रामाचारितमानस --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்திரெண்டு ,
புத்திரர்கள்-பேரன்கள் , குடும்ப உறவுகள்,
சேவகர்கள் ,குவியலாக இருந்தனர்.
அரக்கர்களின் இனங்களை எப்படி கணக்கெடுக்க முடியும்?
தன்னுடைய சேனையைப் பார்த்து ஆணவ
குணம் கொண்ட ராவணன் சொன்னான் :-"அரக்கர் படைகளே !
கேளுங்கள்.
தேவர்கள் நம்முடைய எதிரிகள்.
அவர்கள் நேருக்குநேர் போரிடமாட்டார்கள்.
சக்திவாய்ந்த விரோதிகளைக்கண்டு
பயந்து ஓடிவிடுவார்கள்."
அவர்களுடைய மரணம் ஒரே ஒரு உபாயத்தால் தான் முடியும்.
நான் உனக்களுக்கு அறிய/ புரிய வைக்கிறேன்.
கேளுங்கள்.
அவர்களுக்கு சக்தி அளிக்கின்ற பிராமண போஜனம் ,
யாகம் ,வேள்வி ,சிராத்தம் இந்த எல்லாவற்றிலும்
சென்று இடையூறு செய்யுங்கள்.
பசியால் பலஹீனமான தேவர்கள் சஹஜமாக என்னை சந்திக்க வருவர்,
அப்பொழுது அவர்களைக்கொன்று விடுவேன் அல்லது
முற்றிலும் அடிமையாக்கி விட்டுவிடுவேன்.
பிறகு மேகநாதனை அழைத்து அவன் பலத்தினை வர்ணித்து ,
விரோதி கருத்துக்களை தூண்டிவிட்டு ,
கற்றுக்கொடுத்து சொன்னான் --மகனே! போரில் தீரனும் பலசாலியாக விளங்கும் தேவர்களை முதலில் வென்று கட்டி கொண்டுவரவும்.
மகன் தந்தையின் கட்டளையை சிரமேற்கொண்டான் .
இவ்வாறு அனைவருக்கும் கட்டளை இட்டு ,
தானும் கதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் .
ராவணன் செல்வதால் பூமியே அதிர்ந்தது.
அவன் கர்ஜனையால் தேவப்பெண்களின் கர்ப்பம் கலைந்தது.
ராவணன் மிக கோபமாக வருவதறிந்து
தேவர்கள் சுமேரு மலையின் குகையில்
ஒழிந்து கொண்டனர்.
ராவணன் திக்கு பாலகர்களின் அழகான லோகங்கள்
அனைத்தும் சூன்யமாக இருப்பதைக் கண்டான்.
அவன் மிகப்பெரிய சிங்க கர்ஜனை எழுப்பி ,
தேவர்களுக்கு அறைகூவல் விடுத்து திட்டினான்.
யுத்தம் செய்யும் மதம் பிடித்து மதம் பிடித்த யானை போன்று ,
தன்னுடன் போர் புரியும் தகுந்த இணையைத் தேட ஆரம்பித்தான்.
ஆனால் அவனுக்கு இப்படிப்பட்ட போர்வீரன் எங்கும் கிடைக்கவில்லை.
சூரியன்,நிலவு,வாயு ,வருணன்,குபேரன் ,அக்னி ,காளான், கின்னரர்கள்,
சித்தர்கள்,மனிதர்கள்,தேவர்கள், நாகர்கள் எல்லோரின் பின்னால்
மிகவும் பிடிவாதமாகச் சென்றான். பிரம்மாவின் படைப்பில் உடல் தரித்த
ஆண்களும் பெண்களும் ராவணனின் ஆதிக்கத்தில் வந்து விட்டனர்.
அனைவரும் அவனுக்கு பயந்து அவன் கட்டளைக்கு கீழ் படித்தனர்.
தினந்தோறும் வந்து அவன் பாதங்களை வணங்கினர்.
அவன் தன் புஜபலத்தால் உலகம் முழுவதையும் வசப்படுத்தினான்.
யாரையும் சுதந்திரமாக இருக்கவிடவில்லை. உலகத்திற்கே பேரரசனாகி ராவணன் தன் விருப்பப்படி ஆட்சி செய்ய ஆரம்பித்தான்.
தேவர்கள், யக்ஷர்கள்,கந்தர்வர்கள்,மனிதர்கள், கின்னரர்கள்,மற்றும் நாககன்னிகைகளையும் மற்ற அதிகமான அழகிய மற்றும் உத்தமமான பெண்களை தன் புஜ வலிமையால் வென்று திருமணம் செய்துகொண்டான்.
அவன் மேகநாதனிடம் சொன்னதை அவனே முன்பே செய்து விட்டான்.
ராவணன் செய்வதில் தான் தாமதம்.அவன் கீழ்ப்படிதலில்
கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை.
மேகநாதனிடம் அவன் இட்ட கட்டளைப்படி , அவன் செய்த செயல்களைக் கேளுங்கள்.
எல்லா ராக்ஷஸக் கூட்டமும் பார்க்க பயங்கரமாக இருந்தன.
அவர்கள் மஹா பாவிகள். தங்கள் மாயையால்
அநேகவிதமான வடிவங்கள்
எடுப்பவர்கள். .
தர்மத்தின் வேரறுப்பவர்கள்.
அவர்கள் வேதத்திற்கு எதிரான வேலை செய்பவர்கள்.
எந்த நகரத்தில் , கிராமங்களில் பசுமாடுகளும் அந்தணர்களும் இருக்கிறார்களோ அவைகளை எரித்துவிடுவார்கள்.
எங்குமே நல்லவை நடக்க விடுவதில்லை.
பிராமண போஜனம் , வேள்வி , சிராத்தம் எதையும்
நடக்கவிடாமல் தடுத்தனர்.
எங்குமே குருபக்தி, கடவுள் பக்தி ,கிடையாது.
வேதங்கள்,புராணங்கள் கனவிலும் கேட்க முடியாது.
ஜபம்,யோகம், தவம் வைராக்கியம் போன்றவை நடப்பதை அறிந்தால்
உடனே ராவணன் அங்கே சென்றுவிடுவான். எதையும் நடத்தவிடமாட்டான்.
எல்லோரையும் அழித்துவிடுவான் . உலகில் தர்மம் என்பதைக் கேட்க எதுவுமே நடப்பது இல்லை.
வேதங்கள் மற்றும் புராணங்கள் பற்றி பேசுவோருக்கு அதிக துன்பங்கள் தருவான் . அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவான்.
ஹிம்சைதான் அவர்களுக்கு மிக அன்பான தாக இருந்தது. அவர்கள் செய்யும் பாவச் செயல்களுக்கு வரம்பே கிடையாது. அவைகளை வர்ணிக்கவும் முடியாது.

No comments:
Post a Comment