இறைவன் எந்த உருவிலும்
பேரிடர் தந்து எச்சரிக்கை செய்வான்.
சுனாமி வடிவில்
புயல் வடிவில்
டொரண்டோ வடிவில்
பஞ்ச வடிவில்
பரதேசிவடிவில்
கோள்கள் மாற்ற வடிவில்
இளமை முதுமை நரை வடிவில்
நோய் மரண விபத்து வடிவில்
இத்தனை எச்சரித்தும்
ஆண்டவன் பெயரைச் சொல்லி
பயமுறுத்தி சம்பாதிக்கும் கூட்டம்
கருப்புப் பணம் பதுக்கும் கூட்டம்
நயவஞ்சகம்
துரோஹம்
ஆசை அடக்கா கற்பழிப்பு
லஞ்சம் ஊழல்
இறைவன் எச்சரித்தும் இப்படி
என்றால்
எப்படி மனித சமூகம் நிம்மதியாக
வாழமுடியும்
நாக சர்ப்ப தோஷம் என்று பரிகாரம்
பாவமாம் கருக்கலைப்பு தோஷம்
என்று எந்த ஜோதிடனும எச்சரித்தில்லை.
ஒன்னுமே புரியலை உலகத்திலே
என்னமோ ஏதேதோ நடக்குது
என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment