Saturday, January 7, 2017

रामचरित मानस -பாலகாண்டம் -முப்பத்திரண்டு --துளசிதாஸ் ராமசரித்மானஸ்

रामचरित मानस -பாலகாண்டம் -முப்பத்திரண்டு --துளசிதாஸ் ராமசரித்மானஸ்


       பிரம்மா முதலிய மற்ற தேவர்கள்  எல்லோரும்
 செய்தி கேட்டு வைகுண்டத்திற்குச்  சென்றனர்.
அங்கிருந்து  விஷ்ணுவும்  பிரம்மாவும்
 மற்ற எல்லா தேவர்களும்  கிருபையின் இருப்பிடமான
 சிவபகவானை சந்திக்கச் சென்றனர்.

அங்கு எல்லோரும் தனித்தனியாக
சிவனை  வணங்கினர்.
அப்பொழுது சந்திரனை
நகையாக அணிந்துள்ள சிவன்
மகிழ்ச்சி  அடைந்தார்.
அவர் தேவர்களிடம் கேட்டார்--
நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள்.
பிரம்மா சொன்னார்--
இறைவா !நீங்கள் அந்தர்யாமி .
பக்தி  வசப்பட்டு உங்களிடம் வேண்டுகிறேன்.
சங்கரரே ! தலைவரே ! எல்லா தேவர்களும்
தங்கள் கண்களால் உங்கள் திருமணத்தைப்
பார்க்க  விரும்புகிறார்கள். எல்லோரின் மனதிலும்
   அதிக  உற்சாகம்   ஏற்படுகிறது.
காமனின் ஆணவத்தை   போக்கியவரே !
நீங்கள்  காமதேவனை பஸ்மாமாக்கி ,
 ரதிக்கு வரமளித்து நல்லதே செய்துள்ளீர்கள்.
நீங்கள் எல்லோருக்கும் உங்கள்
திருமணக்காட்சியை காட்டுங்கள்.

நாதா ! முதலில் தண்டனை அளித்து கிருபை காட்டுவதுதான்
    மேன்மை பொருந்திய கவானின் இயற்கை குணம்.
பார்வதி தேவியானவர் கடும் தவம் செய்திருக்கிறார்.
நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிராம்மாவின் வேண்டுகோளை ஏற்று ,
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின்  வாக்கை நினைத்து
சிவ பகவான் அப்படியே  ஆகட்டும் என்றார்.

அப்பொழுது தேவர்கள் முரசு அடித்தனர்.
பூ மாரி பொழிந்து   ஜய கோசமிட்டனர்.
 தகுந்த சமயமறிந்து சப்தரிஷிகள் அங்கு வந்தனர்.
பிரம்மா அவரை உடனே ஹிமாச்சலத்திற்கு அனுப்பினார்.
முதலில்  அவர்கள் பார்வதியை சந்தித்தனர்.
அங்கு அவர்கள் வஞ்சனை கலந்த பரிகாசமான
மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் பேசினார்கள்.
நாரதரின்  உபதேசத்தால்  நீங்கள்
நாங்கள் சொல்வதைக்  கேட்கவில்லை .
மகாதேவர் காமதேவனையே  பஸ்மமாக்கிவிட்டார்.
இப்பொழுது நீங்கள் எடுத்த சபதம் பொய்யாகிவிட்டது.

  இதைக்கேட்டு   பார்வதிதேவி  புன்சிரிப்புடன் சொன்னார் _-

ஞானம் பெற்ற முனிவர்களே ! நீங்கள் கூறியது உண்மையே.
நீங்கள் அறிந்தது  காமதேவனை எரித்த நிகழ்ச்சிதான்.
இப்பொழுதுதான்  எரித்திருக்கிறார் . இப்பொழுதுவரை அவர்
எவ்வித மாற்றமின்றிதான் இருந்தார். காமமுற்றிருந்தார்.
சிவபகவான்  எப்பொழுதுமே , யோகி ,பிறவியில்லாதவர் ,
எந்தவித நிந்தனைக்கும் உட்படாதவர், கமமில்லாதவர்.
போகசுகம் விரும்பாதவர்.
இதெல்லாம் அறிந்துதான் நான்
அவரை மனதாலும் , வாக்காலும் , செயலாலும்
அன்புடன் அவருக்கு பணிவிடை செய்திருக்கிறேன்.
முனிஸ்வரர்களே !  கேளுங்கள்.
கிருபைக்கடலான  பகவான்  என்னுடைய
 பிரதிக்ஞையை  சத்தியமாக்குவார்.
நீங்கள் அவர் காமதேவனை பஸ்மாமாக்கினார் என்பதே
தங்களின்  மிகப் பெரிய  அறிவின்மையைக் காட்டுகிறது.
முனிவர்களே !  பனி கட்டாயம்  நெருப்புக்கு அருகில்
செல்லமுடியாது.  சென்றால் கட்டாயம் அழிந்து விடும் .
காம்தேவனுக்கும் சிவபகவானுக்கும் சம்பந்தம் இப்படித்தான்.
என்றே அறிய வேண்டும்.
 பார்வதி தேவியின்  வாக்கையும் அவருடைய அன்பையும் ,
சிவனின்  மேல் அவருக்குள்ள நம்பிக்கையும் கண்டு
முனிவர்கள் மிகவும்  மகிழ்ந்தனர்.

அவர்கள் பவனியைவணங்கி ,
ஹிமாச்சலனை  சந்திக்கச் சென்றனர்.
அவர்கள் பர்வதராஜன் ஹிமாச்சலத்திடம்
எல்லா விவரங்களையும்   சொன்னார்கள் .
காமதேவன் எறிந்த நிகழ்ச்சி கேட்டு ஹிமாச்சல் மிகவும் வருந்தினார்.
அப்பொழுது முனிவர்கள் ரதிவரம்பெற்ற நிகழ்வைக் கூறினர்.
அதைக்கேட்டு ஹிமவான் மகிழ்ந்தார்.

No comments: