Sunday, January 24, 2016

கந்தன் என் காப்பான்

அழகர் கோவில் அழகனவன்
அன்பர்களுக்கு அருளுபவன்
ஆனந்தக்கூத்தன் மைந்தனவன்
ஆறுபடைவாசனவன்
ஆறுமுகப்பெருமானவன
கந்தனனெ்பர்  கார்த்திகேயனென்பர்
கலியுக தெய்வமென்பர்
கடம்பனென்பர்
வெற்றிவேலனென்பர்
ஞானவேலனென்பர
சுவாமிநாதன் என்பர்
சுப்பிரமணி என்பர்
அலங்காரப்பிரியனென்பர்
அழகனென்பர்
எனக்குத்தெரிந்ததெல்லாம்
கருணைக்கடல் அவன்
தீனபந்து அவன்
தீயவை களைபவன்
பக்தானுகிரஹன்
அவனை சரணடைந்தால்
அகங்காரம் போகும்
ஆசை குறையும்

இன்னல் நீங்கும்
மகிழ்ச்சி பொங்கும்
மன அமைதி கிட்டும்.
கந்தன் என் காவலன்
கந்தன் என்காப்பாளன்

அபிஷேகப் பிரியனென்பர்

No comments: