காலை வணக்கம் .
கடவுள் வணக்கம்.
உள் மன மகிழ்ச்சி
உலகவாழ்வில் தேவை
முகத்தில் சிரிப்பு
அகத்தில் அழுகை.
புறத்தில் அழகு
அந்தரங்க அசிங்கம்
புற அசிங்கம் அக அழகு சுவை.
பலா போல்
புற அக அழகு சுவை ஆப்பிள் போல்
புற அழகு அக மணம் ரோஜாபோல்
படம்அழகு தீண்டுதல் விஷம்
பாம்பு போல்.
பார்த்தாலே பயம்
கொட்டினால் விஷம்
தேள் போல்
சிறிய கொசு படுத்தும்பாடு
இறைவனின் படைப்பில்
ஞானமுள்ள மனிதனுக்கு
அன்பான வழிகாட்டல்
அபாய எச்சரிக்கைகள்
தற்காலிக உலகம்
நிலையில்லா வாழ்க்கை
வையகம் இதுவே.
வை அகத்தில் அவன் நாமம்
வையகத்தில் மன மகிழ்ச்சி.
மன அமைதி.!ஆனந்தம்!
ஓம் சாந்தி..!
்
No comments:
Post a Comment