காலை வணக்கம்.
காளைகளுக்கும் வணக்கம்.
பழையன கழிதல் புதியன புகுதல்
இயல்பு.
கற்கால மக்கள் தங்கள் பாரம்பரயத்தில் உறுதியாக இருந்தால் அப்படியே இருந்திருப்போம்.
நம்நாடு நாகரீகத்தில் பண்பாட்டில்
ஆன்மீகத்தில் செல்வச்செழிப்பில்
அகிலத்தை ஈர்த்த பொழுது
அந்நியர் படை எடுப்பு.
எத்தனை எத்தனை விதமான படைஎடுப்புகள் .
மங்கோலியர் முகலாயர்கள் ஆங்கிலேயர் ஃபிரான்ஸ் டச்
இவ்வளவு படை எடுப்பு மதமாற்றங்கள் ஸனாதன ஹிந்து தர்ம அநாசாரங்களால் மனம் மாறிய புத்த ஜைன சீக்கிய மதங்கள் இந்து மதத்தை உயர் நோக்கில் இவ்வையகம் நிலையற்றது ஜனனம் மரணம்
ஆக்கம் அழிவு என்று இறைவனையே சரணடைந்த யோகிகள் சாதுக்கள் சித்தர்கள்
மஹான்கள் அகோரிகள் ஞானிகள் ஆசாரியர்கள் வையக அமைதிக்கு
அறநெறி காட்டிய ஆன்றோர்கள்
ஆன்மீகப் பிரசாரகர்கள்
என நட்டில் சத்தியம் அஹிம்சை நேர்மை தானதர்மங்கள் பரோபகாரம் என்றே வாழ்ந்தவர்கள் எப்படி எல்லாம்
மாற்றங்கள்.
அந்நியர் படைஎடுப்பால்
ஏற் பட்ட மொழி நடை மாற்றம் .
படித்தவர்கள் என்றால் கடின சொல்
எளிதில் பொருள் அறிய முடியா செய்யுள் நடை மாறி எளிய படித்த படிக்காத அனை வருக்கும் புரியும்
உரை நடை சந்த பந்த கட்டுப்பாடில்லா புதுக்கவிதைகள
கதைகள் புனிதங்கள் சமுதாய மாற்றங்கள்
குளிர் பிரதேச ஆடைகள் சூ சாக்ஸ்
கோவணம் ஜட்டியாகியது குடுமி மாறியது .
சமையல் அறை முதல் கழிப்பரை வரை மேல் நாட்டு மோகங்கள்
அடுப்பு விறகு அடுப்பு மறைந்து மண்எண்ணெய் அடுப்புகள் மறைந்து எரிவாயு சாணவாயு அடுப்புகள் சமையல் அறை அருகில் கழிப்பிடம்
நகரக்குழந்தைகள் கிராமத்திற்கு வந்தால் கழிப்பரை தொலைவில் உள்ளது கண்டு நடக்க கஷ்டப்படுதல் அனைத்திலும்
மாற்றம் .ஊழலிலும் அறிவிியல் ரீதியில் அறிவுபூர்வ ஊழல்
தெரந்த ஊழலை மறைத்து தப்பிக்கும் ஊழல்
சத்தியத்திலும்
கசப்பான சத்தியம்
அதாவதுபலர் செய்யும் ஊழலை
வெளிப்படுத்துதல் கசப்பான சத்தியம்
குருடனை செவிடனை நொண்டியைப் பார்த்து அப்படியே
சொல்வது மனதை சங்கடப்படுத்துவது கசப்பான சத்தியம்
இப்படி ஒவ்வொன்றிலும் புதுமை.
தேர்வு விடைத்தாள் ஊழல் மறைக்க டம்மி எண்கள் .
மாட்டுவண்டி சவாரி மறந்து விமான சவாரி கடல் கடந்தால் பாவம் என்பது மாறி வெளிநாட்டுப் பயணம்
வழிபாட்டிலும் புதுமை தமிழ் வடமொழிஅர்ச்சனை
தமிழ் சர்ச் தலுங்கு சர்ச்
அனைத்திலும் புதுமை.
களிமண் பிள்ளையார் மறந்து வண்ணப் பிள்ளையார்
போகி அன்றுபழையன கழிதல் எரித்தல் அழித்தல் புதியன புகுதல்
இவைகள் தான் வளர்ச்சி .
ஆனால் சத்தியம் நேர்மை கருணை
தான தர்மம் .இறைப்பற்று மாறாத தத்துவங்கள்
No comments:
Post a Comment