Monday, January 2, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --இருபத்தைந்து.

 
ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --இருபத்தைந்து.

  சிவபகவன்  பார்வதி தேவியிடம்  ஹரிபகவானின்
ரசம் நிறைந்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

  தக்ஷண்  மக்களின் அதிபதி ஆனார்.
பிரம்மா  தக்ஷணை பிரஜாபதியின் தலைவர் ஆக்கினார்.
இவ்வளவு  பெரிய அதிகாரம் ஆட்சி பெற்றதும்
அவருக்கு அகங்காரம் உண்டாகியது.
 உலகில் அதிகாரம் , செல்வாக்கு பெற்று ,
ஆணவமாக இல்லாதவர்கள் தோன்றவில்லை.
தக்ஷண்  எல்லா முனிவர்களையும் அழைத்து
மிகப் பெரிய யாகம் செய்ய ஆரம்பித்தான்.
யாகத்தில் பங்கு பெரும் தேவர்களை
எல்லாம்  மிக மரியாதையுடன் அழைத்தான்.
கின்னரர்கள், நாகர்கள்,சித்தர்கள்,கந்தர்வர்கள்,
எல்லா தேவர்களும்  தங்கள் மனைவியுடன்
தக்ஷண்ணின்   வேள்வியில் பங்கு கொள்ள  தங்கள்

விமானங்களை அலங்கரித்துக் கொண்டு  புறப்பட்டனர்.

விஷ்ணு, பிரம்மா, மகாதேவன் மூவரும்
அழைப்பில்லாததால்  செல்லவில்லை.

 தக்ஷகுமாரி   பலவித  அழகான  விமானங்கள்
ஆகாயத்தில்  பறந்துகொண்டிருப்பதப் பார்த்தாள்.
தேவலோக அழகிகள் இனிமையான
 பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களின் பாடல்கள் கேட்டு முனிகளின் தியானம் கலைந்தது.

சதி சிவனிடம் இதைப்பற்றி  கேட்டார்.
 சிவன் தக்ஷனின் யாகம் பற்றி கூறினார்.
அப்பாவின் யாகம் செய்வதறிந்து தேவி மகிழ்ந்தார்.
சிவன் அனுமதி அளித்தால் தானும் வேள்வியில்
கலந்து தன தந்தையின் வீட்டில் சில நாட்கள்
இருந்து வரலாமே  என்று  நினைத்தார்.

அவர் மனதில் கணவனால் தியாகம் செய்யப்பட்ட
மிகப்பெரிய துயரம்  இருந்தது.
ஆனால் தன தவறை உணர்ந்து பேசாமல் இருந்தார்.
தன் ஆர்வத்தை அடக்கமுடியாமல்
சதிதேவி  தன் அச்சம், நாணம் போன்றவற்றை விட்டு விட்டு
அன்பான உள்ளம்கவரும் விதத்தில்  தன்  தந்தை வீட்டிற்குச் செல்ல
அனுமதி கேட்டார்.
என் தந்தையின் வீட்டில் மிகப்பெரிய உத்சவம் நடக்கிறது.
எனக்கு செல்ல அனுமதி கொடுங்கள்.
நான் மரியாதையுடன் அங்கு செல்கிறேன்.
 சிவன் சொன்னார்,   நீ கேட்பது நல்லதுதான்.
நானும் விரும்புகிறேன்.
ஆனால் உன் தந்தை என்னை அழைக்கவில்லை.
மற்ற மகள்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
நம் விரோதத்தின் காரணமாக அவர் உன்னையும் மறந்துவிட்டார்.
ஒரு முறை பிரம்மனின்  சபையில் எனக்கு அவர்
நடத்தையால் கோபம் வந்தது. அந்த காரணத்தினால் தான்
இப்பொழுதும் எப்பொழுதும் அவமதிக்கிறார்.
பவானி! அழைப்பின்றி  சென்றால் மானமரியாதை நமக்கு இருக்காது.
சீலமும் அன்பும் கிடைக்காது.

 அழைப்பில்லாமல் நண்பர்கள்,
யஜமானர்,அப்பா, குரு வீட்டிற்கு செல்லலாம். இருப்பினும்
அழைப்பில்லாமல் செல்வது சரியல்ல.
சிவபகவான் பல விதமாகக் கூறியும் சதி செல்லவே விரும்பினாள்.
அப்பொழுது  மூவுலக தேவன் மகாதேவன் தன் முக்கிய
பூதகணங்களுடன்  அவரை அனுப்பினார்.

பவானி தந்தை வீட்டிற்குச் சென்றாலும் ,
தக்ஷணின்  அச்சம் காரணமாக
 யாருமே அவரை வரவேற்கவில்லை.
அம்மா மற்றும் சகோதரிகளின் பாசமும் மரியாதை மட்டும் கிடைத்தன.

தந்தை நலம் கூட விசாரிக்கவில்லை.
சதியைப்பார்த்ததும் அவருக்கு கோபம் வந்துவிட்டது.
பவானி வேள்விக்கூடத்திற்கு சென்றால் அங்கும்
சிவபகவானின் பங்கு இல்லை.
அப்பொழுது அவருக்கு சிவன் சொன்னது புரிந்தது.
கணவனுக்கு அவமானம்  நேர்ந்ததை அவரால்  சகிக்கமுடியவில்லை.
கணவனால் கைவிட்டபோது கூட இவ்வளவு துன்பம் அடையவில்லை.
அதைவிட அதிக  துன்பம் இப்பொழுது மனதில் ஏற்பட்டது.
 கணவனுக்கு நேர்ந்த  அவமானம்  பொறுக்கமுடியவில்லை .
 உலகில் பலவித  துயரங்கள் இருக்கின்றன.
ஆனால் இன-ஜாதி  அவமானம் மிகவும் கடினமானது.
இதை நினைத்து பவானிக்கு மிகவும் கோபம் உண்டாகியது.
அம்மா அவருக்கு மிகவும் அறிவுரை கூறினார்.
இருந்தாலும் சிவனை அவமதித்ததை சகிக்க இயலவில்லை.
அவர் தக்ஷண்ணின் சபையில் கோபமாக  பேசினாள்.:-

      சபையின் அங்கத்தினர்களே! முனிவர்களே!  கேளுங்கள்.
சிவபகவானை நிந்தித்தவர்களும் ,
நிந்தனையைக் கேட்டவர்களும் ,
என் தந்தையும் நன்றாக வருந்துவீர்கள்.
 அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.
   சாதுக்கள், சிவன், விஷ்ணுவின் நிந்தனை கேட்டவர்கள்
தங்கள் நாக்கை வெட்டிக்கொள்ளுங்கள்  அல்லது
இங்கிருந்து ஓடிவிடுங்கள்.
 மூவுலக அரக்கர்களைக் கொன்ற மகேஸ்வரர்
 அனைத்து உலகிற்கும் ஆத்மா. உலகத்தின் தந்தை.
அனைவருக்கும் நல்லது செய்பவர்.
எனது மந்தபுத்தியுள்ள  தந்தை அவரை நிந்திக்கிறார்.
எனது இந்த உடல் தக்கனின் வீரியத்தால் உண்டானது.
ஆகையால்  நிலவை நெற்றியில் வைத்துள்ள
காளைவாகனன்  சிவனை இதயத்தில் வைத்து ,
நான் இந்த உடலை விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு சொல்லி தேவி வேள்வித்தீயில் விழுந்து
தன்னை எரித்துக்கொண்டார்.
 வேள்வி சாலை முழுவதும் அபயக்குரல் எழுப்பியது. சதியின்மரணத்தைக் கேட்டதும் சிவகணங்கள்  வேள்வியை நாசப்படுத்தின.
யாகத்தின் அழிவை ப்ருகுமுனிவர்  பாதுகாத்தார்.
  சிவன் இந்த செய்தி அறிந்ததுமே  வீரபத்திரரை அனுப்பினார்.
அவர் அங்கு  சென்று  வேள்வியை நாசப்படுத்தினார்.
எல்லா தேவதை களுக்கும்  தகுந்த  தண்டனை அளித்தார்.
சிவதுரோகிகளுக்கு நேர்ந்த  அதே உலகப்புகழ்பெற்ற  கதியே
தக்ஷணுக்கும்  ஏற்பட்டது,
இந்த வரலாறு அனைவரும்
அறிந்து இருப்பதால்
சுருக்கமாக வர்ணித்தேன்.

 சதி இறக்கும்போது  ஒவ்வொவொரு
ஜன்மத்திலும்  சிவபகவானின் மீது
பற்று இருக்கவேண்டும்  என்று ஹரியிடம் வரம் கேட்டாள்.
இந்த காரணத்தால் இமயமலை சென்று பார்வதியாக பிறந்தாள்.

உமா இமயமலையில் பிறந்ததுமே அங்கு செழிப்பும் தோன்றின.

முனிவர்களுக்கு அழகான ஆஷ்ரமங்கள்தகுந்த இடங்கள் உண்டாகின.
 பலவிதமான புதிய புதிய மரங்கள் தோன்றின. மரங்கள் பூத்துக்குலுங்கின.
பலவித விளைவுயர்ந்த கற்களின் சுரங்கங்கள் தோன்றின.

எல்லா நதிகளிலும் பவித்திரமான நீர் ஓடியது. பறவைகள்,, மிருகங்கள்,
வண்டுகள் அனைத்தும் மகிழ்ந்தன. மலையில் அனைவரும் ஒருவருக்கொருவர்  அன்பாகப் பழகினர்.

பார்வதியின் வருகையால் மலை மிக அழகாக காட்சி அளித்தது.
ராமரின் பக்தி பெற்று பக்தர்கள் மகிழ்வதுபோல் மகிழ்ந்து
அழகாக காட்சி அளித்தது.
பிரம்மா  முதலிய தேவர்கள் புகழ்ந்து பாடினர். தினந்தோறும்
புதிய புதிய மங்கள உத்சவங்கள் நடந்தன.















No comments: