துளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம் அறுபத்தாறு
ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும் ஜனகபுரியையும் ,
வில் வேள்விப்போட்டி நடந்த இடங்களையும் பார்த்து மிக மகிழ்வுடன் திரும்பினர். அவர்களுன் வந்த ஜனகபுரியின் பாலகர்களிடம் மிக அன்பாகப் பேசி விடைபெற்றனர்.
மிக தாமதமாக திரும்பியதால் அவர்களுக்கு ரிஷியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற பயம் . அதனால் மிகவும் பணிவாக சென்று ரிஷியை வணங்கினர்.
ரிஷியின் அனுமதி பெற்று அமர்ந்ததும் ,
ரிஷி பல புராணக் கதைகளைக் கூறிவிட்டு
படுத்துக்கொண்டார். ராமர் பகவானாக இருந்தும் இரவு
அதிக நேரம் வரை அவரின் கால்களை அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் ரிஷியே அவரை தூங்குவதற்கு அனுப்பினார்.
லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரின் சரணங்களைத்
தொட்டு வணங்கி கால் அமுக்கினார்.
அவ்வாறு செய்ததில் அவருக்கு அன்பும் பயம் கலந்த மரியாதையும் இருந்தது.
பின்னர் ராமரின் கட்டளைபெற்று தூங்கினார்.
விடிந்ததும் சேவல் கூவியதுமே லக்ஷ்மணர் எழுந்தார்.
பிறகு குரு எழுவதற்கு முன்பே ராமர் எழுந்தார்.
காலைக்கடன்களை முடித்து ஸ்நானம் செய்து
நித்ய கர்ம அனுஷ்டானங்களை முடித்து
ரிஷியை வணங்கினார்.
பிறகு ரிஷியின் அனுமதி பெற்று
பூஜைக்கு மலர் எடுக்கச் சென்றனர்.
அவர்கள் அரசனின் தோட்டத்தைப் பார்த்தனர். அங்கு வசந்தகாலக் காட்சிகள் மனத்தைக் கவர்ந்தன.
மனதை கொள்ளை கொள்ளும் அநேக மரங்கள் நடப்பட்டிருந்தன.
பலவண்ணங்களில் மிக அழகான கொடிமண்டபங்கள் நிழல்கள் அளித்து ரம்யமாக இருந்தன.
அங்குள்ள எழில் நிறைந்த மரங்களின் செழுமை ,
புதிய இலைகள்,பழங்கள் ,பூக்கள்
அனைத்துமே கற்பக விருக்ஷத்தை நாணச் செய்கின்றபடி
இருந்தன.
குயில்,கிளிகள்,சகோர் முதலியே பறவைகளின்
இனிய ஒலிகள் ,வண்டுகளின் ரீங்காரம் ,
மிகவும் ரம்யமாக இருந்தன.
தோட்டங்களும் நதிகளையும் பார்த்து
பிரபு ராமச்சந்திரனும்
லக்ஷ்மணனும் மகிழ்ந்தனர்.
ராமருக்கே ரம்யமாக இருந்த
தோட்டம் மிக ரம்யமானதே.
நான்கு பக்கமும் பார்த்து
தோட்டக்காரர்களிடம் கேட்டு ,அறிந்து
மிக சந்தோஷத்தோடு இலைகளும் பூக்களும் பறித்துக்கொண்டனர்.
அதே சமயம் சீதை,
அங்கே பார்வதி தேவியை பூஜை
செய்வதற்காக வந்தார் .
சீதையுடன் எல்லா இளமை ததும்பும்
அழகான தோழிகள் மதுரமான குரலில் பாட்டு பாடிக்கொண்டு வந்தனர்.
. கிரிஜாவின் மிக அழகான ஆலயம் இருந்தது.
தோழிகளுடன் நதியில் குளித்துவிட்டு ,
சீதை மகிழ்ச்சியுடன்
கிரிஜா கோயிலுக்கு சென்றாள்.
அவர் மிகவும் அன்புடன் பூஜை செய்து
தகுந்த வரன் அமைய வேண்டினாள்.
ஒரு தோழி சீதையை விட்டுவிட்டு
பூந்தோட்டத்திற்குச்
சென்றாள்.
அவள் அங்கே ராமரையும் லக்ஷ்மணனையும் பார்த்தாள். உடனே மிக மகிழ்ந்து சீதையிருக்குமிடம் சென்றாள்.
அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் வருவதைப் பார்த்து
தோழிகள் அவளிடம் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன
என்று கேட்டனர்.
அவள் இரண்டு அரசகுமாரர்கள்
தோட்டத்தைப் பார்க்க வந்துள்ளனர்.
அவர்கள் எல்லாவிதத்திலும் அழகானவர்கள்.
அவர்களில் ஒருவர் கருப்பாகவும் மற்றவர்
வெள்ளையாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் அழகை நான் எப்படி வர்ணிப்பேன் ?
கண்கள் பேசமுடியாது,
சொல்லிற்கு கண்கள் கிடையாது.
இதைக்கேட்டதும் சீதை மனதில் ஏற்பட்ட ஆனந்தம் கண்டு ,
எல்லா தோழிகளும் மிகவும் மகிழ்ந்தனர்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,
இவர்கள் விஷ்வாமித்திரருடன் வந்த ராஜகுமாரர்கள். அவர்கள் தங்கள் அழகால் நகரத்தின்
ஆண்கள் -பெண்கள் அனைவரையும்
வசப்படுத்திவிட்டனர்.
எல்லா இடங்களிலும் ,அனைவரும்
இவர்கள் இருவரின் அழகைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
கட்டாயம் அவர்களைப் பார்க்கவேண்டும் .
அவர்கள் பார்க்கத்தக்கவர்கள் .
அவர்களின் பேச்சு சீதைக்கு அவர்களைப் பார்க்கவேண்டும்
என்ற ஆவலைத் தூண்டியது.
அந்த அன்பான தோழிக்குப் பின் சீதை சென்றாள் . அவளின் முன்பே இருந்த அன்பை,யாரும் அறியவில்லை.
நாரதரின் கூற்றை நினைத்து சீதையின் மனதில் புனிதமான காதல் உண்டாகியது.
அவள் பயந்த மான் இங்கும் அங்கும் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள் .
கை வளையல்கள் , சலங்கை ,ஒட்டியாணம் ஆகியவற்றின் ஒலி கேட்டு ராமர் லக்ஷ்மணனிடம் இந்த ஓசைகள் காமதேவன் உலகத்தை வெற்றி கொள்ள உறுதியுடன் இசைப்பது போல் உள்ளது.
இப்படி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தார்.
சீதையின் நிலவு முகத்திற்கு அவருடைய கண்கள்
சகோர பறவை ஆகிவிட்டது.
அழகான கண்கள் நிலைத்து நின்று பார்த்துக்கொண்டிருந்தன.
சீதையின் அழகைக் கண்டு ராமர் மிகவும் ஆனந்தமடைந்தார்.
மனதில் சீதையின் அழகைப் புகழ்ந்தார். ஆனால்
வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.
அந்த அழகுக்கு ஈடு-இணை இல்லாமல் பிரம்மா தன் முழுத்
திறமையையும் பயன் படுத்தி உலகுக்கு காட்டியதுபோல்
சீதையின் அழகு இருந்தது.
அழகுக்கே அழகு தரும் அழகு சீதையின் அழகு.
அழகு என்ற பவனம் இருட்டாக இருந்தது. இப்பொழுது
சீதையின் அழகுச் சுடர் எரிந்து அதை ஒளிமயமாக்கியது போன்றிருந்தது.
எல்லாவுடமைகளையும் கவிஞர்கள் கையாண்டு எச்சலாக்கிவிட்டனர்.
நான் ஜனகரின் மகள் சீதைக்கு
எதை உவமையாக்க முடியும்.
இவ்வாறு ராமர் மனதில் சீதையின் அழகை வர்ணித்துக்கொண்டு தன் தம்பி லக்ஷ்மணனிடம்
சொன்னார்,"தம்பி லக்ஷ்மணா !இவள் ஜனகரின் மகள்.
இவளுக்காகத்தான் வில் உடைக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தோழிகளுடன் இவள் கெளரி பூஜை செய்ய வந்துள்ளாள். இவள் பூந்தோட்டத்தை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளாள்.
இவளுடைய தெய்வீக அழகைக் கண்டு என்னுடைய புனித மனதில் காதல் உண்டாகிவிட்டது. இந்த எல்லா காரணங்களும் பிரம்மா அறிந்துதான் உள்ளார்.
தம்பி!என்னுடைய வலது பக்க அங்கங்கள் துடிக்கின்றன.
அது மங்களம் தரக்கூடியதே.
ரகுவம்சத்தின் கால்கள் தீய வழியில் செல்லாது.
இது இயற்கை யான ரகுவம்ச குணம்.
கனவிலும் அடுத்த பெண்ணைப் பார்க்காது என்பது என் மனதின் திடமான நம்பிக்கை.
போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாதவர்கள்,
அடுத்தவன் மனைவியை ஏறிட்டு பார்க்காதவர்கள்,
பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாதவர்கள்
உயர்ந்த மனிதர்கள் . இப்படிப்பட்ட மனிதர்கள் உலகில்
அதிகமாக இல்லை.
இவ்வாறு ராமர் லக்ஷ்மனனுடன் பேசிக்கொண்டிருந்தாலும்
அவர் மனம் சீதையை நோக்கிச் சென்றது. அவளுடைய முக அழகு என்ற மகரந்தத்தில் வண்டுபோல் மனம் அந்த அழகை
ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.
சீதையும் ஆச்சரியத்துடன் நாலா பக்கங்களிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.மனதில் அரச குமாரர் எங்கே சென்றார் என்ற கவலை சுற்றிக்கொண்டிருந்தது.
மான்விழியால்,சீதை எங்கு பார்த்தாலும் வெள்ளைத்தாமரை வரிசை பொழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது தோழிகள் கொடியின் மறைவில் இருந்து ராமரையும் லக்ஷ்மணனையும்
காட்டினார்கள். அவர்கள் அழகைக் கண்டு மனதில் பேராசை உண்டாகியது. புதையலைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த ராமரின் அழகைகண்டு கண்களின் இமைகள் மூட மறந்தன. அதிக அன்பின் காரணமாக
உடல் தன் வசம் இழந்தது . குளிர்கால நிலவை மெய்மறந்து சகோரப் பறவை பார்ப்பதுபோல் சீதை நிலை.
கண்கள் வழியாக ஸ்ரீ ராமரை இதயத்தில் கொண்டுவந்து
கண் இமைகளை மூடிக்கொண்டாள்.
சீதை அன்பின் வசத்தில் இருப்பதைக் கண்டு தோழிகள் எதுவும் பேசவில்லை.

No comments:
Post a Comment