Wednesday, January 6, 2016

palani

பழனி   ஒரு புனித ஸ்தலம்.
5-1-16 -6-1-16 இரண்டு நாட்கள்  பழனியில்.

மார்கழிமாதம் .

மலைக்கோயில் , அடிவாரம் திரு ஆவினன் குடி 

இரண்டிலும் கூட்டம்.
பெருங்கூட்டம் .

பேரருள் தரும் ஆண்டவன் முருகன்.

எனக்கு அங்குள்ள வாணிகர்கள் கூட்டம் 

போக்குவரத்துக்கு இடையுறு என்று 

தோன்றியது.  முதல்நாள் கிரிவலம். 
அது ஒரு கடைத்தெருவில்  வளம் வந்த உணர்வு.
மறுநாள் மலைமேல் சென்று முருகப்பெருமான் தரிசனம்.

என் பார்வை முழுவதும் அங்குள்ள 
வணிகப்பட்டாலத்தையே நோட்டம் இட்டது.
முருகப்பெருமான் அருளால் இத்தனை 
குடும்பங்களின் வாழ்வாதாரம்  இந்த  வணிகர்களுக்கு .

அவர்களின் பார்வை யில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குடும்பவாழ்க்கை  ஆகியவை அந்த திருவிழா வியாபாரம்.

அந்த நகரமே  அந்த முருகப்பெருமான் பக்தர்களை நம்பி இருக்கிறது.

முருகப்பெருமான்  மீதுள்ள அதீத பக்தி ,நம்பிக்கை  அவன் அருளால் 
 வாழும் பக்தர்கள் பழனியில் ஏமந்தாலும் 
 அதைப் பொருட்படுத்தாத  பக்தர்கள் கூட்டம்.

 திருமலையிலும் அப்படியே.கூட்டம் தாமதம்  இருந்தாலும் ஜரகண்டி 
என்று தள்ளி அரை நிமிட தர்சனம்முடிந்து வந்ததும் அடுத்த ஆண்டு வருகிறேன்  என்ற பிரார்த்தனை.

இறைவனின் ஈர்ப்பு. ஒவ்வொரு ஆண்டும் வாழ்வின் உயர்வு .வருமானம்.

  வடிவேல் முருகனுக்கு ஆரோஹரா ! கோவிந்தா !இந்த கலியுக தெய்வங்கள்.!






No comments: