தெய்வம் அனைத்தும் தரும் .!
எப்படி?
நாம் உயிர் வாழ மிகமிக இன்றியமையாத காற்று.,
தண்ணீர் , உணவு இயற்கையில் இருந்துகிடைக்கிறது.
உடை பருத்தி விளைகிறது.
ஜுட் விளைகிறது.
எல்லாம் இயற்கையாகக் கிடைக்கிறது.
ஆனால் நாம் செயற்கையாக
வாழ ஆசைப்படுகிறோம் .
கம்பளி ஆடு இயற்கை.
மீன்கள் சாப்பிடுவோருக்கு
அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் போது நாம்
செயற்கை சுகத்திற்கு ஆசைப்படுகிறோம்.
இயற்கையை மாசு படுத்தும்
செயற்கைகள் நம்மை இயற்கையாக
இயல்பாக இல்லாமல்
செயற்கை சுகங்கள் நம்மை
பலஹீனமாக்குகின்றன.
நாம் வாழும் சூழலை மாசு படுத்துகின்றன.
ஓசை மாசு காற்றுமாசு தண்ணீர் மாசு சுற்றுப்புறமாசு அனைத்திற்கும் காரணம்
அறிவியல் முன்னேற்றம்.
இன்றைய தலை முறை
எதையும் நினைவில் வைத்துக்
கொள்வதில்லை.
கூகுள் தேடல்
உற்றார் உறவினர்கள்
பிறந்தநாள்
நினைவுநாள்
தொலைபேசி எண் அனைத்தும்
நமது மூளையில் இல்லை.
அஷ்டாவதாரம் கலை காணாமல் போய் விட்டது.
இயற்கை மறந்து செயற்கையாக
வாழும் மனிதன் இறைவன் இல்லையே என்று ஆணவத்தால்
ஆட்டம் போடுகிறான் .
அப்பொழுது இயற்கைச்சீற்றங்கள்
அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளை சிதைத்து சீரழித்து அவனை சிந்திக்க வைக்கும் பொழுது இயற்கையின்
இறைவனின் ஆற்றல் அமானுஷ்ய
சக்தியை நாடுகிறான்.
இறைவன்
ஆற்றல் மனித இனத்தை ஆட்டிப்படைக்கிறது.
செயற்கை நோக்கி முன்னேறும்
மனிதனுக்கு ஒரு எச்சரிக்கை மணியே ஜலப்பிரளயம் வாயுப்பிரளயம் .
தமிழகத்தில் கடல் தன்னகத்தே கொண்ட ஆலயம் நகரங்கள்
இன்றைய சான்று தனுஷ்கோடி.
செயற்கை சுகத்திலும் இயற்கையைப் பேணவேண்டும்
இது இறைவனனின் சட்டம் .
மீறினால் தண்டனை .அதை எந்த மனிதசக்தியும் தடுக்கமுடியாது.
No comments:
Post a Comment