ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் --ஐம்பத்தெட்டு
ஒரு நாள் மகனை குளிப்பாட்டி, அலங்கரித்து
தொட்டிலில் தூங்கவைத்தாள்.
பிறகு தன் குலதெய்வத்தை பூஜை செய்ய குளித்தாள்.
பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தாள்.
இதை எல்லாம் முடித்து சமையல் அறைக்குச் சென்று திரும்பினாள்.
பிறகு மகனைப்பார்க்கச் சென்றால், அங்கே மகன்
கடவுளுக்கு அர்பித்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அம்மாவிற்கு பயம் தோன்றியது.
குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வந்தேன்.
அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.
இந்த தொட்டிலில் தூங்கிய குழந்தை ,
பூஜை அறைக்கு எப்படி யார் கொண்டுவந்து விட்டார்கள்?
அவள் உடல் நடுங்கியது. மனம் தைரியத்தை இழந்தது.
நான் அங்கும் இங்கும் இரண்டு
பாலகர்களைப் பார்த்தேனா ?
இது மன பிரம்மையா?
அல்லது எதோ விஷேசமான காரணமாக இருக்குமா ?
பிரபு ராமச்சந்திரர் அம்மா பயப்படுவதைப் பார்த்து சற்றே
புன்முறுவல் பூத்தார்.
பிறகு தன் தாயாருக்கு தன்
உண்மையான சுயரூபத்தைக் காட்டினார்.
மிகப்பெரிய அற்புதமான காட்சி.
அந்த மிகப்பெரிய தோற்றத்தில் எண்ணிக்கையில் அடங்கா
சூரியன், நிலவுகள்,சிவன், பிரம்மா ,அதிகமான மலைகள்
நதிகள் , சமுத்திரங்கள்,பூமி, வனம் , காலங்கள், செயல்கள், குணங்கள்,
ஞானங்கள், இயற்கை சுவபாவங்கள் ,
மேலும் இதற்கு முன் பார்க்காத பல
பொருட்கள் தென்பட்டன.
எல்லாவிதமான பலம் பொருந்திய
மாயைகளைப்பார்த்து மிகவும்
பயந்து கைகூப்பி நின்றாள்.
ஜீவன்களை மாயை ஆட்டிவைப்பதையும் ,
பக்தி ஜீவன்களை மாயையில் இருந்து விடுவிப்பதையும்
பார்த்தாள்.
அன்னை மிகவும் ஆனந்தமடைந்தாள்..
அவளால் எதுவும் பேச முடியவில்லை.
கண்களை மூடி ராமச்சந்திரரின் கால்களில்
விழுந்து வணங்கினாள்.
அன்னை ஆச்சரியத்தால் பிரம்மித்து நிற்பதைப்
பார்த்து மீண்டும் பாலகன் வடிவத்தில் தோன்றினார்.
அன்னையால் இறைவனை துதிக்கக் கூட முடியவில்லை.
நான் உலகத்திற்கே பரமாத்மாவாவை மகனாகப் பெற்றுள்ளேன்.
ஸ்ரீ ஹரி அம்மாவிடம் கூறினார்--
"நான் காட்சியளித்த விவரத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்".
கௌசல்யா மீண்டும் மீண்டும் வேண்டினார்--பிரபு! உங்கள் மாயை எனக்கு ஒருபொழுதும் வேண்டாம்.
பகவான் தன் பக்தர்களுக்கு பல பாலலீலைகளைக் காட்டினார்.
நான்கு சகோதரர்களும் வளர்ந்து தன் குடும்பங்களுக்கு நன்மை செய்தனர்.
அப்பொழுது குரு நால்வருக்கும் முடி எடுக்கும் விழா நடத்தினார். (சூடாகர்ம ). அந்தணர்கள் மீண்டும் அதிக தக்ஷிணை பெற்றனர்.
நான்கு அழகான அரசகுமாரர்களும் அழகான அளவிடமுடியாத
செயல்கள் சாஹசங்கள் செய்தனர்.
கண்ணுக்குப் புலப்படாத பகவான்
தசரதரின் அரண்மனை முற்றத்தில்
சுற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்.
சாப்பிட அழைத்தால் , தன் தோழர்களை விட்டு விட்டு வருவதில்லை.
கௌசல்யா அழைக்கவந்தால்,ஒளிந்து ஒளிந்து ஓடிவிடுவார்.
அம்மா அவரைப்பிடிக்க ஓடுவாள்.
விளையாடுவதால் உடம்பு முழுவதும் தூசிகள் இருக்கும்.
இருந்தாலும் அரசர் சிரித்துக்கொண்டே பிரியமுடன்
மடியில் உட்காரவைத்து கொஞ்சுவார்.
சாப்பிடும் போதே மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
இங்கும் அங்கும் ஓடுவார்.
ஸ்ரீ ராமரின் அழகான எளிய அப்பாவித்தனமான பாலலீலைகளை
வேதங்களில் பாடப்பட்டுள்ளன. சிவன் ,சரஸ்வதி ,ஆதிசேஷன் போன்ற
தெய்வங்களும் பாடியிருக்கிறார்கள்.
இந்த லீலைகளை விரும்பாத வர்களை
இறைவன் பாக்கியமற்றவர்களாக படைத்துள்ளார்.
குமாரப்பருவம் அடைந்ததும் உபநயனம் செய்வித்தனர்.
நான்கு சகோதரர்களும் குருவின் வீட்டிற்கு கல்வி கற்கச் சென்றனர்.
சில ஆண்டுகளிலேயே அனைத்து கல்வியுலும் கலைகளிலும்
நிபுணத்துவம் பெற்றனர்.
ஒழுக்கசீலர்களான சகோதரர்கள் அரசர்களின் விளையாட்டே விளையாடினர்.
வில்லும் அம்பும் ஏந்திய அவர்கள் மிகவும் அழகாக காட்சி அளித்தனர்.
பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்தனர்.
அவர்கள் விளையாடும் தெருக்களில்
ஆண்களும் பெண்களும் அன்பு மிகுதியால் நின்றுவிடுவார்கள்.
கோசல நகரத்தில் இருக்கின்ற ஆண்கள், பெண்கள், வயதானவர்கள்,
பாலகர்கள் எல்லோருக்குமே ராமர் அன்பிற்குரியவராகத் திகழ்ந்தார்.
ராமரும் அவர் சகோதரர்களும் பிடித்த நண்பர்களுடன் தினந்தோறும் வேட்டை ஆடச் செல்வார்கள். மனதில் புனித எண்ணத்துடன் மான் வேட்டை ஆடி அவைகளைக் கொண்டுவந்து ராஜா தசரதருக்கு காட்டுவார்கள்.
ராமரின் பாணத்தால் உயிரிழந்த மான்கள் தேவலோகத்திற்குச்
சென்று விடும். ராமர் தன் தம்பிகளுடனும் தோழர்களுடனும் சாப்பிடுவார்.
பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடப்பார்.

No comments:
Post a Comment