பாரினில் பிறந்த நாம்
காலனின் பாசக்கயிற்றுக்கு
தப்ப முடியுமா ..?
இயலாது அறிவியல் ஆற்றலால்.
முன்னோர் முந்நூறு ஆண்டுகள் வாழ்நதனர் என்றால் அது இயற்கையோடு இணைந்தவாழ்க்கை.
இன்று
நாம் அருந்தும் தண்ணீரும் செயற்கை.
காற்றும் செயற்கை
வாழும் முறையும் செயற்கை.
பேசும மொழியும் செயற்கை.
சிந்தனையும் செயற்கை.
அன்பும் செயற்கை.
பண்பும் செயற்கை.
தர்மமும் செயற்கை.
தானமும் செயற்கை.
உணவு பழங்கள் அனைத்தும்
செயற்கை.
விரும்பும் படிப்பும் செயற்கை.
செய்யும் தொழிலும செயற்கை.
உண்ணும் முறையும் செயற்கை
குடிக்கும் பானங்களும் செயற்கை.
இறைவனை அலங்கரிப்பதும் செயற்கை.
அர்ச்சிப்பதும் செயற்கை.
புலவர் பட்டம் மற்றவர் சிந்தனையில் பெற்றபட்டம்.
சுய சிந்தனை சுய படைப்பு இல்லா பட்டங்கள்
படித்த உயரியல் தாவரவியல்
வங்கி மேலாளர் பணி
அனைத்திலும் செயற்கை.
உறவிலும் செயற்கை
அனைத்தும் இயற்கை ஆனால்
காலனை வெல்லலாம் .
No comments:
Post a Comment