Wednesday, January 6, 2016

இறைவன் நம்முன்னால்

நேற்று பழனியில் இருந்து சென்னை வரும் நாள்.
பழனியாண்டவர் மலைக்கு
செல்லவேண்டாம் என்று நினைத்தேன்.
கூட்டம் அதிகம்.
ரோப்கார் இழுவை ரயில் வேறு கூட்டம்.
நடந்து மலை ஏற தயக்கம்.
மனம் போராடியது.
திடீரென ஒரு இறை உணர்வு
வேகமாக மலைக்குச் சென்றேன்.
நடந்தே மலை ஏறி தர்ம தரிசனத்தில் நல்ல தரிசனம்.
நடந்தே இறங்கினேன் .
இறங்கு வழியில் கருப்பணசாமி
அதையும் வழிபட்டேன் .
புத்துணர்வு  உற்சாகம்
மனநிறைவு.
மலைக்கோவில் முன் பக்தர்கள் கூட்டம் .
அதைவிட நடைபாதை வியாபாரிகளால் மிகவும் நடக்கமுடியாமல் தினரும் பக்தர்கள்.
இந்த வியாபாரிகளின்
தொல்லையால் மக்கள் வருந்தினாலும் இறைவனின் சக்திஆற்றல் நம்மை ஈர்க்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கூட்டமான நேரத்தல் குறுக்கே வரும் வியாபாரிகளை சற்றே
ஒழுங்குபடுத்தலாம் .
பாதவிநாயகர்  கோயிலைச் சுற்றி உள்ள வெண்டர்களை மட்டுமாவது
கட்டுப்படுத்தலாம் .
பக்தர்கள் கூட்டம்   மன நிம்மதி அமைதியுடன் செல்லமுடியா சூழல்.
எப்படி இருந்தாலும் பக்த கோடிகளுக்கு  முருப்பெருமானின் அருள் இணையற்றது.

No comments: