பொழுது அரசன் மிகவும் கவலைப்பட்டான்.
அவன் பிராமணர்களுக்கு அனைத்து கதைகளும் சொன்னான்.
அவன் மிகவும் பயந்து கவலையுடன் பூமியில் விழுந்தான்.
அரசே !உன்னுடைய தவறு எதுவும் இல்லை.
இருந்தாலும் கெட்டிக்காரன் அழிவதில்லை.
அந்தணர்களின் சாபம் மிகவும்  பயங்கரமானது.
அதை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது.

இப்படி சொல்லிவிட்டு எல்லோரும் சென்றுவிட்டனர்.
இந்த செய்தி கேட்டு நகர மக்கள் கவலைப்பட்டு ,
கடவுளை குறை கூறினர்.

அன்னப்பறவையாக ஆக்க வேண்டியவரை காகமாக்கிவிட்டார்.
புண்ணியாத்துமா அரசனை தெய்வமாக்கவேண்டும்.
ஆனால்
ராக்ஷசனாக்கிவிட்டார்.

புரோஹிதனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு
 காலகேது அசுரன் கபட தவசிக்கு செய்தி  அனுப்பினான்.
அந்த கபட அரசன் அனைத்து அரசர்களுக்கும்  செய்தி அனுப்பினான்.
அனைத்து அரசர்களும் படையுடன் வந்தனர்.
 அவர்கள் அந்த நகரத்தையே முற்றுகை  இட்டனர்.
தினந்தோறும் பலவிதத்தில் யுத்தம் நடந்தது.
பிராதாப் பானு , அவன் தம்பி , அவன் படைவீரர்கள்
மிகவும் வீரத்துடன் போர் புரிந்தனர்.
சத்யகேது  குலத்தில்  யாருமே பிழைக்கவில்லை.
அந்தணர்கள்  சாபம் எப்படி பொய்க்கும் ?
விரோதியை வென்று அனைத்து
அரசர்களும் நகரங்கள் அமைத்து சென்றுவிட்டனர்.

   யாக்யவல்கியர் பாரத்வாஜ முனிவரிடம் சொன்னார் ,
"பாரத்வாஜ்!
கடவுள் எதிரி ஆனால் தூசி சுமேரு மலையாக மாறும்.
அப்பாவே எமனாக மாறுவார்.
கயிறு பாம்பாக மாறும்.
முனிவரே ! கேளுங்கள் .
அதே ராஜா  தக்க சமயத்தில் குடும்பத்துடன்
ராவணன் என்ற ராக்ஷசனாக பிறந்தான்.
அவனுக்கு பத்து தலைகள் , இருபது கைகள் இருந்தன.
அவன் மிகப்பெரிய சூரவீரனாக இருந்தான்.
அரசனின் தம்பி அரிமர்தன் ,
  பலசாலி   கும்பகர்ணனாக பிறந்தான்.
அரசனின் அமைச்சர் தர்ம்ருசி
ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனாகப் பிறந்தான்.
 அவனுடைய பெயர் விபீஷணன் .
அவன் விஷ்ணுபக்தன்.
ஞானமும் விஞ்ஞானமும் அறிந்தவன்.
அரசனின் புத்திரர்களும் சேவகர்களும்
மிக பயங்கரமான அரக்கர்களாகப் பிறந்தனர்.

 அவர்கள்  அனைவரும்  பல ஜாதிகளாக,
விரும்பிய வடிவம் எடுப்பவர்களாக,
துஷ்டர்களாக, கொடியவர்களாக, அறிவற்றவர்களாக,
இரக்கமற்றவர்களாக, கொடியவர்களாக, பாவிகளாக,
உலகிற்கே துன்பம் விளைவிப்பவர்களாக, இருந்தனர்.
இந்த கொடுங்கோலர்கல்களை வர்ணிக்க இயலாது.

புலஸ்திய  ரிஷியின் பவித்திரமான,
களங்கமற்ற  இணையற்ற உயர்ந்த
குலத்தில்  பிறந்தாலும்
 அந்தணர்களின் சாபத்தின் காரணமாக
பாவிகளாயினர்.
   மூன்று சகோதரர்களும்
 பலவித கடும் தவம் செய்தனர்.
தவம் கேட்டு பிரம்மா அவர்கள் முன் தோன்றினார்.
நான் உங்கள் தவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வரம் கேள் என்றார்.
   ராவணன் அவர் பாதரவிந்தங்களைப் பற்றி சொன்னான் --
ஜகதீஸ்வரரே! நாங்கள் வானரர்கள்,மனித  இனம் தவிர
வேறு யார் அடித்தாலும்   மரணம்  அடையக்கூடாது.
இந்த வரம் அளியுங்கள்.

  சிவபகவான்   சொல்கிறார் ---நானும் பிரம்மாவும் சேர்ந்து
 ராவணன்  கோரிய வரத்தை அளித்தோம்.
அவன் மிகப் பெரிய தவம் செய்திருக்கிறான்.
பிறகு பிரம்மா கும்பகர்ணனிடம் சென்றார்.
   அந்த துஷ்டன் தினந்தோறும் ஆகாரம்  செய்தால் ,
  உலகம்  முழுவதையும் பாழாக்கிவிடுவான்.
இப்படி நினைத்து  பிரம்மா   சரஸ்வதியைத்  தூண்டி
அவன் புத்தியை மாற்றிவிட்டார்.
அதனால் அவன் ஆறுமாதம் தூங்கும் வரம் கேட்டான்.
பிறகு பிரம்மா  விபீஷணனிடம் சென்றார்.
அவன்  பகவானின் பாத தாமரையில்
 களங்கமற்ற அன்பைக் கேட்டான்.
அவர்களுக்கு வரம் அளித்துவிட்டு பிரம்மா சென்றுவிட்டார்.
மூன்று சகோதரர்களும் மகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றனர்.


மய  என்ற அரக்கனுக்கு மிகவும் அழகும்
நல்லொழுக்கத்தில்
சிறந்த ஒரு மகள்  இருந்தாள்.
அவள்பெயர்  மண்டோதரி.
   ராவணன்   ராக்ஷசர்களுக்கு   அரசன்  ஆவான்  என்று
  மயனுக்குத் தெரிந்து விட்டது.
ஆகையால் தன் மகளை அழைத்துவந்து
 ராவணனுக்கு கொடுத்தான்.
நல்ல  மனைவியைப்பெற்று  ராவணன் மகிழ்ச்சி அடைந்தான்.
பிறகு அவன் தன் இரண்டு சகோதரர்களுக்கும்
திருமணம் செய்து வைத்தான்.
 சமுத்திரத்திற்கு நடுவில் பிரம்மா
 கட்டிய  மிகப்பெரிய கோட்டை இருந்தது.

மயன்மிகப்பெரிய மாயாவி . சிறந்த கட்டிடக் கலை நிபுணன் .
 அவன் அந்தகோட்டையை மறுபடியும்  அலங்கரித்தான்.
 அதில் மணிகள் பத்தித்த  பல மாளிகைகள் இருந்தன.
பாதாள லோகத்தில் நாக குளம் வசிக்க
 போகாவதி புரி இருக்கிறது.
இந்திரலோகத்தில் இந்திரபுரி.
அதைவிட  மிக அழகான உறுதிவாய்ந்த கோட்டை
  லங்காபுரி கோட்டை புகழ் பெற்றது.
அதன் நான்கு பக்கத்திலும்  சமுத்திரத்தின்
ஆழாமான  அகழி இருந்தது.
மணிகள் பதித்த  தங்க மதில் சுவர் ,
அதன் கட்டிடக் கலை சிறப்பை வர்ணிக்க இயலாது.
  இறைவனின் தூண்டுதலால்  தோன்றிய
அரக்கர்களின் அரசன்  ராவணன்
அந்த கோட்டையில்  அந்த நகரத்தில்
   தன்  சேனையுடன்   அந்த நகரத்தில் வசிக்கிறான்
அவன் சூரன்.வீரன் ஒப்பிடமுடியா பலசாலி.
   முதலில் அங்கே ராக்ஷஸ வீரர்கள் வசித்துவந்தனர்.
தேவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர்.
இப்பொழுது அங்கே
இந்திரனின் தூண்டுதலால்
 குபேரனின் ஒரு கோடி யக்ஷர்கள் இருக்கிறார்கள்.

   ராவணனுக்கு அந்த செய்தி கிடைத்ததுமே ,
சேனையுடன் சென்று கோட்டையை முற்றுகை இட்டான்.
அந்த பெரிய பயங்கர வீரர்களையும்
அவனுடைய பெரிய சேனையையும்  பார்த்து
யக்ஷர்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிவிட்டனர்.
அப்பொழுது ராவணன் அந்த நகரம் முழுவதையும்
நன்கு சுற்றிப்பார்த்தான்.

   அவனுக்கு இடம் சம்பந்தமான கவலை போய்விட்டது.
அந்த நகரத்தின் இயற்கையான அழகைக் கண்டு
பாதுகாப்பானதாக உணர்ந்து அதை  தன்  நாட்டின்
.தலை நகர மாக்கினான் .
தகுதிக்குத்தகுந்தபடி  வீடுகளை பங்கிட்டு எல்லா அரக்கர்களையும்
மகிழ்வித்தான். அவன் குபேரன் மீது படையெடுத்து
அவன் புஷ்பக விமானத்தை  தனதாக்கிக் கொண்டான்.

பிறகு விளையாட்டாக கைலாய மலையை தூக்கிக் கொண்டான்.
தன பூஜை வலிமையை அளவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வந்துவிட்டான்.
நாளுக்கு நாள் அவனுடைய  சுகம் ,சொத்து , மகன்கள், சேனை,உதவியாளர்கள்,வெற்றி ,பலம், வீரம் அறிவு ,புகழ் அனைத்தும் அதிகரித்துக்கொண்டே  இருந்தது. ஒவ்வொரு லாபத்திலும் பேராசை
அதிகரிக்கிறது.
 மிகவும் பலசாலியான கும்பகர்ணன் அவன் சகோதரன். அவனுக்கு இணையான  போர்வீரன் உலகத்தில் பிறக்கவே இல்லை.
அவனுடைய வீரத்தை வர்ணிக்க இயலாது.
அவன் மது குடித்து ஆறுமாதங்கள் தூங்குவதை வழக்கமாகக்கொண்டவன்.
அவன் தூங்கி எழுந்ததுமே மூவுலகும் அவனைக்கண்டு பயப்படும்.
அவன் தினந்தோறும் சாப்பிட்டால் உலகம் முழுவதும் சீக்கிரமே நஷடமாகிவிடும்.

ஸ்ரீ லங்காவில் இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையில் வீரர்கள்
இருந்தனர்.

மேகநாதன் ராவணனின் மூத்த மகன். அவனும் மிகப்பெரிய போர்வீரன்.
போரில் அவனை யாரும் எதிர்க்க முடியாது. அவன் பயத்தால் ஸ்வர்கத்தில் தினம் பயந்து ஓடும் காட்சிகள் நடக்கும்.

இவர்களைத்த தவிரவும்  துர்முக் ,அக்கம்பன்,வஜ்ரதந்த் ,தூமகேது அதிகாய்
.முதலியஸ் அநேக வீரர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தனியாகவே
உலகத்தை வெல்லமுடியும்.
எல்லா ராக்ஷஸர்களும் தன்  மனம் விரும்பும் வடிவம் எடுக்க முடியும்.
அவர்கள் அசுர  மாயை அறிந்தவர்கள்.
அவர்களுக்கு தயை -தர்மம் என்பது கனவிலும் தெரியாது.

ஒருமுறை  ராவணன் தான் ராஜ தர்பாரில் தன்னுடைய எண்ணிக்கையில் அடங்கா   குடும்பத்தைப் பார்த்தான்.







No comments: