Monday, January 30, 2017

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம் அறுபத்தாறு

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம்   அறுபத்தாறு

         ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும்  ஜனகபுரியையும் ,
வில் வேள்விப்போட்டி  நடந்த இடங்களையும் பார்த்து மிக மகிழ்வுடன்  திரும்பினர். அவர்களுன் வந்த ஜனகபுரியின்  பாலகர்களிடம்  மிக அன்பாகப் பேசி விடைபெற்றனர்.
  மிக தாமதமாக திரும்பியதால் அவர்களுக்கு ரிஷியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற பயம் . அதனால் மிகவும்  பணிவாக  சென்று ரிஷியை  வணங்கினர்.

ரிஷியின் அனுமதி  பெற்று அமர்ந்ததும் ,
ரிஷி பல புராணக் கதைகளைக் கூறிவிட்டு
படுத்துக்கொண்டார். ராமர்  பகவானாக இருந்தும் இரவு
அதிக நேரம் வரை அவரின் கால்களை அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் ரிஷியே அவரை தூங்குவதற்கு அனுப்பினார்.
லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரின் சரணங்களைத்
 தொட்டு வணங்கி  கால் அமுக்கினார்.
அவ்வாறு செய்ததில் அவருக்கு அன்பும் பயம் கலந்த மரியாதையும் இருந்தது.
 பின்னர் ராமரின் கட்டளைபெற்று  தூங்கினார்.

  விடிந்ததும் சேவல் கூவியதுமே லக்ஷ்மணர் எழுந்தார்.
 பிறகு குரு எழுவதற்கு முன்பே ராமர் எழுந்தார்.

காலைக்கடன்களை முடித்து ஸ்நானம் செய்து
  நித்ய கர்ம அனுஷ்டானங்களை முடித்து
ரிஷியை வணங்கினார்.
பிறகு ரிஷியின் அனுமதி பெற்று
பூஜைக்கு மலர் எடுக்கச் சென்றனர்.
அவர்கள் அரசனின் தோட்டத்தைப் பார்த்தனர். அங்கு வசந்தகாலக்  காட்சிகள் மனத்தைக் கவர்ந்தன.
மனதை கொள்ளை கொள்ளும் அநேக மரங்கள் நடப்பட்டிருந்தன.
பலவண்ணங்களில்  மிக அழகான கொடிமண்டபங்கள்  நிழல்கள் அளித்து ரம்யமாக இருந்தன.

அங்குள்ள  எழில் நிறைந்த மரங்களின் செழுமை ,
 புதிய இலைகள்,பழங்கள் ,பூக்கள்
 அனைத்துமே கற்பக விருக்ஷத்தை நாணச்  செய்கின்றபடி
இருந்தன.
குயில்,கிளிகள்,சகோர் முதலியே பறவைகளின்
 இனிய ஒலிகள் ,வண்டுகளின்  ரீங்காரம் ,
மிகவும் ரம்யமாக இருந்தன.
தோட்டங்களும் நதிகளையும் பார்த்து
பிரபு ராமச்சந்திரனும்
லக்ஷ்மணனும் மகிழ்ந்தனர்.
 ராமருக்கே ரம்யமாக  இருந்த
தோட்டம் மிக ரம்யமானதே.
 நான்கு பக்கமும் பார்த்து
 தோட்டக்காரர்களிடம் கேட்டு ,அறிந்து
மிக சந்தோஷத்தோடு இலைகளும் பூக்களும் பறித்துக்கொண்டனர்.
அதே சமயம் சீதை,
 அங்கே  பார்வதி தேவியை பூஜை
 செய்வதற்காக  வந்தார் .
சீதையுடன் எல்லா இளமை ததும்பும்
அழகான தோழிகள் மதுரமான குரலில் பாட்டு பாடிக்கொண்டு வந்தனர்.
.    கிரிஜாவின் மிக  அழகான ஆலயம் இருந்தது.
  தோழிகளுடன் நதியில் குளித்துவிட்டு ,
  சீதை மகிழ்ச்சியுடன்
கிரிஜா கோயிலுக்கு சென்றாள்.
அவர் மிகவும் அன்புடன் பூஜை செய்து
தகுந்த வரன் அமைய வேண்டினாள்.
ஒரு  தோழி சீதையை விட்டுவிட்டு
  பூந்தோட்டத்திற்குச்
சென்றாள்.
 அவள் அங்கே ராமரையும் லக்ஷ்மணனையும் பார்த்தாள். உடனே மிக மகிழ்ந்து சீதையிருக்குமிடம் சென்றாள்.
அவள் மிகவும் மகிழ்ச்சியுடன்  வருவதைப் பார்த்து
 தோழிகள் அவளிடம் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன
  என்று கேட்டனர்.
அவள் இரண்டு அரசகுமாரர்கள்
 தோட்டத்தைப் பார்க்க வந்துள்ளனர்.
 அவர்கள் எல்லாவிதத்திலும் அழகானவர்கள்.
அவர்களில் ஒருவர் கருப்பாகவும் மற்றவர்
 வெள்ளையாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் அழகை    நான்  எப்படி வர்ணிப்பேன் ?
கண்கள் பேசமுடியாது,
சொல்லிற்கு  கண்கள் கிடையாது.

 இதைக்கேட்டதும் சீதை மனதில் ஏற்பட்ட ஆனந்தம்   கண்டு  ,
எல்லா தோழிகளும் மிகவும்  மகிழ்ந்தனர்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,
இவர்கள் விஷ்வாமித்திரருடன் வந்த ராஜகுமாரர்கள். அவர்கள்  தங்கள் அழகால்  நகரத்தின்
 ஆண்கள் -பெண்கள் அனைவரையும்
 வசப்படுத்திவிட்டனர்.
எல்லா இடங்களிலும் ,அனைவரும்
இவர்கள் இருவரின் அழகைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 கட்டாயம் அவர்களைப்  பார்க்கவேண்டும் .
 அவர்கள் பார்க்கத்தக்கவர்கள் .
அவர்களின் பேச்சு சீதைக்கு அவர்களைப் பார்க்கவேண்டும்
என்ற ஆவலைத்  தூண்டியது.
 அந்த அன்பான   தோழிக்குப் பின்  சீதை சென்றாள் . அவளின்  முன்பே  இருந்த அன்பை,யாரும் அறியவில்லை.
 நாரதரின்  கூற்றை நினைத்து சீதையின் மனதில் புனிதமான காதல் உண்டாகியது.
அவள் பயந்த மான் இங்கும் அங்கும்  பார்ப்பதுபோல்   பார்த்துக்கொண்டிருந்தாள் .

கை வளையல்கள் , சலங்கை ,ஒட்டியாணம் ஆகியவற்றின் ஒலி  கேட்டு ராமர் லக்ஷ்மணனிடம் இந்த ஓசைகள் காமதேவன் உலகத்தை வெற்றி கொள்ள உறுதியுடன் இசைப்பது போல் உள்ளது.
இப்படி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தார்.
சீதையின் நிலவு முகத்திற்கு அவருடைய  கண்கள்
சகோர பறவை ஆகிவிட்டது.
அழகான  கண்கள் நிலைத்து  நின்று  பார்த்துக்கொண்டிருந்தன.
சீதையின் அழகைக் கண்டு ராமர் மிகவும் ஆனந்தமடைந்தார்.
மனதில் சீதையின் அழகைப் புகழ்ந்தார். ஆனால்
வெளிப்படையாக  எதுவும்  பேசவில்லை.
அந்த அழகுக்கு ஈடு-இணை இல்லாமல் பிரம்மா  தன் முழுத்
திறமையையும் பயன்  படுத்தி உலகுக்கு காட்டியதுபோல்
சீதையின்  அழகு இருந்தது.
அழகுக்கே அழகு தரும் அழகு சீதையின் அழகு.
அழகு என்ற பவனம் இருட்டாக இருந்தது. இப்பொழுது
சீதையின் அழகுச் சுடர் எரிந்து அதை ஒளிமயமாக்கியது போன்றிருந்தது.
எல்லாவுடமைகளையும்  கவிஞர்கள் கையாண்டு எச்சலாக்கிவிட்டனர்.
 நான் ஜனகரின் மகள் சீதைக்கு
எதை உவமையாக்க  முடியும்.
இவ்வாறு ராமர்  மனதில் சீதையின் அழகை  வர்ணித்துக்கொண்டு    தன் தம்பி லக்ஷ்மணனிடம்
சொன்னார்,"தம்பி லக்ஷ்மணா !இவள் ஜனகரின் மகள்.
இவளுக்காகத்தான்  வில் உடைக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தோழிகளுடன் இவள் கெளரி பூஜை செய்ய  வந்துள்ளாள். இவள் பூந்தோட்டத்தை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளாள்.
இவளுடைய  தெய்வீக அழகைக் கண்டு  என்னுடைய புனித மனதில்  காதல் உண்டாகிவிட்டது. இந்த எல்லா  காரணங்களும்  பிரம்மா அறிந்துதான் உள்ளார்.
தம்பி!என்னுடைய வலது பக்க அங்கங்கள் துடிக்கின்றன.
அது மங்களம் தரக்கூடியதே.

    ரகுவம்சத்தின் கால்கள் தீய வழியில்  செல்லாது.
இது இயற்கை யான ரகுவம்ச குணம்.
கனவிலும் அடுத்த பெண்ணைப் பார்க்காது என்பது என்  மனதின் திடமான  நம்பிக்கை.

போர்க்களத்தில் புறமுதுகிட்டு  ஓடாதவர்கள்,
அடுத்தவன் மனைவியை ஏறிட்டு பார்க்காதவர்கள்,
பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாதவர்கள்
உயர்ந்த மனிதர்கள் . இப்படிப்பட்ட மனிதர்கள் உலகில்
அதிகமாக இல்லை.
இவ்வாறு ராமர் லக்ஷ்மனனுடன் பேசிக்கொண்டிருந்தாலும்
அவர் மனம் சீதையை நோக்கிச் சென்றது. அவளுடைய முக அழகு என்ற மகரந்தத்தில் வண்டுபோல் மனம் அந்த அழகை
ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.
 சீதையும் ஆச்சரியத்துடன் நாலா பக்கங்களிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.மனதில் அரச குமாரர் எங்கே சென்றார் என்ற கவலை சுற்றிக்கொண்டிருந்தது.
மான்விழியால்,சீதை எங்கு பார்த்தாலும் வெள்ளைத்தாமரை வரிசை பொழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது தோழிகள் கொடியின் மறைவில் இருந்து ராமரையும் லக்ஷ்மணனையும்
காட்டினார்கள்.   அவர்கள் அழகைக் கண்டு மனதில் பேராசை உண்டாகியது. புதையலைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த ராமரின் அழகைகண்டு  கண்களின் இமைகள்   மூட  மறந்தன. அதிக அன்பின் காரணமாக
உடல் தன்  வசம் இழந்தது . குளிர்கால நிலவை மெய்மறந்து சகோரப் பறவை பார்ப்பதுபோல் சீதை  நிலை.
கண்கள் வழியாக ஸ்ரீ ராமரை இதயத்தில் கொண்டுவந்து
கண் இமைகளை மூடிக்கொண்டாள்.
சீதை அன்பின் வசத்தில் இருப்பதைக் கண்டு தோழிகள் எதுவும் பேசவில்லை.

Sunday, January 29, 2017

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --அறுபத்தைந்து

துளசிதாஸ் ---ராமசரிதமானஸ்--பாலகாண்டம் --          அறுபத்தைந்து

       தோழியே !ராமரின்  தரிசனம்  மிக மிக துர்லபம் .
நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் ராமரின்
தரிசனம் கிடைத்துள்ளது. அதனால் தான் இந்த தரிசனம் செய்யும் நல்ல யோகம்  கிடைத்துள்ளது.

தோழியே ,இந்த திருமணம் அனைவரின் நன்மைக்காக .
மற்றொரு தோழி ,"இந்த சிவதனுஷ் மிகவும் உறுதியானது.
இந்த கருப்பு  அரசகுமாரன்  ,மென்மையான உடல் உள்ளவன்.
எல்லோருமே  தர்மசங்கடத்தில் உள்ளனர். இதைக் கேட்டு மற்றொரு தோழி சொன்னாள்----பார்ப்பதற்குத்தான்  இவர்

சிறியவர். ஆனால் அதிக சக்திசாலியானவர்.
இவர் சரண  கமலக்களின் ஸ்பர்சத்தினால் கல்லான மிகப்பெரிய   பாவியான அஹல்யா  பெண்ணாகிவிட்டாள்.

இவர் வில்லையா  உடைக்கமாட்டார்.?
இந்த நம்பிக்கையில்
உறுதியாக இருக்கவேண்டும்.
 சீதையை  அழகாகப்  படைத்த  இறைவன்
நன்கு சிந்தித்துத்  தான் இந்த கருநீலவண்ணனைப்
படைத்துள்ளார்.
அனைத்துப்  பெண்களும்   மனதில் மிக மகிழ்ந்தனர்.
   ராமரும்-லக்ஷுமண்   இருவரும்  சென்ற இடமெல்லாம்
மகிழ்ச்சி  பொங்கியது.
இரண்டு  சகோதரர்களும் நகரத்தின் கிழக்குத்திசையில் சென்றனர். அங்கே வில்போட்டிக்கான அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது . மிகவும் நீளமான அகலமான நன்கு அமைக்கப்பட்ட  மைதானம்.
நான்கு பக்கங்களிலும் அரசர்கள் அமர மிகப்பெரிய
ஸ்வர்ணமேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
பின்னால் வட்டவடிவில் காவலர்கள் மேடைகள் உயர்ந்து காணப்பட்டது.
நகரமக்கள் அமர மிக உயர்ந்த  மேடைகள் அமைக்கப் பட்டிருந்தன.
அவைகளுக்கு  அருகிலேயே  மிகப்பெரிய அகலக்கண வெள்ளைக் கட்டிடங்கள்  பல வண்ணங்களில் அமைக்கபட்டிருந்தன. அங்கே தன் தன் குல வழக்கப்படி பெண்கள் அமர்ந்து பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நகரத்தின் பாலகர்கள் ராம-லக்ஷ்மணர் களுக்கு அந்த வில்
போட்டி நடக்கும் இடத்தைக் காட்டினர்.
பாலகர்கள் இந்த காரணத்தைக் கொண்டு அன்பின் வயப்பட்டு ராமரின் அழகான அங்கத்தைத் தொட்டு ஆனந்தப்பட்டனர்.
பாலகர்களின் அன்பினால் மகிழ்ந்து அவைகள் காட்டிய வேள்வி பூமியை மிகவும்  புகழ்ந்தனர். இதனால் பாலகர்களின் உத்சாஹமும் ஆனந்தமும் அன்பும் அதிகரித்தன. அவர்கள் தங்கள் விருப்பப்படி அவர்களை அழைத்தனர். இரு சகோதரர்களும் அவர்களுடன்
மிக ஆனந்தமாகச் சென்றனர்.  

அனைவரின் நன்மைக்கே. வேறுபாடின்றி,

இறைவனுக்கு படைப்பதெல்லாம்,
ஏழைகளுக்கு உதவும்  எண்ணம்
தேங்காய் சிதறுதேங்காய்
அங்குள்ள ஏழைகள் எடுத்து சாப்பிட.
ஆனால் இன்றோ அது ஒப்பந்தகாரர் கையில்.
ஏழை எடுத்து சாப்பிட்டால்  அடிதான்.
பாலாபிஷேகமும் அப்படியே .
பிரசாத ஸ்டால்கள் இல்லாத காலம்
பிரசாதாம் பிறருக்கே . ஆனால்  இன்று
அதுவும் வாணிகமே.
ஆலயம் என்பது
  ஆ , ஐயோ, என்பவருக்கு
உதவ .
உள்ளோர் இல்லாருக்கு உதவ.
ஆனால் இன்றோ உள்ளே நுழையவே
நுழைவுக்கட்டணம்.

பூக்கள் சமர்ப்பிப்தால் எத்தனை ஏழை
பெண்கள் பொருளீட்டுகின்றனர்.
வாடும் மலரில் வாடும் மனம்  மகிழும்.
மணம்  வாழ்க்கையில் வீசும்.
பூ மணம்  இயற்கை அழகு,அவைகளை
பறித்து   அர்ச்சித்தால் பலருக்கு வருமானம்.
பூந்தோட்டக்காரன், அதை பறித்து சேர்ப்பவன்.
அதைதொடுத்து கலை  வண்ணம் சேர்ப்பவன்.
அதிலும் மொத்தவியாபாரி, சில்லறை வியாபாரி,
ஆலயங்கள் முன் விற்கும் பெண்கள்.
தெருவில் விற்கும் தெரு வியாபாரி.
பூதன்னை வாடவைத்து ,
எத்தனை பேர் வாழ்க்கையில் மனம் வீசும் மாண்பு.
மனிதனைத்தவிர  அனைத்து படைப்புகளும்
அனைவரின்  நன்மைக்கே. வேறுபாடின்றி,

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

     ஸ்ரீ ராமர்  ரிஷிகளுடன் உணவருந்திவிட்டு  ஓய்வு  எடுத்துக் கொண்டிருந்தார்.  லக்ஷ்மணனுக்கு  நகரை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
ஆனால் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. அண்ணனிடம் கேட்க பயமாக இருந்தது.

ஆனால் சகலமும் அறிந்த ஸ்ரீ ராமருக்கு தன் தம்பியின் மனதில் உள்ள   ஆசை புரிந்துவிட்டது. அவர் முனிவரிடம் சென்று  தன் தம்பியின்  விருப்பத்தைக்கூறி நகரை சுற்றிப்பார்த்து வர  அனுமதி கேட்டார்.
முனிவர் நகரைச் சுற்றிப்பார்க்க  அனுமதி அளித்தார்.
அப்பொழுது முனிவர் ,"ராமா!நீ நீதியைக் காப்பவன். அன்பின் வசப்பட்டு சேவகர்களுக்கு சுகம் அளிப்பவன்.
தர்ம ரக்ஷகன்.  நகரத்தின் அழகையும் ,பார்த்து நகரமக்களுக்கும்  காட்சி அளித்து   மகிழ்விக்கவும்.

 எல்லா உலகத்திற்கும் சுகம் தரக்கூடிய இரண்டு  சகோதரர்களும்  ரிஷியை வணங்கி விட்டு  நகர்வலம்  காணச் சென்றனர். இவர்கள் வெளியில் வந்ததுமே ,
இவர்களுடைய அழகால் மகிழ்ந்து பாலகர்களின் கூட்டம்
இவர்களைப் பின் தொடர்ந்தது.

இரண்டு சகோதரர்களின்  மஞ்சள் நிற பட்டாடை, இடுப்பின் துப்பட்டாவில் கட்டப்பட்டுள்ள அம்பராத்தூண் , கருப்பு ,வெள்ளை உடலுக்கேற்ற சந்தனத் திலகம் ,மிகவும் அழகாக
இருந்தன.  கருப்பான ராமர், வெள்ளை நிற லக்ஷ்மணர் இந்த
அழகான  ஜோடி  அனைவருக்கும் பார்க்க பார்க்க மிக ஆனந்தம் அளித்தது.

சிங்கம் போன்ற கழுத்து ,மிகப்பெரிய புஜங்கள், மார்பில்
கஜமுத்துமாலை  அழகான  செந்தாமரைக் கண்கள்,  நிலவுபோன்ற முகம் மூன்று தாபங்களையும் போக்கக் கூடியது.
காதுகளில் தங்க காதணிகள்  மிகவும் அழகாக அனைவரையும்  கவர்ந்தது.  புருவங்கள் வளைந்து மிகவும் சோபித்தன. நெற்றியில் திலகக் கோடுகள் அழகில் முத்திரையிட்டதுபோல் இருந்தன.
தலையில்  கருப்பான சுருட்டை முடிகள் அதன் மேல் ஜடாமுடி மிக அழகாக இருந்தன. பாதங்களிலிருந்து  தலை வரை
அனைத்துமே பார்க்க மிக அழகாக இருந்தன.
இரண்டு சகோதரர்களும் நகரத்தைப் பார்க்க வந்துள்ளனர் என்ற செய்தி கேட்டதுமே, எல்லோரும் தங்கள் வீட்டையும் வேலைகளையும் வீட்டு விட்டு  தரித்திரன் கஜானா கொள்ளை அடிக்க ஓடிவந்தது போல் ஓடிவந்தனர்.
இயற்கையான அழகுள்ள சகோதரர்களைக் கண்டு நகர மக்கள் மகிழ்ந்தனர். வீட்டின் பெண்கள் ஜன்னல் வழியாக அன்புடன் ராமச்சந்திர மூர்த்தியைப் பார்த்தனர்.
பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்---
இவர்கள் கோடிக்கணக்கான காமதேவனின்  அழகை
மொத்தமாக பெற்றுள்ளனர். இவ்வளவு அழகு எங்கும் பார்க்கக் கிடைக்கவில்லை. தேவர்கள், மனிதர்கள் ,
அசுரர்கள், முனிவர்கள், நாகர்கள்  ஆகியோரிடத்திலும்
இவ்வளவு அழகு இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை.

பகவான்  விஷ்ணுவிற்கு  நான்கு புஜங்கள் உள்ளன. பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உள்ளன.
சிவனின் வேஷம் மிகவும் பயங்கரமானது. அவருக்கு ஐந்து முகங்கள்.  இந்த அழகுக்கு சமமான உவமை எதுவும் இல்லை.
இவ்வளவு அழகானவர்களைக் கண்டு  மோகிக்காதவர் ஒருவரும் இருக்கமுடியாது.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"இவர்கள் மகாராஜா தசரதரின்  குழந்தைகள் என்று கேள்விப்பட்டேன். இவர்கள் அன்னப்பறவைகள் போன்று அழகான ஜோடி.
இவர்கள் விஷ்வாமித்திரரின் யாகத்தின் காவலாளிகள்.
இவர்கள் போர்க்களத்தில் ராக்ஷசர்களைக் கொன்றுள்ளனர்.

   இதில்  கருப்பாக இருப்பவர் மாரீசன்,சுபாஹுவின் ஆணவத்தை அழித்தவர். இவர் கௌசல்யாவின் புத்திரர்.
இவருடைய பெயர் ராமர்.

 வெள்ளையாக வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு  பின் தொடருபவர்   ராமரின் சகோதரர் லக்ஷ்மணன். அவருடைய தாயார் சுமித்திரை .
இரண்டு சகோதரர்களும்   அரக்கர்களை அடக்கி வரும் வழியில்  கௌதமரின்  மனைவி அஹல்யாவிற்கு முக்தி அளித்து   இங்கு தனுஷ் யக்ஞம் காண வந்துள்ளனர்.
இதைக்கேட்ட தோழிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 ராமரின் அழகைக்கண்டு ஒரு தோழி ,"ராமர் ஜானகிக்கு ஏற்ற வரன் "என்றாள்.
அரசன் இவரைப்பார்த்தால், தன் பிரதிக்ஞையை  விட்டுவிட்டு  ராமருடனேயே திருமணம் செய்துவிடுவார்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"அரசர் பார்த்துவிட்டார்.
முனிவருடன் இவருக்கும் தக்க மரியாதை செய்து கௌரவித்துள்ளார். ஆனால்  தோழியே! அரசர் தன பிரதிக்ஞையை  விடவில்லை.
தன் பிரதிக்க்னையில் திடமாக இருப்பதால்  அவிவேகி ஆகிவிட்டார்.
 ஒரு தோழி சொன்னாள்."கடவுள்  நல்லவராக இருந்தால்,
எல்லோருக்கும் தகுந்த பலன் அளிப்பவராக  இருந்தால் ,
ஜானகிக்கு இந்த வரம் தான் . இதில் சற்றும்  ஐயமில்லை.

 தெய்வ சங்கல்பத்தால்  இந்த வரன் ஜானகிக்கு கிட்டினால்
   நாம் எல்லோரும்  பகவானுக்கு  மிகவும் நன்றிக் கடன் பெற்றவராவோம்.  

Saturday, January 28, 2017

ராமசரித மானஸ்- பாலகாண்டம் --அறுபத்து மூன்று.

ராமசரித மானஸ்-  பாலகாண்டம் --அறுபத்து மூன்று.

        அங்கு வந்த இரண்டு அழகான அரசகுமாரர்கள் ,
இருவரும் , கருப்பு-வெள்ளையாக அனைவரின் பார்வைகளுக்கும்  சுகத்தை அளிப்பவர்களாகவும் ,
மனம் கவர்  கள்வர்களாகவும்  இருந்தனர். ஸ்ரீ ராமர் அங்கு வந்ததும்  அனைவரும் எழுந்துநின்றனர். ரிஷி அவரை தன் அருகில் அழைத்து உட்கார வைத்தார்.

இரண்டு சகோதரர்களைப் பார்த்து அனைவரும் மிக மகிழ்ந்தனர். அனைவரின் கண்களிலும்  ஆனந்த்தக் கண்ணீர்  பெருக்கெடுத்தது.  உடல் புல்லரித்தது.
ராமரின் இனிய அழகான தேகத்தைக் கண்டு
ஜனகர் தன்  மெய்மறந்து போனார்.

   மனது   அன்பால் மூழ்கியது கண்டு  ஜனகர் தன் விவேகத்தால்  தைரியமாக்கிக் கொண்டு
முனிவரை வணங்கி ஆனந்தக்குரலில் சொன்னார் ---
"முனிவரே ! சொல்லுங்கள். இந்த இருவரும் முனிகுலத்தின்
ஆபரணங்களா ?  அல்லது அரச வம்ச பாலகர்களா?
வேதங்களில் புகழப்பட்ட பிரம்மனே இரட்டை சகோதரர் களாக   வந்துள்ளனரா ?

என்னுடைய வைராக்கியமான  மனம் இவர்களைப் பார்த்ததும்   நிலவைக்கண்டு மகிழும் சகோரப்பறவை
போன்று மகிழ்கிறது.  முனிவரே! மிகவும் ஆவலுடன் கேட்கிறேன். இவர்கள்  யார்  என்பதை மறைக்காமல் சொல்லுங்கள்.

இவர்களைப் பார்த்ததும் என்  மனம் பிரம்ம சுகத்தை பெற்றுள்ளது.
முனிவர்,    "அரசே! நீங்கள் சொன்னது சரியே! உங்கள் வாக்கு பொய்யாகாது.  உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்  இவர் மிக அன்பானவர்.
முனிவர் சொல் கேட்டு ராமர் மனதிற்குள் புன்னகை பூத்தார்.
அவர் முனிவரிடம் ரகசியத்தை சொல்லவேண்டாம் என சமிக்ஞை செய்தார்.
அப்பொழுது முனிவர் சொன்னார் ,"இவர்கள்  ரகுகுல திலகர் தசரதரின்  புத்திரர்கள்.  என் நன்மைக்காக என்னுடன் அனுப்பியுள்ளார்.
 இவர்கள்  ராமனும் லக்ஷ்மணனும் ஆவார்கள்.
நல்லொழுக்கமும் வீரமும் பலமும் பெற்றவர்கள்.
இவர்கள் அரக்கர்களை வதம் செய்து  என்னுடைய வேள்வியை காப்பாற்றயுள்ளனர். இதற்கு இந்த வையகமே சாக்ஷி.
உங்களுடை தரிசனத்தால் நான் மிகவும் புன்னியவானானேன். கருப்பும் வெள்ளையும் உள்ள இரண்டு சகோதரர்களும்  ஆனந்தத்திற்கே ஆனந்தம் அளிப்பவர்கள்.

  இவர்களுடைய பரஸ்பர அன்பு  மிகவும் புனிதமானது. மிகவும் அழகானது. அது மனதை மிகவும் கவர்கிறது.
அதை சொற்களால் சொல்ல முடியாது.
பிரம்மா -ஜீவன் போன்று இவர்களுடைய அன்பு இயற்கையானது.

ஜனகர் அடிக்கடி பிரபுவைப் பார்த்து ஆனந்தமடைகிறார்.
முனிவரைப் புகழ்ந்து வணங்கி அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு அழகான மாளிகையில் முனிவரை தங்கவைத்தார் .
அது சகல வசதியும் மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது.
பிறகு அனைத்துவிதமான பூஜைகள் செய்து அரசர் விடைபெற்றார். 

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

    அஹல்யாவிற்கு மோக்ஷம் அளித்து அங்கிருந்து
முனிவருடன்      புனித கங்கை ஓடும் இடத்திற்கு   சென்றனர்.  மகாராஜ் காதியின் புத்திரரான  விஷ்வாமித்திர ரிஷி தேவகங்கா   பூமியில்தோன்றிய கதையைச்  சொன்னார்.

 பிரபு ராமச்சந்திரரும் ,லக்ஷ்மணனும் ,முனிவரும்
 கங்கையில்   ஸ்நானம்  செய்தனர்.
அந்தணர்களுக்கு விதவிதமான தானங்கள்  கொடுக்கப்பட்டது.
 முனிவருடன் மிக மகிழ்ச்சியாக  விரைவில்
 ஜனகபுரியை அடைந்தனர்.
  ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணரும்  ஜனகபுரியின்  அழகைக்கண்டு
மிகவும்  மகிழ்ந்தனர்.
அங்கே அனேக அழகான குளங்கள் ,
கிணறுகள், நதிகள் , குட்டைகள் இருந்தன.
அங்கு இறங்குவதற்கு  அழகான படிகள் இருந்தன.
தண்ணீர் அமிர்தம் போன்று இருந்தது.
 வண்டுகள்   மகரந்த ரசத்தால்
 ஆனந்தமடைந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன,
வண்ண-வண்ண பறவைகள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.
பல  வண்ணங்களில்  தாமரைகள் மலர்ந்திருந்தன.
எப்பொழுதும்  சுகமளிக்கின்ற  குளிர்ந்த , மந்தமான,
மணமுள்ள  காற்று  வீசிக்கொண்டிருந்தது.
நந்தவனங்களிலும் , தோட்டங்களிலும் ,வனங்களிலும்
அதிக பறவைகள்  வசிக்கின்றன.
மலர்களாலும்  பழங்களாலும்  நிறைந்த மரங்கள் நகரத்தை மேலும் அழகு படுத்தின.

    சென்ற இடமெல்லாம்  மனத்தைக் கவர்வதாக இருந்தது.
பிரம்மாவே தன் கைகளாலேயே செய்தது போன்ற
அழகான  கடைத்தெருக்கள், மணிகள் கட்டிய அழகான
துருத்துமாடங்கள்.

குபேரனைப்  போன்ற  மேன்மை பொருந்திய வணிகர்கள்
எல்லாவிதமான பொருட்களை விற்பனைக்காக  கொண்டுவந்திருந்தனர்.
அழகான நாற்சந்திகள், தெருக்கள்  எப்பொழுதும் நறுமணத்துடன்  இருந்தன.

 எல்லோருடைய  வீடுகளும் மங்களகரமாக இருந்தன.
வீடுகளில்  மிக அழகான சித்திரங்கள்
 காமதேவனே வந்து தீட்டியதுபோல் இருந்தன.
நகரத்தில் இருந்த ஆண்கள் -பெண்கள்  அழகானவர்களாகவும் , பவித்திரமாகவும் , சாது குணம் உள்ளவர்களாகவும் , ஞானிகளாகவும் ,ஒழுக்கம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
 ஜனகரின் அழகான அரண்மனை கண்டு தேவர்களும் பிரமித்து நின்று ரசிப்பார்கள்.
அரண்மனையின் மதில்  சுவர்கள் அனைத்து
 உலகில் உள்ள அழகையும் தடுத்து நிறுத்துவதுபோல்  ஆச்சரியப்படும்படி இருந்தன.

  அழகான ஒளிபொருந்திய மாளிகையில்
 திரைச்சீலைகள்   மணிகள்  பதித்து  மிக நேர்த்தியாக இருந்தன.
 சீதை வசித்த அழகான மாளிகையை வர்ணிக்கவே முடியாது.
அரண்மனையின் ஒவ்வொரு   வாயிற் கதவும்   மிகவும் உறுதிவாய்ந்ததாகவும், மணிகள் பதித்தும்
மிக அழகாக இருந்தன.
அங்கு  அரசர்கள், நட்டுவனார்கள் ,
அரசரின் புகழ் பாடுபவர்கள், பாடகர்கள் போன்றோரால்
நிரம்பி வழிந்தது.
 யானைகளுக்கு பெரிய கஜசாலைகள்
மற்றும் குதிரை லாயங்கள்  மிகப் பெரியதாக  இருந்தன.
தேர்களும் நிரம்பி இருந்தன.

அங்குள்ள மிகப்பெரிய  சூர-வீரர்கள் , அமைச்சர்கள், சேனாபதிகள்  அனைவருக்குமே  அரண்மனை போன்றே
மாளிகைகள்  இருந்தன.
நகரத்தின்  அருகில்  உள்ள  குளக்கரையிலும்  நதிக்கரையிலும் அதிக அரசர்கள்
 கூடாரம் போட்டு தங்கி இருந்தார்கள்.
  அங்குள்ள மாந்தோப்புகள்  பார்த்து
அதன் அழகில் மயங்கி
விஷ்வாமித்திரர் மனதில் அங்கேயே
 தங்கவேண்டும் என்ற
ஆசை உண்டாகியது.
 இந்த    ஆவலை ராமரிடம் வெளிப்படுத்தினார்.
நல்லது என்று கூறி ஸ்ரீராமர் அங்கேயே முனிவர்களுடன் தங்கினார்.
  மிதிலையின்  அரசர்  ஜனகர் ,    ரிஷி  விஷ்வாமித்திரர், வருகை   அறிந்து   அவரை வரவேற்க நாணயமுள்ள , விசுவாசமுள்ள அமைச்சர்கள், மிகுந்த  போர்வீரர்கள்,
சிறந்த அந்தணர்கள், குரு, மேலும் தன் இனத்தின் மேன்மை பொருந்தியவர்கள்  அனைவரையும் அழைத்துக்கொண்டு
சென்றார்.
    ஜனகர்    ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
முனிவர்களின் அரசனான விஷ்வாமித்திரர் ஆசீர்வதித்தார்.
பிறகு அனைத்து அந்தணர்கள் குழுவிற்கும் நமஸ்காரம் செய்தார். தன்னை பெரிய பாக்கியசாலியாக எண்ணி மகிழ்ந்தார்.
நலம் விசாரித்து  விஷ்வாமித்திரர்  அரசரை அமரவைத்தார்.
அப்பொழுது பூந்தோட்டம்  பார்க்கச்சென்ற இரு சகோதரர்களும்  அங்கே வந்தனர்.

 

துளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தொன்று

துளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --             அறுபத்தொன்று

    விஷ்வாமித்திர ரிஷியின்  ஆஷ்ரமத்தில்  ரகுநாதர்  சில நாட்கள்  இருந்து  அந்தணர்களுக்கு  சேவை செய்தார்.
அந்தணர்கள்  பக்தியின்  காரணமாக  ஸ்ரீராமனுக்கும் ,லக்ஷ்மணனுக்கும்  புராணங்களின் பல கதைகளைச்சொன்னார். அந்தக்கதைகள்   அனைத்தும்
ஸ்ரீ ராமர் அறிந்தவைகளே.
   அதற்குப்பின் ரிஷி விஷ்வாமித்திரர் மிகவும் மரியாதையுடன்  ஸ்ரீ ராமரிடம் ,"வாருங்கள். மற்றொரு கதாபாத்திரம் பார்க்கலாம்" என்றார்.
அவர் தனுஷ் யாகம் கேட்டு மிக  மகிழ்ச்சியுடன்
விஷ்வாமித்திர ரிஷியுடன்  சென்றார்.

   வழியில்  ஒரு  ஆஷ்ரமம்  தென்பட்டது.  அங்கே பறவைகள் ,மிருகங்கள் போன்ற  எந்த ஒரு   ஜீவ ஜந்துக்களும் தென்படவில்லை.
அங்கு  ஒரு கல்  தென்பட்டது. அதைப் பார்த்து ஸ்ரீ ராமர்  அதென்ன  என்று வினவினார்.
அப்பொழுது ரிஷி விவரமாக அந்த கல்  கதையைச் சொன்னார்.

கௌதமமுனிவரின்   மனைவி சாபத்தின் காரணமாக கல்லாகிவிட்டாள். கல்லானாலும் மிக தைரியத்துடன்
தங்களின்  சரண கமலங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள் .
ரகுவீரரே! இவள்மேல்  கிருபை  காட்டுங்கள்.

ஸ்ரீ ராமரின் பவித்திரமான சோகங்களை போக்கும்  பாதங்களின்  ஸ்பர்சம்  பட்டதுமே  தபத்தின்  சிலையான
அஹல்யா  வெளிப்பட்டாள்.  பக்தர்களுக்கு சுகம் அளிக்கும்
ஸ்ரீ ரகுநாதரைப் பார்த்ததும் வணங்கினாள்.

அதிக அன்பும் பக்தியும் கொண்டதால், ஆனந்த பரவசத்தால்
பேசமுடியவில்லை. மிகவும்  அதிர்ஷ்டசாலியான அஹல்யா ,
பிரபுவின்  சரணங்களை சுற்றிக்கொண்டாள். அவளுடைய
கண்களில்  இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பிறகு  மனத்தை திடப்படுத்திக்கொண்டு ,
பிரபுவிடம் மிகவும் களங்கமற்ற சொற்களால் புகழத்  தொடங்கினாள்-" ஞானத்தால் காட்சியளிக்கும் ஸ்ரீ ரகுநாதரே! நீங்கள்  வாழ்க!  நான் ஒரு புனிதமற்ற பெண்;
நீங்கள் உலகத்தையே   புனிதமாக்குபவர்.
பக்தர்களுக்கு  சுகம் அளிப்பவர்.
தாமரைக் கண்ணாளரே!  பக்தர்களை பிறவித்தளையில் இருந்து  விடுவிப்பவர்.  நான் உங்களிடம் சரணடைகிறேன்.
என்னைக் காப்பாற்றுங்கள்.

முனிவர் எனக்கு சாபம் கொடுத்து நல்லதே செய்திருக்கிறார்.
அதை நான் மிகவும் அனுக்கிரஹமாக ஏற்கிறேன்.
அந்த சாபத்தின்  காரணமாக மறுபிறவியிலிருந்து
காக்கும் வல்லமை கொண்ட உங்கள் தரிசனம் கிடைத்தது.
இந்த உங்கள் தர்சனத்தை சங்கரர்  மிகவும் பெரிய பாக்கியமாகக்   கருதுகிறார்.
நான்  ஒன்றுமறியாத அறிவிலி.  என்னுடைய ஒருவேண்டுகோள் .  எனக்கு எந்த வரமும் தரவேண்டாம்.
நான் விரும்புவது ஒன்றே. எனது மனம் என்ற வண்டு எப்பொழுதும்  உங்கள்  சரண கமலங்களையேசுற்றி அன்பு -பக்தி ரசத்தை எப்பொழுதும் உறிஞ்சட்டும்.
  எந்த சரணங்களில் இருந்து கங்கை நதி தோன்றியதோ,
அதே புனித கால்களை என் தலைமேல்  வைத்து முக்தி அளித்துள்ளார். அந்த கால்களிருந்து தோன்றிய கங்கையை
சிவபெருமான் தலையில் வைத்துள்ளார். அந்த சரண கமலங்களை  பிரம்மா பூஜிக்கிறார். இவ்வாறு அடிக்கடி சரணங்களில் வணங்கி மனதிற்குப் பிடித்த  வரம் பெற்று ,
கௌதமரின்  மனைவி ஆனந்தத்துடன் தன் கணவன்  இருக்கும்  உலகத்திற்குச் சென்றாள்.

  ஸ்ரீ ராமச்சந்திர பிரபு  ஏழை  பங்காளர் , அஹல்யா போன்று காரணமின்றியே பலருக்கு முக்தி அளித்துள்ளார்.
   துளசிதாசர் சொல்கிறார்--மனமே! நீ கபடம் -வஞ்சனை மறந்து    அந்த ஸ்ரீ ராமரையே  பஜனை செய்யவும்.

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.

துளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.


         விஷ்வாமித்திரர்  ஸ்ரீ ராமனையும்  லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு  கானகம் சென்றார்.
வழியில்    முனிவர் தாடகையைக் காட்டினார்.
 இவர்கள் பேச்சொலி கேட்டதுமே
அவள் கோபத்துடன் ஓடினாள்.

ராமர்  தன்  ஒரே  பாணத்தால் அவளின்  உயிரை எடுத்தார்.
அவள் பெண்ணாக  இருப்பதால், தன்னுடைய தெய்வீக ரூபத்துடன்  காட்சி அளித்தார்.

ரிஷி உடனே  பிரபுவை  கல்வியின் கஜானா என்றறிந்து
 அவருக்கு பசி எடுக்காமல் இருக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். மேலும் அவர்  சரீரத்தில் , ஒப்பிடமுடியாதா  சக்தியையும்  ஒரு தேஜஸையும் கொடுத்தார்.

அனைத்து அஸ்த்ர சஸ்த்ரங்களை சமர்ப்பித்து ,
தன்  நல விரும்பியாகக்  கருதி ஆஷ்ரமத்திற்கு
அழைத்துச்  சென்று  , பக்தியுடன்  பழங்களையும் ,கிழங்கு மற்றும்  வேர்களையும் சாப்பிட வழங்கினார்.
     காலையில் ராமர் ரிஷிகளிடம்  நீங்கள் சென்று  வேள்விகளை  ஆரம்பியுங்கள்.  நான் உங்களை காவல் காக்கிறேன்.  
  இந்த  செய்தியைக்  கேட்டதும்   முனிவர்களின் விரோதியான  ராக்ஷசன்  மாரீசன்  தன உதவியாலர்களுடன்
வேள்வியைத் தடுக்க ஓடினான்.   ஸ்ரீராமர் அவன்  மீது
பலனில்லா அம்பு தொடுத்தார். அதனால்  அவன் கடலைத்தாண்டி  நூறு மைல்களுக்கு அப்பால் சென்று    விழுந்தான்.


   பிறகு ஸுபாஹூ மீது அக்னி பானத்தைத் தொடுத்தார்.

தம்பி லக்ஷ்மணன்  ராக்ஷஸ படைகளை சம்ஹாரம்  செய்தான்.
இவ்வாறு  ஸ்ரீ ராமர்  அரக்கர்களைக் கொன்று வேள்விக்கான  இடையூறுகளைப்  போக்கி அந்தணர்களின் அச்சத்தைப்
போக்கினார் .   அப்பொழுது  அனைத்து தேவர்களும்
முனிவர்களும்  ஸ்ரீ ராமரைப் புகழ்ந்தனர்.

Friday, January 27, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .

      நகர மக்கள்  மகிழ்ச்சியாக  இருக்க ஸ்ரீ ராமர் பல பாலலீலைகள்  செய்வார்.
அவர் மிகவும் மன ஈடுபாட்டுடன் வேத புராணங்கள்
கேட்பார். பிறகு தன்  தம்பிகளுக்கு விளக்குவார்.

   ஸ்ரீ  ராமர்  அதி காலையில் எழுந்து அம்மா, அப்பா மற்றும்
   
குருவை வணங்குவார்.
அப்பாவின்   ஆணை பெற்று வேலை செய்வார்.
மிகவும் கீழ்படிந்து  நடப்பார்.
ராமரின் நன்னடத்தை கண்டு  ராஜா
மனதில் மிகவும் மகிழ்ந்தார்.

சகல லோகங்களிலும் வியாபித்திருக்கின்ற , எவ்வித ஆசைகளும் அற்ற , பிறவியில்லாத, உருவமற்றவர்.
அவருக்கு எந்த பெயரும் கிடையாது. அதே பகவான் பக்தர்களுக்காக  பல விதமான தெய்வீக நடிப்பு நடிக்கிறார்.

   இந்த எல்லா நிகழ்ச்சிகளையும்
    வர்ணித்து சொன்னேன்.
  இனிமேல் இருக்கும் கதையையும்
   மனம்  ஈடுபட்டு   கேள்.
     ஞானி  மகாமுனி  விஷ்வாமித்திரர்  வனத்தில்
   ஆஷ்ரமம் அமைத்து வசித்துவந்தார்.
 அங்கு முனிவர்கள் ஜபம் ,யாகம் ,யோகத்தில்
  ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்கள்
   ராக்ஷசர்களான
  மாரீசன் ,சுபாஹுவிடம்  அதிகம் பயந்துவந்தனர்.
 யாகப்புகை வந்தால்
  அரக்கர்கள் ஓடிவருவார்கள்.
 மிகவும் தொந்திரவு செய்வார்கள்.
 முனிவர்கள் மிகவும் துன்பப்பட்டனர்.

  இந்த பாவி அரக்கர்கள்
 இறைவன்  வதம் செய்யாமல்
 சாகமாட்டார்கள்  என்று காதியின் மகன்
  விஷ்வாமித்திரர்
 மனதில் மிகவும் கவலைப்பட்டான்.

ஆனால்  ஞானியான முனிவர் ,
பகவான் பூமியின் இன்னல் தீர்க்க
 அவதாரம் எடுத்துள்ளார்
என்பதை  அறிந்திருந்தார்.
இந்த அரக்கர்களின் உபத்திரவத்தை சாக்காக வைத்து
ஞானம் ,வைராக்கியம் மற்றும் எல்லா குணங்களின் இருப்பிடமாக  உள்ள  பகவானை கண்குளிரப்பார்ப்பேன்.
அவர்களிடம்  வேண்டி அந்த இரண்டு சகோதரர்களையும்
அழைத்துவருவேன்  என்று விஷ்வாமித்திரர் எண்ணியதும்
புறப்பட்டார்.
சரயு நதியில் ஸ்நானம் செய்துவிட்டு அரசரவையை அடைந்தார்.
 முனிவரின் வருகையை  அடைந்ததுமே  அரசன் அந்தணர்களை  அழைத்துக்கொண்டு முனிவரை
சந்தித்து சகல மரியாதையுடன்  வரவேற்று
ஆசனத்தில் அமரவைத்தார்.
 பாதங்களை கழுவி பூஜை செய்தார்.
என்னைப்போன்ற இன்று மற்றொருவர் யாரும் கிடையாது.
என்றார்.
பலவித உணவுகளைப் பரிமாறி  போஜனம் செய்வித்தார்.
முனி ஸ்ரேஷ்டரான   விஷ்வாமித்திரர்  மிகவும் சந்தோசப்பட்டார்.

பிறகு அரசர் தன் நான்கு புத்திரர்களையும் அழைத்து
நமஸ்காரம் செய்வித்தார்.
ஸ்ரீ ராமரைப் பார்த்ததும்  முனிவர் தன் மெய்மறந்தார்.
சக்ரவாகு பறவை முழு நிலவைக்கண்டு  மகிழ்வதுபோல
ஸ்ரீ  ராமரின் முக அழகுகண்டு முனிவர் மகிழ்ந்தார்.

      முனி   ஸ்ரேஷ்டரே ! இவ்வளவு கிருபையும் அனுக்கிரஹமும்  இதற்கு முன்  நீங்கள் காட்டியதில்லை.
உங்கள் நல்வருகையின்  காரணம் என்ன ? அதை உடனே நிறைவேற்றுகிறேன்   என்று  அரசன் சொன்னார்.
 அரசே! அரக்கர்களின் தொல்லைகள் அதிகமாகிவிட்டன.
அதனால் உன்னிடம்  ஸ்ரீ ராமரையும் ,அவனது தம்பியையும் என்னுடன் அனுப்பவேண்டும் என்று கேட்கவே  வந்துள்ளேன்.
அரக்கர்கள் வதம் செய்யப்பட்டால்
எனக்கு பாதுகாப்பு கிடைத்துவிடும்.
அரசே! மகிழ்ச்சியுடன் இவர்களை அனுப்பு.
அறியாமையையும் மோகத்தையும் விட்டு விடு.
இதனால் உனக்கு நற்புகழ் கிடைக்கும் .
அதிக நல்லவைகள் நடக்கும்.
 இந்த தனக்குப்பிடிக்காத கோரிக்கை கேட்டு அரசனின் மனம்  நடுங்கியது. அவரின் முகம் வெளிறியது.
அரசர் சொன்னார்--"நான் எனது இறுதி வயதில் இந்த நான்கு குழந்தைகளைப்  பெற்றுள்ளேன்.  நீங்கள் பூமி,
பசுக்கள்,செல்வம் ,நாட்டின்  கருவூலம் அனைத்தும் மகிழ்ச்சியுடன்  ஒப்படைத்துவிடுவேன். உயிரைவிட அன்பானது எதுவுமே இல்லை. அதையும் ஒரு நொடியில்
ஒப்படைத்துவிடுவேன்.
  எனக்கு எனது புத்திரர்கள் அனைவருமே மிக பிரியமானவர்கள். அவர்களிலும்  ராமரை என்னால் அனுப்ப முடியாது.
  அரக்கர்கள் அஞ்சத்தக்கவர்கள்.கொடுமையானவர்கள்.
என்னுடைய மகன் இப்பொழுதுதான் சிறிய பாலகன். மிகவும் மென்மையானவன். என்று அரசர் வேண்டினார்.
  அரசனின் அன்பு ரசம் நிறைந்த வார்த்தைகளைக்கேட்டு
முனிவர் மிகவும் மகிழ்ந்தார்.
அப்பொழுது வசிஷ்டர் அரசருக்கு பலவித அறிவுரைகளைக்கூறினார். அரசரின் மன ஐயங்களைப் போக்கினார்.
 அரசன் மிக அன்புடனும் மரியாதையுடனும் தன் இரண்டு புத்திரர்களையும்  அழைத்தார்.  அவர்களைத் தழுவி அறிவுரைகள்  வழங்கினார்.  இறைவா!இந்த இருவருமே என்னுடைய உயிர் போன்றவர்கள்.
முனிவரிடம் கூறினார் ---"நீங்கள் தான் இவர்களுக்கு தந்தை.
அரசன் மகன்களுக்கு பலவித  ஆசிகள்  வழங்கி  ரிஷியிடம் ஒப்படைத்தார்.
பிறகு ராமர் அம்மாவின் மாளிகை சென்று வணங்கி விடைபெற்றார்.
ஆண் சிங்கங்கள் போன்ற இருவரும்
முனியின் பயம் போக்க  மகிழ்ச்சியுடன் சென்றனர்.
   ராமர் கிருபாசாகரம் . தீரர்,சகல உலகங்களுக்கும் காரணமானவர்.
இறைவனின்  சிவந்த  கண்கள், அகன்ற மார்பு, மிகப்பெரிய புஜங்கள், நீலத்தாமரை யும் இலவங்கமரம் போன்ற   கருநீல சரீரம் ,, இடுப்பில் பீதாம்பரம் , அழகான அம்பறாத்தூணி ,
கையில் வில்லும் பாணமும் மிக அழகாக சோபித்தன.
விஷ்வாமித்திரருக்கு பெரும் பொக்கிஷம் கிடைத்ததுபோல் இருந்தது. அவர் நினைத்தார் --பிரபு!பிராமண பக்தர்.
எனக்காக பகவான் தன் தந்தையையும் விட்டுவிட்டார். 

Wednesday, January 25, 2017

ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் --ஐம்பத்தெட்டு

     ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் --ஐம்பத்தெட்டு

       ஒரு நாள்   மகனை குளிப்பாட்டி, அலங்கரித்து
       தொட்டிலில் தூங்கவைத்தாள்.
        பிறகு தன் குலதெய்வத்தை பூஜை செய்ய குளித்தாள்.
          பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தாள்.
          இதை எல்லாம் முடித்து சமையல் அறைக்குச் சென்று திரும்பினாள்.

            பிறகு மகனைப்பார்க்கச் சென்றால், அங்கே மகன்
          கடவுளுக்கு அர்பித்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
         
          அம்மாவிற்கு பயம் தோன்றியது.
      குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வந்தேன்.
      அவன்  தூங்கிக்கொண்டிருந்தான்.
       இந்த தொட்டிலில் தூங்கிய குழந்தை ,
     பூஜை அறைக்கு எப்படி யார் கொண்டுவந்து விட்டார்கள்?
      அவள் உடல்   நடுங்கியது.  மனம் தைரியத்தை இழந்தது.

   நான் அங்கும் இங்கும் இரண்டு
   பாலகர்களைப் பார்த்தேனா ?
    இது மன பிரம்மையா?
    அல்லது எதோ விஷேசமான காரணமாக இருக்குமா ?
    பிரபு ராமச்சந்திரர் அம்மா பயப்படுவதைப் பார்த்து சற்றே
    புன்முறுவல் பூத்தார்.
  பிறகு தன் தாயாருக்கு தன்
 உண்மையான  சுயரூபத்தைக் காட்டினார்.
 மிகப்பெரிய அற்புதமான காட்சி.
  அந்த மிகப்பெரிய தோற்றத்தில் எண்ணிக்கையில் அடங்கா
 சூரியன், நிலவுகள்,சிவன், பிரம்மா ,அதிகமான மலைகள்
 நதிகள் , சமுத்திரங்கள்,பூமி, வனம் , காலங்கள், செயல்கள், குணங்கள்,
 ஞானங்கள், இயற்கை சுவபாவங்கள் ,
 மேலும் இதற்கு முன் பார்க்காத பல
 பொருட்கள் தென்பட்டன.

   எல்லாவிதமான பலம் பொருந்திய
  மாயைகளைப்பார்த்து மிகவும்
  பயந்து கைகூப்பி நின்றாள்.
ஜீவன்களை மாயை ஆட்டிவைப்பதையும் ,
பக்தி ஜீவன்களை மாயையில் இருந்து விடுவிப்பதையும்
பார்த்தாள்.
  அன்னை மிகவும் ஆனந்தமடைந்தாள்..
அவளால் எதுவும் பேச முடியவில்லை.
கண்களை மூடி ராமச்சந்திரரின் கால்களில்
விழுந்து  வணங்கினாள்.
அன்னை ஆச்சரியத்தால் பிரம்மித்து நிற்பதைப்
பார்த்து  மீண்டும் பாலகன் வடிவத்தில் தோன்றினார்.

அன்னையால் இறைவனை துதிக்கக் கூட முடியவில்லை.
நான் உலகத்திற்கே பரமாத்மாவாவை  மகனாகப் பெற்றுள்ளேன்.

ஸ்ரீ ஹரி  அம்மாவிடம் கூறினார்--
"நான் காட்சியளித்த விவரத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்".

 கௌசல்யா மீண்டும் மீண்டும் வேண்டினார்--பிரபு! உங்கள் மாயை எனக்கு ஒருபொழுதும் வேண்டாம்.

  பகவான்  தன் பக்தர்களுக்கு பல பாலலீலைகளைக் காட்டினார்.
நான்கு சகோதரர்களும் வளர்ந்து தன் குடும்பங்களுக்கு நன்மை செய்தனர்.

   அப்பொழுது குரு நால்வருக்கும் முடி எடுக்கும் விழா   நடத்தினார். (சூடாகர்ம ). அந்தணர்கள் மீண்டும் அதிக  தக்ஷிணை பெற்றனர்.
நான்கு அழகான  அரசகுமாரர்களும்  அழகான அளவிடமுடியாத
செயல்கள்  சாஹசங்கள்  செய்தனர்.
  கண்ணுக்குப் புலப்படாத  பகவான்
தசரதரின் அரண்மனை முற்றத்தில்
சுற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சாப்பிட அழைத்தால் , தன்  தோழர்களை  விட்டு  விட்டு வருவதில்லை.
கௌசல்யா  அழைக்கவந்தால்,ஒளிந்து ஒளிந்து ஓடிவிடுவார்.
அம்மா அவரைப்பிடிக்க ஓடுவாள்.
  விளையாடுவதால் உடம்பு முழுவதும் தூசிகள் இருக்கும்.
இருந்தாலும் அரசர்  சிரித்துக்கொண்டே பிரியமுடன்
மடியில் உட்காரவைத்து கொஞ்சுவார்.

சாப்பிடும் போதே மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
இங்கும் அங்கும் ஓடுவார்.
ஸ்ரீ ராமரின் அழகான எளிய அப்பாவித்தனமான  பாலலீலைகளை
வேதங்களில் பாடப்பட்டுள்ளன. சிவன் ,சரஸ்வதி ,ஆதிசேஷன் போன்ற
தெய்வங்களும் பாடியிருக்கிறார்கள்.
இந்த லீலைகளை விரும்பாத வர்களை
இறைவன் பாக்கியமற்றவர்களாக படைத்துள்ளார்.

 குமாரப்பருவம் அடைந்ததும்  உபநயனம் செய்வித்தனர்.
நான்கு சகோதரர்களும்  குருவின் வீட்டிற்கு கல்வி கற்கச் சென்றனர்.
சில ஆண்டுகளிலேயே  அனைத்து கல்வியுலும் கலைகளிலும்
நிபுணத்துவம் பெற்றனர்.
ஒழுக்கசீலர்களான  சகோதரர்கள்  அரசர்களின் விளையாட்டே விளையாடினர்.
  வில்லும் அம்பும் ஏந்திய அவர்கள் மிகவும்  அழகாக  காட்சி அளித்தனர்.

   பார்ப்பவர்களை  எல்லாம் கவர்ந்தனர்.
அவர்கள் விளையாடும் தெருக்களில்
ஆண்களும் பெண்களும்  அன்பு மிகுதியால் நின்றுவிடுவார்கள்.

 கோசல நகரத்தில் இருக்கின்ற ஆண்கள், பெண்கள், வயதானவர்கள்,
பாலகர்கள் எல்லோருக்குமே ராமர் அன்பிற்குரியவராகத் திகழ்ந்தார்.

ராமரும் அவர் சகோதரர்களும் பிடித்த நண்பர்களுடன் தினந்தோறும் வேட்டை ஆடச் செல்வார்கள். மனதில் புனித எண்ணத்துடன்  மான் வேட்டை ஆடி அவைகளைக் கொண்டுவந்து ராஜா தசரதருக்கு காட்டுவார்கள்.

  ராமரின் பாணத்தால் உயிரிழந்த மான்கள் தேவலோகத்திற்குச்
சென்று விடும். ராமர் தன் தம்பிகளுடனும் தோழர்களுடனும் சாப்பிடுவார்.
பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடப்பார்.


 




 



    

Tuesday, January 24, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தேழு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தேழு

        ராமரின் நீலத்தாமரை போன்ற
        நீர் நிறைந்த மேகம் போன்ற கருப்பு நிற உடலில்
      கோடிக்கணக்கான  காமதேவர்களின் அழகு .
.    சிவந்த தாமரை பாதங்களின் நகங்களின் ஒளியானது
    செந்தாமரை இலைகளின் மேல்
    முத்துக்களைப்  போல்  இருந்தன.

   பாதங்களில்  வஜ்ரம், கொடி ,அங்குசம் ஆகியற்றின்
   சின்னங்கள் இருந்தன.
 சலங்கை ஒலி  கேட்டு முனிவர்களின்
  மனமும் மோகம் கொண்டன.
  இடுப்பில் கச்சை, வயிற்றின் மேல் மூன்று கோடுகள் இருந்தன.
  நாபியின் சிறப்பை பார்த்தவர்கள் தான் அறிவார்கள்.

    பல ஆபரணங்கள் அணிந்த பெரிய புஜங்கள்,
   இதயத்தில் புலி நகத்தின் மிகவும் விசித்திர அழகு,

     மார்பில் ரத்தினங்கள்  பதித்த  மணி மாலை ,
   பிருகு முனிவரின் பாதம் பதிந்த தழும்பு
  ஆகியவைகள்   மனம்
  கவர்வதாக இருந்தன.

       கழுத்து  சங்குபோன்று ஏற்றம் இறக்கத்துடன்
       மூன்று கோடுகளுடன் இருந்தது.
    தாடை மிகவும் அழகாக இருந்தது.
   இரண்டு அழகான பல் வரிசைகள்,
  சிவப்பு உதடுகள் இருந்தன .
 மூக்கையும் திலகத்தின் அழகையும் வர்ணிக்க இயலாது.
 அழகான காதுகள் மிகவும் அழகான கன்னங்கள்
 அதிக அழகாகத் தோன்றின.
 மழலையின் மழலைப் பேச்சுக்கள்
மிகவும் இனிமையாக இருந்தன.
பிறந்ததில் இருந்தே வளர்ந்த மென்மையான
சுருட்டை முடிகள்,தாயாரால் சீவிமுடித்து
 சிங்காரித்து நேர்த்தியாக காட்சிதந்தன.

உடலில் மஞ்சள் பட்டாடை அணியப்பட்டிருந்தது.
அவர் தவழ்ந்து செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
அவரின் உருவ அழகை வேதங்களும் ஆதிசேஷனாலும்
வர்ணிக்க இயலாது.
 சுகத்தின் மூலம்,மோகத்தைக் கடந்தவர்,வானியலும் புலன்களாலும்  தென்படாத இறைவன் இன்று அன்பின் வசப்பட்டு
 பவித்திரமான பாலலீலைகள் புரிகிறார்.

   இவ்வாறு உலகத்தின் தாய் -தந்தை போன்ற
 ராமர் அவதிநகர மக்களுக்கு     சுகம் அளிக்கிறார்.
 ராமரின் மேல் பக்தியை இணைத்தவர்களுடைய பாக்கியம் ,
 பகவான் இன்று பாலலீலைகள் புரிந்து அவர்களை
 ஆனந்தப் படுத்துகிறார்.
ஸ்ரீ  ராமரை வணங்காமல் மனிதன் கோடி
 உபாயங்கள் செய்தாலும் ,
உலக பந்தங்களைத் துறக்க முடியாது.
உலகத்தையே வசப்படுத்தி ஆட்டிவைக்கும்
மாயையும் பகவானைக்கண்டு பயப்படும்.
பகவான் மாயையைத் தன் புருவ அசைவால் ஆட்டிவைப்பார்.
இப்படிப்பட்ட இறைவனை விடுத்து வேறு யாரை வணங்க முடியும். ?

மனம், செயல்,வாக்கு என்ற திறமையை எல்லாம் விட்டு விட்டு
பகவானை ஜபித்ததுமே  ரகுநாதரின் கிருபை கிட்டும்.

ராமர்  தன்  பால  லீலைகளால் அனைவரையும் மகிழ்வித்தார்.
கௌசல்யா அவரை மடியில் வைத்துகொஞ்சுவாள்.
ஊஞ்சலில் அமரவைத்து ஆட்டி மகிழ்வாள்.
குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவதில் கௌசல்யா இரவு-பகல்  கழிவதை மறந்துவிடுவாள்.மகனின் மேல் இருந்த அன்பால்
 அவருடைய மழலை குணங்களை  பாடுவது வழக்கம்.

ராமசரிதமானஸ்----பாலகாண்டம் --ஐம்பத்தாறு.

 
   ராமசரிதமானஸ்----பாலகாண்டம் --ஐம்பத்தாறு.

    கைகேயி யும் சுமித்திராவும் அழகான புத்திரர்களைப் பெற்றனர்.

 அவதியின் அழகு இரவு -பகல் இரண்டும்
சேர்ந்ததுபோல் இருந்தது.
மாலைநேரமும் கலந்து வந்தது.
ஊதுபத்தியின் புகை இருள் மாலைநேரம்.
 அபீர் சிவப்பு வண்ணக்கலவை பறந்து கொண்டிருந்தது.
 அரண்மனையில் மின்னிய மணிகள்-ரத்தினங்கள்
நக்ஷத்திரங்கள்.
அரண்மனை கலசம் நிலவு .
இவ்வாறு பகலும் இரவும் மாலைநேரமும் கலந்த அவதி
 மிகவும் சோபித்தது.
அரண்மனையில் ஒலித்த  வேத மந்திரங்கள்
காலத்திற்கேற்ற
புள்ளினங்களின் பாடல் போல் இருந்தன.

  ஒருமாதமாகிவிட்டது. சூரியன் தன்  தேருடன்
 அங்கேயே நின்றுவிட்டான்.
பிறகு இரவு எப்படி வரும் ?
 இந்த ரஹசியத்தை  யாரும் அறியவில்லை.
சூரிய பகவான் ராமரின் புகழ்பாடி சென்றுவிட்டார்.
இந்த மஹோத்சவத்தைப்  பார்த்துவிட்டு
தன் பாக்கியத்தைப் தாங்களே
புகழ்ந்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி சென்றனர்.
 
சிவன் பார்வதியிடம் சொன்னார் :--
நீ ராமரிடம் உண்மையான பக்தியும்
 உறுதியான அன்பும் கொண்டுள்ளாய்.
 அதனால் உன்னிடம் ஒரு ரஹசியத்தை   சொல்கிறேன்.
 நானும் காக்புஷண்டியும்  மனிதவடிவில் அங்கு இருந்தோம்.
ஆகையால் எங்களை யாரும் அறியவில்லை.
  பரம ஆனந்தத்துடனும்  அன்புடனும் மிக மகிழ்ச்சியுடன்
அங்கு சுற்றிக்கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த சுபமான  நிகழ்வை ராமரின்
 கிருபை உள்ளவர்கள் தான் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த சுப நேரத்தில் அரசன் அனைவரின்
 மனம் விரும்பியபடி தான-தர்மங்கள் செய்தான்.
 யானை, குதிரை ,தேர்,பசுக்கள்,வைரங்கள்,
வித விதமான ஆடைகள் கொடுத்தான்.
 அரசன் அனைவரையும் திருப்திபடுத்தினான்.
இதனால் அனைவரும் ஆழ்மனதில் இருந்து
 குழந்தைகளை சிரஞ்சீவியாக இருக்க ஆசிகள் வழங்கினர்.

இவ்வாறு சில தினங்கள் கழிந்தபின் ,
அரசர்  தன் குரு வசிஷ்டரை
தன் மகன்களுக்கு  பெயர் சூட்ட அழைத்தார்.
அப்பொழுது குரு அரசரிடம் இவருக்கு
ஒப்பிடமுடியாத பல பெயர்கள் இருக்கின்றன.
இருப்பினும் என் அறிவுக்கேற்ற பெயரை சொல்கிறேன்.
 
 ஜ்யேஷ்ட புத்திரர் ஆனந்த சமுத்திரமும்
 சுகத்தின் நிதியுமாவார்.
அவர் மூவுலகிற்கும் சுகம் அளிப்பவர்.
உங்களின் மூத்தமகனின் பெயர் ராமர்.
அவர் அகில உலகத்திற்கும் அமைதி அளிப்பவர்.

இரண்டாவதாக உலகத்தையே  வளர்ப்பவர்,
அவருடையபெயர் பரதன்.
மூன்றவதாக உள்ளவனை நினைத்தாலே
விரோதிகள் அழிந்துவிடுவர்.
அவன் பெயர் சத்துருக்னன்.
நல்ல லக்ஷணங்களுடன் ராமரை அதிகம் விரும்பும்
புத்திரன் அவன் பெயர் லக்ஷ்மணன்.
குருஜி நன்றாக சிந்தித்து ஆலோசித்து
 இந்த பெயர்களை  சூட்டினார்.
 பிறகு அரசனிடம் ,அரசே ! உங்கள் நான்கு புத்திரர்களும்
வேதங்களின் தத்துவங்கள்.
சாக்ஷாத் பராத்பர பகவான்கள்.
முனிவர்களுக்கு செல்வம் போன்றவர்கள்.
பக்தர்களுக்கு சர்வமும் அவரே.
சிவனுக்கு அவர் உயிர் போன்றவர்.
இப்பொழுது அவர் உங்களுக்காக பாலலீலைகள்
புரிவதை சுகமாகக் கருதுகிறார்.
லக்ஷ்மணன் குழந்தைப் பருவத்திலிருந்தே
ராமரை மிகவும் நலம் விரும்பி என அறிந்து
அவருடன் தன்னை இணைத்துக்கொண்டார்.

பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும்ராமர்
சுவாமி . இருவரும் அவர்களின் அன்பிற்குப்
பாத்திரமான தொண்டர்கள்.
 கருப்பும் வெள்ளையுமான
இரு மகன்களின் ஜோடிப் பொருத்தத்தையும்
அன்பையும் கண்டு   திருஷ்டி கழித்தனர்.
நான்கு சகோதரர்களும் ஒழுக்கம்,அழகு,
குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தனர்.
ஆனால் ராமரிடம் இவைகள் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

 ராமரின் இதயத்தில் கருணை என்ற நிலவு பிரகாசித்தது.
அவருடைய மனோஹர சிரிப்பு
 அந்த கருணை என்ற நிலவின் கதிர்கள்.
 அம்மா மடியிலும் ,தொட்டிலிலும் அவரை மிகவும் கொஞ்சுவாள்.
  இன்று கௌசல்யாவின் அன்புக்கு கட்டுப்பட்டு
மழலைச் செல்வமாக  விளையாடும் ராமர்
பகவான்.சகல லோகத்திலும் வியாபித்திருப்பவர்.
 பிரம்மா.  பிறவியற்றவர். விநோதமில்லாதவர். மாயையில்லாதவர்.





Monday, January 23, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தைந்து

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தைந்து


      ராணிகள் கர்ப்பமானதும்   அரண்மனையில்
மிகவும் ஆனந்தமாக அழகாக இருந்தனர்.
பிரபு வெளிப்படும் நேரம் வந்தது.
யோகம், லக்னம்,கிரஹம், வாரம் ,திதி எல்லாமே அனுகூலமாகின.
ஸ்ரீ ராமர் பிறந்ததது  சுகத்தின் ஆணிவேர். அதனால்
பூமியில் உள்ள அசையும் அசையாதன அனைத்தும் மிக மகிழ்ந்தன.
  சித்திரை மாதம்,நவமி திதி ,சுக்லபக்ஷம் பகவானுக்கு பிரியமான பிறக்கும் முகூர்த்தம். மதியநேரம்.அதிக குளிரும் இல்லை.அதிக வெயிலும் இல்லை.
அந்த  புனிதநேரம்  அகில உலகத்திற்கும் அமைதி தரக்கூடியது.
குளிர்ந்த மந்தமான மணமுள்ள காற்று வீசிக்கொண்டிருந்தது.
தேவர்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர். சாதுக்கள் மனதில் மிக ஆவலாக
எதிர்பார்த்து இருந்தனர்.

காடுகளில் பூக்கள்  மலர்ந்திருந்தன.
மலைகளில் மணிகள் மின்னிக்
கொண்டிருந்தன.   எல்லா நதிகளிலும் அமிர்தம் ஓடிக்கொண்டிருந்தது.

பிரம்மா பிரபு பிறக்கும் அறிந்தார். அப்பொழுது அனைத்து தேவர்களும்
விமானத்தில் புறப்பட்டனர். களங்கமற்ற ஆகாயம் தேவர்களால்
நிறைந்தது. கந்தர்வர்கள் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர்.
அழகான கைகளில் பூமாரி பொழிந்தனர். ஆகாயத்தில் முரசுகள் முழங்கின.  நகர்கள், முனிவர்கள்,தேவர்கள் ஸ்துதிபாடினர்.
பலவிதத்திலும் அன்பளிப்பு கொடுக்க விரும்பினர்.
தேவர்களுடைய கூட்டம் வேண்டிவிட்டு தன்-தன் லோகத்திற்குச் சென்றனர்.
அனைத்து உலகிற்கும் அமைதி தரக்கூடிய , வையகத்திற்கு
ஆதாரமான பிரபு ஜன்மம்  எடுத்தார்.
ஏழைகளின் மேல் இரக்கப்படும்  கௌசல்யாவின் மகனாக
கிருபையுள்ள ராமர் பிறந்தார். முனிவர்களின் மனம் கவர் மகனின்
அத்புத அழகை எண்ணி  கௌசல்யா மகிழ்ந்தாள்.
மேகவர்ண உடல், நான்கு புஜங்களிலும் ஆயுதங்கள், தெய்வீக நகைகள்,
வனமாலை அணிந்த மார்பு, பெரிய பெரிய கண்கள்,
கண்களுக்குப் பிரியமான ஆனந்தமளிக்கும் ராமர் பிறந்தார்.
அவர் கர ராக்ஷசர்களைக் கொல்லப்போகின்ற பகவான் தோன்றினார்.

  இருகைகளையும் சேர்த்து  வணங்கி  சொன்னாள்--
ஹே  அனந்த்! நான் எப்படி உன்னைப் புகழ்வேன்.
வேதங்கள்  உன்னை மாயை, குணம்,ஞானத்திற்கு அப்பாற்பட்டவர்,
அளவில்லாதவர் என்று சொல்கின்றன.
ஸ்ருதிகளும் சாதுக்களும் இரக்கத்தின் கடல் ,
அனைத்து குணங்களின் இருப்பிடம் என்று புகழ் கின்றன,
அதே பக்தர்களின் மேல்  அன்பு காட்டும் , லக்ஷ்மிபதி என் நலத்திற்காக தோன்றி  உள்ளீர்கள்.

உன்னுடைய ஒவ்வொரு  ரோமத்திலும் அநேக பிரம்மாண்டங்களின்
கூட்டங்கள் நிரம்பயுள்ளன என்று  வேதங்கள் சொல்கின்றன.
நீ  என்னுடைய கர்ப்பத்தில் இருந்தாய். இந்த பரிகாசமான விஷயத்தைக்
கேட்டு  மனிதர்களின் அறிவு  சஞ்சலமடையும்.
அம்மாவிற்கு ஞானம்  வந்ததும் பிரபு புன்சிரிப்பு சிரித்தார்.

    அவர் முன் ஜென்மத்தின் அழகான கதை சொல்லி ,
வாத்சல்ய அன்பைப் பெற்றார்.

   அம்மா மகனிடம் சொன்னாள்---நீ இந்த வடிவத்தை விட்டுவிட்டு ,
அன்பான பால லீலைகளில் ஈடுபடு.  எனக்கு மழலை விளையாட்டால்
மிகவும் ஆனந்தம்  அடைவேன்.   அம்மாவின் சொல் கேட்டு தேவர்களின் சுவாமியான பகவான் பாலகனாக மாறி அழ ஆரம்பித்தார்.

     
துளசிதாசர் சொல்கிறார்--இந்த ராம பாத்திரத்தைப் புகழ்ந்து பாடுவோர் ,
 ஹரி பதம் அடைவர். மீண்டும் அவர்கள் உலகம் என்ற கிணற்றுக்குள்
விழ மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மீண்டும் பிறவி இருக்காது,

   அந்தணர்கள்,பசுக்கள்,தேவர்கள் ,சாதுக்கள்  ஆகிய அனைவருக்காக
பகவான் மனித அவதாரம் எடுத்தார்.  அவர் மாயை,முக்குணங்கள்
மற்றும் பஞ்சேந்திரிய  சுகங்களுக்கு அப்பாற்பட்டவர். தன் விருப்பத்தால் அவர் தெய்வீக அவதாரம் எடுத்தார்.
   குழந்தையின் அழு குரல் கேட்டு , எல்லா ராணிகளும் ஆவலுடன் ஓடி வந்தனர்,  அனைத்து நகரமக்களும் ஆனந்தமடைந்தனர்.
   அரசர் தசரதர் மகன் பிறந்த செய்தி கேட்டு பிரம்மானந்தம்  அடைந்தார்.

அன்பினால் தளர்ந்த உடலை சமாளித்து எழுந்தார். மனதில் அதிசயமான
அன்பும் ஆனந்தமும் உண்டாகியது,
  யாருடைய பெயரைக்கேட்டாலே நலம் உண்டாகுமோ ,
அதே பிரபு என் வீட்டிற்கு வந்திருந்தார்.
அரசனின் மனதில் பரம ஆனந்தம் ஏற்பட்டது. அவர் வாத்தியக்காரர்களை
அழைத்து வாத்தியங்கள் வாசிக்கச் சொன்னார்.

    குரு வசிஷ்டருக்கு அழைப்பு சென்றது. அவர் அந்தணர்களை அழைத்துக்கொண்டு   அரசவைக்கு வந்தார்.
அழகின் ராசியான ஒப்புமைஇல்லா குழந்தையைப் பார்த்தார்.
 பிறகு  அரசர்  நாந்திமுக சிராத்தம் செய்து ,குல ஜாதி வழக்கப்படி கிரியைகள் செய்து , அந்தணர்களுக்கு கோ தானம், பூதானம்,வஸ்த்ரதானம், ஸ்வர்ண மணிகள் தானம் முதலியவற்றை செய்தார்.
கொடிகள்,தோரணங்களால்  நகரம் அலங்கரிக்கப் பட்டது. ஆகாயத்தில் இருந்து பூமாரி பொழிந்தது. எல்லோரும் பிரம்மானந்தத்தில் மூழ்கினர்.

பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இயற்கையான அலங்காரத்துடன் வந்தனர்,   தங்க கலசம்  எடுத்துகொண்டு , தட்டுகளில் மங்களப் பொருட்கள்  எடுத்துக்கொண்டு , பாடிக்கொண்டே அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஆரத்தி எடுத்து குழந்தையின்  பாதங்களை வணங்கினர்.
மகதர்கள், சூதர்கள், கைதிகள், பாடகர்கள் முதலிய அனைவரும்
சுவாமியின் பவித்தரமான புகழைப் பாடினர்.
அரசன் அனைவருக்கும் மன நிறைவு தரும் தானங்கள் கொடுத்தான்.
தெருக்கள் முழுவதும் குங்குமப்பூ , சந்தனம்,கேசருடைய சகதி உண்டாகியது.
  ஒவ்வொருவீட்டிலும் மங்கள வாத்தியமும் பாடலும் இறைவன் பிறந்ததால்
முழங்கின. அந்த நகர மக்கள் அடைந்த ஆனந்தத்தை சரஸ்வதி மற்றும் சர்பங்களின் அரசன் ஷேஷனாலும் வர்ணிக்க இயலாது, 

Sunday, January 22, 2017

ராமசரிதமானஸ்--பாலகாண்டம்--ஐம்பத்தி நான்கு.

ராமசரிதமானஸ்--பாலகாண்டம்--ஐம்பத்தி நான்கு.

     பிராம்மாவின் அறிவுரைப்படி வானரர்கள் மலைகளிலும் ,
காடுகளிலும்  தன வீரமுள்ள சேனைகளுடன்  தங்கி இருந்தனர்.

  அயோத்தியாவில் தசரதர் என்ற அரசர் ஆட்சி செய்தார்.
அவர் பெயர் வேதங்களில் புகழ் பெற்றிருந்தது.
அவர் தர்மத்தில் அதிகம் பற்றுகொண்ட தர்மவீரர்.
அவர் மிகப்பெரிய ஞானி.
அவர் மனதில் சாரங் என்ற வில்லேந்திய பகவானிடம் பக்தி இருந்தது.
அவர் அறிவு அந்த பக்தியிலேயே லயித்திருந்தது.

அவருக்கு கௌசல்யா மற்றும்  பிரியமுள்ள ராணிகள்  இருந்தார்கள்

அவர்கள் அனைவருமே மிகவும் பணிவாகவும் ,கணவனுக்கேற்றபடி நடப்பவர்களாகவும்  இருந்தனர்.
அவர்களுக்கு ஹரியின் மேல் மிகுந்த பக்தி இருந்தது.
 தசரதருக்கு குழந்தை இல்லை.  மிகவும் அவருக்கு தன மேல் வெறுப்பு வந்துவிட்டது. உடனே குருவின் ஆஷ்ரமம் சென்று அவர் பாதங்களை வணங்கி  வேண்டினார்.
குரு வஷிஸ்டர்  அவருக்கு மிகவும் தைரியமளித்தார். அவர் அரசனிடம் உனக்கு  நான்கு மகன்கள் பிறப்பார்கள். அவர்கள் மூவுலகத்திலும்
புகழ் பெறுவர்.  பக்தர்களின் பயத்தைப் போக்குவர்.
வசிஷ்டர் ஸ்ருங்கி ரிஷியை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்வித்தார். முனிவரின் பக்தியுடன் செய்த வேள்வியால் மகிழ்ந்து
அக்னிதேவர் தோன்றி  கலசத்தில் பாயாசம் கொடுத்து இதை உன் விருப்பப்படி  பங்கிட்டுக்கொடு என்றார்.
ராஜா  மிகவும் மகிழ்ந்தார்.
உடனே அரசர் தன் ராணிகளை அழைத்தார். அந்த பாயாசத்தில் பாதியை
கெள்சல்யாவிற்குக்  கொடுத்தார். மீதமுள்ள பாதியை இரண்டு பங்குளாக்கினார். அதில் ஒரு பங்கை ராணி கைகேயிக்குக் கொடுத்தார்.
மீதமிருந்ததை  கௌசல்யா ,கைகேயி இருவரிடமும் அளித்து சுமித்திரைக்கு
கொடுக்குபடி சொன்னார்.  அவர்கள் மகிழ்ந்து அதை சுமித்திராவிற்குக் கொடுத்தனர்.

ராணிகள் கருதரித்தனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.  ஸ்ரீ ஹரி கர்பத்தில்
தோன்றியதுமே எல்லா உலகத்திலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகின.

Saturday, January 21, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று


    ராவணனின்  ஆட்சியில்  அடுத்தவன்  செல்வம் ,
  அடுத்தவனின்மனைவி யை     விரும்புபவர்கள்,
  துஷ்டர்கள்,திருடர்கள்,சூதாட்டக்காரர்கள்
  மிகவும் அதிகம் ஆகிவிட்டனர்.

 மக்கள் தாய்-தந்தை மற்றும் தேவர்கள்
 சொல்வதை ஏற்கவில்லை.
 சாதுக்களுக்கு சேவை செய்யாமல்
 சாதுக்களிடம் இருந்து சேவை பெற்றனர்.

சிவன் பவானியிடம் சொன்னார் ---
இப்படிப்பட்ட நடத்தை உள்ளவர்கள் ,
அப்படிப்பட்ட மிருகங்களை அரக்கர்கள் என்றே கருதவேண்டும்.

  இவ்வாறு  தர்மத்தின் மேல் விருப்பமும்
  நம்பிக்கையும் இல்லாதவர்களின்
கடும் செயலால்  பூமி அதிகமாக கவலைப்பட்டது.

பூதேவி  நினைத்தாள்--மலைகள்,நதிகள்,கடலின் சுமை ,
எனக்கு அதிக சுமையாக இல்லை.
  ஆனால் மற்றவர்களுக்குத் துன்பங்கள்
 செய்பவர்களைப்  பொறுக்கமுடியாது.
 பூமியில் எல்லாமே அறத்திற்கு
எதிராக இருப்பதை பூதேவி  பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனால்
ராவணனின் பயத்தால் ,  எதுவும் பேசமுடியவில்லை.

இறுதியில்  நன்கு சித்தித்து  பசுவாக மாறி
 எல்லா தேவர்களும் முனிவர்களும்
 மறைந்திருந்த இடத்திற்குச் பூமாதேவி சென்றாள். அங்கே
பூமிதேவி  அழுது  தன் துன்பத்தைக் கூறியது.
ஆனால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்பொழுது தேவர்கள் , முனிவர்கள், கந்தர்வர்கள்
எல்லோருமாக சேர்ந்து
பிரம்மலோகத்திற்குச் சென்றனர்.
பயத்தில் பீதியுடன் வியாகூலமான
பூமிதேவியும் பசு வடிவத்தில் அவர்களுடன் சென்றார் .
பிராம்மா அனைத்தும் அறிந்துகொண்டார்.
பிரம்மா மனதில் தன்னால் எதுவும் முடியாது
 என்பதை யூகித்து அறிந்தார்.
அப்பொழுது அவர் பூமிதேவியிடம்  சொன்னார் --
நீ யாருக்கு அடிமையோ அவர்தான்
 எங்களுக்கும் உனக்கும்உதவியாளர்.

நீ மனதை தைரியமாகக் கொண்டு
ஹரியின் பாதங்களை நினைவில் கொள்.
பிரபு தன்  தாசர்களின் மனவேதனைகளை  அறிவார்.
அவர் உன்னுடைய கடினமான ஆபத்திலிருந்து காப்பாற்றுவார். .
பிரபுவை எங்கே சென்று பார்த்து
 நமது வேதனைகளைக் குற்றம் சாட்டுவது என்று
 அனைவரும் யோசித்தனர்.
 சிலர் வைகுண்டம் செல்வதற்கும் ,
சிலர் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானைப் பார்ப்பதற்கும்
யோசனை சொன்னார்கள்.
   பக்தனின் பக்தி மேலும் அன்பின் அடிப்படையில்
 இறைவன் அப்படியே காட்சி அளிப்பார்.
 பார்வதி! அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூறினேன்---
"இறைவன் எல்லா இடங்களிலும் சமமாக வியாபித்து இருக்கிறார்.
அன்பினால் அவர் வெளிப்படுவார். என்பதை நான் அறிவேன்.
சொல்லுங்கள் கடவுள் இல்லாத நாடு,
திக்குகள், திக்கற்ற இடம் எது?
அவர் எல்லாஇடத்திலும்  அசைவன அசையாதவன என
அனைவரிடத்திலும்
இருந்தாலும்  இல்லாதவராகிறார்.
அவருக்கு எதிலும் பற்றில்லை.
அவர் அன்பினால் வெளிப்படுவார்.
நெருப்பு இல்லாத இடமில்லை .ஆனால்
 எங்கு அது வெளிப்படனுமோ அங்கு வெளிப்படுகிறது.
 அப்படியே இறைவனும்."
 நான் சொன்னது எலோருக்கும் பிடித்திருந்தது.

எல்லோரும் பிரம்மாவும் என்னைப் புகழ்ந்தார்.
பிரம்மா மிகவும் மகிழ்ந்தார்.
அவர் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.
 பிரம்மா  தீரமான அறிவுடன்  கைகூப்பி இறைவனை துதித்தார்.

  தேவர்களின் ஸ்வாமியே!
தொண்டர்களுக்கு சுகமளிப்பவரே!
சரணடைந்தவர்களைக்  காப்பவரே!
 நீங்கள் வாழ்க!
பசுக்களுக்கும் அந்தணர்களுக்கும்
 நன்மை அளிப்பவரே!
அசுரர்களை அழிப்பவரே!
சமுத்திரத்தின் மகள் லக்ஷ்மிக்கு காதலரே!
உங்களுக்கு ஜெயமே.
தேவர்களையும் பூமியையும் வளர்ப்பவரே!காப்பவரே!
உங்கள் லீலை மிகவும் அற்புதமானது.
 உங்கள் ரகசியத்தை யாரும் அறிய மாட்டார்கள்.
 குணத்தால் இயற்கையாக கிருபை உள்ளவரே!
ஏழைகளைக் காப்பவரே!
நீங்கள் எங்கள் மீது கிருபை காட்டுங்கள்.
நீங்கள் அவினாஷி !
எல்லோரின் இதயத்திலும் இருப்பவர்.
சர்வலோகங்களிலும்  வியாபித்திருப்பவர் .
மிக ஆனந்தவடிவமானவர்!
புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.
மாயை இல்லாதவர்,
முக்தி  அளிப்பவர்.
நீங்கள் வாழ்க!
உலகப்பற்றுக்களை எல்லாம் துறந்த
 ஞானம் பெற்ற முனிவர்களும்  மிகவும்
 பற்றும் பாசமும் அன்பும் கொண்டு
இரவும் பகலும் உங்களை தியானம் செய்கின்றனர்.
உங்களுடைய புகழ்ப்பாடல் பாடுகின்றனர்.
 அந்த சச்சிதானந்த மூர்த்திக்கு ஜயம் உண்டாகட்டும்.
 அவர் தனியானவர்.
திரிகுண ரூபி,
 பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றின்
ஒன்றுபட்ட உருவம்,
 மூன்றுவித சிருஷ்டிகளை சிருஷ்டித்தவர்.
காரணமின்றி சிருஷ்டிக்காதவர்,
பாவங்களை அழிக்கும்
கடவுளே !எங்களை சற்று நினைக்கவும்.
எங்களுக்கு பக்தியும் பூஜையும் தெரியாது.
 உலகத்தின் பயத்தைப் போக்குபவர்.
முனிகளின் மனதை ஆனந்தப்படுத்துபவர்.
விபத்துகளைப் போக்குபவர்
. நாங்கள் எல்லா தேவர்களும்   உங்களிடம்
 அடைக்கலமாக வந்துள்ளோம்.

    பகவானே !வேதங்களின் கூற்றுப்படி  உங்களின்
சத்தியமான தோற்றத்தை வேதங்கள் சொல்லவில்லை.
சரஸ்வதி, சேஷன்,அனைத்து ரிஷிகள்  யாரும் அறிந்திருக்கவில்லை.
அப்படியிருக்கின்ற பகவானாகிய நீங்கள்
எங்கள் மீது தயவு காட்டுங்கள்.
கடைவதற்கு நீங்கள் மந்தராச்சல வடிவம் எடுத்தீர்.
சகல குணங்களும் கொண்ட சர்வேசா!
எல்லாதேவர்களும்  பயத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறோம்.
உங்களை வணங்குகிறோம்.
  தேவர்களும் பூமி மாதாவும் பயமும் பீதியுடனும்  இருப்பது
அறிந்து அவர்களின் சந்தேஹங்களைப்போக்க
அசரீரி ஒலித்தது-----
முனிவர்களே!சித்தர்களே!தேவதைகளே!
தேவர்களுக்கு சுவாமிகளே!
 பயப்படாதீர்கள்.
  உங்களுக்காக  நான் பவித்திரமான  சூரிய குலத்தில்
  என்  அம்சங்களுடுடன்    அவதாரம்  எடுப்பேன்.
காஷ்யப முனிவரும் அதிதியும் மிகப் பெரிய தவம் செய்தனர்.
நான்  முதலிலேயே  அவர்களுக்கு வரம் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் தான் தசரதர்-கௌசல்யா தம்பதிகளாக மனிதவடிவத்தில்
அயோத்தியா புரியில் தோன்றியுள்ளனர்.
அவர்களுக்கு நான் ரகு குலத்தில்  சிறந்த நான்கு சகோதரர்களாக
அவதாரம் எடுப்பேன்.
நாரதர் சொன்னது அனைத்தும் சத்தியமாக்குவேன்.
நான் என் தேவியுடன் தோன்றுவேன்.
நான் பூமியின் எல்லா துன்பங்களையும் போக்கிவிடுவேன்.
தேவர்களே!நீங்கள் பயப்படவேண்டாம். தேவவாணி கேட்டு அனைத்து தேவர்களின் மனம் குளிர்ந்தது.   அவர்கள் உடனே தங்கள் இடத்திற்குத் திரும்பிச்சென்றனர்.
பிரம்மா பூமியிடமும் விளக்கினார். அதுவும் மனதில் மிக
நம்பிக்கை கொண்டு திரும்பியது.
பிரம்மா தேவர்களிடம்," நீங்கள் வானரங்களாக  வேடமிட்டு
இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள்." என்றார்.

அனைத்து தேவர்களுக்கும் மனதில் சாந்தி கிடைத்தது.
பூமியில் அவர்கள் வானரர்களாக தோன்றினர்.
அவர்களிடம் அதிக பலமும் வீரமும் இருந்தது.
எல்லோருமே சூர-வீரர்களாகத் திகழ்ந்தனர்.
மலைகள், மரங்கள் மேலும் நகங்கள் தான் அவர்களுடைய ஆயுதங்கள்.
அவர்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

Friday, January 20, 2017

रामाचारितमानस --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்திரெண்டு ,

रामाचारितमानस --ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -ஐம்பத்திரெண்டு ,

        புத்திரர்கள்-பேரன்கள் ,  குடும்ப உறவுகள்,
        சேவகர்கள்  ,குவியலாக      இருந்தனர்.
      அரக்கர்களின் இனங்களை எப்படி கணக்கெடுக்க முடியும்?

     தன்னுடைய  சேனையைப் பார்த்து ஆணவ
    குணம் கொண்ட ராவணன்  சொன்னான் :-"அரக்கர் படைகளே  !    
      கேளுங்கள்.
   தேவர்கள் நம்முடைய எதிரிகள்.
 அவர்கள் நேருக்குநேர் போரிடமாட்டார்கள்.
 சக்திவாய்ந்த விரோதிகளைக்கண்டு
 பயந்து ஓடிவிடுவார்கள்."

 அவர்களுடைய மரணம் ஒரே ஒரு உபாயத்தால் தான் முடியும்.

 நான் உனக்களுக்கு அறிய/ புரிய   வைக்கிறேன்.
கேளுங்கள்.
 அவர்களுக்கு சக்தி அளிக்கின்ற பிராமண போஜனம் ,
யாகம் ,வேள்வி ,சிராத்தம்  இந்த எல்லாவற்றிலும்
சென்று இடையூறு செய்யுங்கள்.
பசியால்  பலஹீனமான  தேவர்கள் சஹஜமாக என்னை சந்திக்க வருவர்,
அப்பொழுது அவர்களைக்கொன்று விடுவேன்  அல்லது
 முற்றிலும்   அடிமையாக்கி விட்டுவிடுவேன்.

பிறகு மேகநாதனை  அழைத்து  அவன் பலத்தினை வர்ணித்து ,
 விரோதி  கருத்துக்களை தூண்டிவிட்டு ,
கற்றுக்கொடுத்து  சொன்னான் --மகனே! போரில் தீரனும் பலசாலியாக  விளங்கும்  தேவர்களை முதலில் வென்று  கட்டி கொண்டுவரவும்.

மகன்    தந்தையின் கட்டளையை சிரமேற்கொண்டான் .
இவ்வாறு அனைவருக்கும் கட்டளை இட்டு ,
தானும் கதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் .

ராவணன் செல்வதால் பூமியே அதிர்ந்தது.
அவன் கர்ஜனையால் தேவப்பெண்களின்  கர்ப்பம் கலைந்தது.
ராவணன் மிக கோபமாக வருவதறிந்து
 தேவர்கள் சுமேரு மலையின் குகையில்
 ஒழிந்து  கொண்டனர்.

  ராவணன் திக்கு பாலகர்களின்  அழகான லோகங்கள்
 அனைத்தும் சூன்யமாக இருப்பதைக் கண்டான்.
  அவன்  மிகப்பெரிய சிங்க கர்ஜனை எழுப்பி ,
தேவர்களுக்கு அறைகூவல் விடுத்து  திட்டினான்.
   யுத்தம் செய்யும்  மதம் பிடித்து  மதம் பிடித்த யானை போன்று ,

தன்னுடன் போர் புரியும் தகுந்த இணையைத் தேட ஆரம்பித்தான்.

ஆனால்  அவனுக்கு இப்படிப்பட்ட போர்வீரன் எங்கும் கிடைக்கவில்லை.
சூரியன்,நிலவு,வாயு ,வருணன்,குபேரன் ,அக்னி ,காளான், கின்னரர்கள்,
சித்தர்கள்,மனிதர்கள்,தேவர்கள், நாகர்கள் எல்லோரின் பின்னால்
மிகவும் பிடிவாதமாகச் சென்றான். பிரம்மாவின் படைப்பில் உடல் தரித்த
ஆண்களும் பெண்களும் ராவணனின் ஆதிக்கத்தில் வந்து விட்டனர்.

   அனைவரும் அவனுக்கு பயந்து அவன் கட்டளைக்கு கீழ் படித்தனர்.

தினந்தோறும் வந்து அவன்  பாதங்களை வணங்கினர்.
அவன் தன்  புஜபலத்தால்  உலகம் முழுவதையும் வசப்படுத்தினான்.
யாரையும் சுதந்திரமாக இருக்கவிடவில்லை. உலகத்திற்கே பேரரசனாகி ராவணன்  தன்   விருப்பப்படி  ஆட்சி செய்ய ஆரம்பித்தான்.
தேவர்கள், யக்ஷர்கள்,கந்தர்வர்கள்,மனிதர்கள், கின்னரர்கள்,மற்றும் நாககன்னிகைகளையும்  மற்ற அதிகமான அழகிய மற்றும் உத்தமமான பெண்களை  தன்  புஜ  வலிமையால்  வென்று திருமணம் செய்துகொண்டான்.
அவன் மேகநாதனிடம் சொன்னதை   அவனே முன்பே செய்து விட்டான்.
ராவணன் செய்வதில் தான் தாமதம்.அவன் கீழ்ப்படிதலில்
கொஞ்சம்  கூட தாமதிக்கவில்லை.
மேகநாதனிடம் அவன் இட்ட கட்டளைப்படி , அவன் செய்த செயல்களைக் கேளுங்கள்.
 எல்லா ராக்ஷஸக் கூட்டமும் பார்க்க பயங்கரமாக இருந்தன.
அவர்கள் மஹா பாவிகள். தங்கள் மாயையால்
அநேகவிதமான வடிவங்கள்
எடுப்பவர்கள். .
தர்மத்தின் வேரறுப்பவர்கள்.
அவர்கள் வேதத்திற்கு எதிரான வேலை செய்பவர்கள்.
 எந்த நகரத்தில் , கிராமங்களில்   பசுமாடுகளும்   அந்தணர்களும்  இருக்கிறார்களோ   அவைகளை எரித்துவிடுவார்கள்.
எங்குமே நல்லவை நடக்க விடுவதில்லை.
பிராமண போஜனம் , வேள்வி , சிராத்தம் எதையும்
நடக்கவிடாமல் தடுத்தனர்.

எங்குமே குருபக்தி, கடவுள் பக்தி ,கிடையாது.
வேதங்கள்,புராணங்கள் கனவிலும்   கேட்க முடியாது.

ஜபம்,யோகம், தவம் வைராக்கியம் போன்றவை நடப்பதை அறிந்தால்
உடனே  ராவணன் அங்கே சென்றுவிடுவான். எதையும் நடத்தவிடமாட்டான்.
எல்லோரையும் அழித்துவிடுவான் . உலகில் தர்மம் என்பதைக் கேட்க எதுவுமே  நடப்பது  இல்லை.
வேதங்கள் மற்றும் புராணங்கள் பற்றி பேசுவோருக்கு அதிக துன்பங்கள் தருவான் . அல்லது  நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவான்.

ஹிம்சைதான் அவர்களுக்கு மிக அன்பான தாக  இருந்தது. அவர்கள் செய்யும் பாவச்  செயல்களுக்கு வரம்பே கிடையாது. அவைகளை வர்ணிக்கவும் முடியாது.










     



Thursday, January 19, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -ஐம்பத்தொன்று

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -ஐம்பத்தொன்று

     கபட  தவசி மன்னன்  தன்  நண்பனைக்கண்டு மகிழ்ந்து
அவனிடம் தன் கதையைச்  சொன்னான்.
அப்பொழுது அந்த ராக்ஷசன் ஆனந்தமடைந்தான்.
 அரசே! நீ நான் கூறியபடி வேலை செய்ததால்
 நான் விரோதியை என் வசப்படுத்திவிட்டேன்.

 இப்பொழுது நீ உன் கவலை மறந்து தூங்கு.
கடவுள் மருந்தில்லாமலேயே நோயைப்போக்கிவிட்டார்.

விரோதியை வேரோடு சாய்த்து குலத்தோடு  அழித்து,
இன்றிலிருந்து நான்காவது நாள் உன்னை சந்திப்பேன்.

இப்படி கபட தவசி  அரசனுக்கு நம்பிக்கை அளித்து ,
மஹாமாயாவியும் மிகவும் கோவமுள்ளராக்ஷசன் சென்றான்.

அவன் பிரதாப் பானுவை குதிரையுடன் நொடிப்பொழுதில்
அரண்மனையில் விட்டுவிட்டான். அரசனை ராணிக்கு அருகில்
தூங்கவைத்துவிட்டு , குதிரையை குதிரை லாயத்தில் கட்டிவைத்தான்.

பிறகு ராஜ புரோகிதனை தூக்கிக்கொண்டு சென்றான்.

மாயையால் புரோகிதனின் புத்தியை பிரமையில் ஆழ்த்தி
அவனை தன் மலை குகையில் கொண்டுபோய் வைத்தான்.

தானே புரோஹிதானாக  வடிவெடுத்து ,
அவனுடைய அழகான படுக்கையில்
போய் படுத்தான்.
 அரசன் விடிவதற்கு முன்பே எழுந்தான்.
அவன் தன்னை தன் வீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
 மனதில் கபட முனியின் மகிமையை அனுமானித்து
மெதுவாக எழுந்தான்.
பிறகு  தன்  குதிரையில் ஏறி வனத்தை அடைந்தான்.

நகரத்தில் யாருமே இதை அறியவில்லை.
மதியம் அரசன் வந்தான்.
ஒவ்வொருவீட்டிலும் உற்சவம் நடந்தது.
 வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.
அரசன் புரோஹிதனைப்பார்த்தான்.
அப்பொழுது அந்த  நினைவில் ஆச்சரியப் பட்டான்.
அரசனுக்கு மூன்று நாட்கள் ஒரு யுகம் போல் கழிந்தன.
அவனுக்கு கபட முனி நினைவாக வே புத்தி வேலை செய்தது.
கபட முனி பேசியபடி செய்கை அறிந்து
 குரு உருவத்தில்
அவனைக்கண்டு மகிழ்ந்தான்.
அவன் உடனே குடும்பத்துடன் ஒரு லக்ஷம் அந்தணர்களை
போஜனம் செய்ய அழைத்தான் .

குருவானவர் வேதங்களில் சொன்னபடி
அறுசுவை உண்டி, நான்குவகை போஜனம்,
பல கூட்டு ,கறிகள்  தயார் செய்தான்.
அவைகளை எண்ண முடியாது.
பலவித மிருகங்களின் மாமிசங்களை சமைத்தான்.
அந்த துஷ்டன் சாப்பாட்டு வகைகளில்
மாமிசங்களையும் சேர்த்துவிட்டான்.
அரசன் எல்லா அந்தணர்களையும்
 சாப்பாட்டிற்கு அழைத்தான்.
கால்களை கழுவி சாப்பிட உட்காரவைத்தான்.
 அவன் சாப்பாடு பரிமாற ஆரம்பித்ததுமே   ஒரு அசரீரி கேட்டது.
அந்தணர்களே!எழுந்து உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.
இந்த சாப்பாட்டை சாப்பிடாதீர்கள்.
இதை சாப்பிட்டால் பெரும் தீங்கு வரும்.
சமையலில் பிராமணர் கள் சாப்பாட்டில் மாமிசமும் உள்ளது.
அசரீரியை நம்பி அந்தணர்கள் எழுந்தனர்.
ராஜா வியாகூலமடைந்தான்.
அவனுடைய அறிவு   மாயையின்  மோகத்தால்
வேலை செய்யவில்லை.
அவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட வராமல் இருந்தது

அவன் கெட்டிக்கரத்தனம் .
 பிராமணர்கள் எதுவும் சிந்திக்காமல்
 கோபத்தில் சாபமிட்டனர் .
அடே முட்டாள் ராஜா!
நீ உன் குடும்பத்துடன் ராக்ஷசனாகவேண்டும்.
அடே தாழ்ந்த க்ஷத்திரியனே!நீ குடும்பத்துடன் பிராமணர்களை அழைத்து
அவர்களை அழிக்கவிரும்பியுள்ளாய்.
ஒருவருடத்திற்குள் உனக்கு அழிவு வந்துவிடும்.
தண்ணீர் கொடுக்கக் கூட
யாரும் இருக்கமாட்டார்கள்.
சாபத்தைக்கேட்டு  அரசன் மிகக் கவலை அடைந்தான்.
பிறகு மற்றொரு அழகான அசரீரி கேட்டது.
அந்தணர்களே!நீங்கள் யோசித்து சாபம் அளிக்கவில்லை.
அரசன் எந்த தவறும் செய்யவில்லை.
இந்த அசரீரி கேட்டு அந்தணர்கள்
பிரமித்து நின்றனர்.
அப்பொழுது அரசன் பாகசாலைக்குச் சென்றான்.
அங்கே சாப்பாடும் இல்லை. அந்த பிராமணனும் இல்லை.
அப்பொழுது அரசன் மிகவும் கவலைப்பட்டான்.
அவன் பிராமணர்களுக்கு அனைத்து கதைகளும் சொன்னான்.
அவன் மிகவும் பயந்து கவலையுடன் பூமியில் விழுந்தான்.
அரசே !உன்னுடைய தவறு எதுவும் இல்லை.
இருந்தாலும் கெட்டிக்காரன் அழிவதில்லை.
அந்தணர்களின் சாபம் மிகவும்  பயங்கரமானது.
அதை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது.

இப்படி சொல்லிவிட்டு எல்லோரும் சென்றுவிட்டனர்.
இந்த செய்தி கேட்டு நகர மக்கள் கவலைப்பட்டு ,
கடவுளை குறை கூறினர்.

அன்னப்பறவையாக ஆக்க வேண்டியவரை காகமாக்கிவிட்டார்.
புண்ணியாத்துமா அரசனை தெய்வமாக்கவேண்டும்.
ஆனால்
ராக்ஷசனாக்கிவிட்டார்.

புரோஹிதனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு
 காலகேது அசுரன் கபட தவசிக்கு செய்தி  அனுப்பினான்.
அந்த கபட அரசன் அனைத்து அரசர்களுக்கும்  செய்தி அனுப்பினான்.
அனைத்து அரசர்களும் படையுடன் வந்தனர்.
 அவர்கள் அந்த நகரத்தையே முற்றுகை  இட்டனர்.
தினந்தோறும் பலவிதத்தில் யுத்தம் நடந்தது.
பிராதாப் பானு , அவன் தம்பி , அவன் படைவீரர்கள்
மிகவும் வீரத்துடன் போர் புரிந்தனர்.
சத்யகேது  குலத்தில்  யாருமே பிழைக்கவில்லை.
அந்தணர்கள்  சாபம் எப்படி பொய்க்கும் ?
விரோதியை வென்று அனைத்து
அரசர்களும் நகரங்கள் அமைத்து சென்றுவிட்டனர்.

   யாக்யவல்கியர் பாரத்வாஜ முனிவரிடம் சொன்னார் ,
"பாரத்வாஜ்!
கடவுள் எதிரி ஆனால் தூசி சுமேரு மலையாக மாறும்.
அப்பாவே எமனாக மாறுவார்.
கயிறு பாம்பாக மாறும்.
முனிவரே ! கேளுங்கள் .
அதே ராஜா  தக்க சமயத்தில் குடும்பத்துடன்
ராவணன் என்ற ராக்ஷசனாக பிறந்தான்.
அவனுக்கு பத்து தலைகள் , இருபது கைகள் இருந்தன.
அவன் மிகப்பெரிய சூரவீரனாக இருந்தான்.
அரசனின் தம்பி அரிமர்தன் ,
  பலசாலி   கும்பகர்ணனாக பிறந்தான்.
அரசனின் அமைச்சர் தர்ம்ருசி
ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனாகப் பிறந்தான்.
 அவனுடைய பெயர் விபீஷணன் .
அவன் விஷ்ணுபக்தன்.
ஞானமும் விஞ்ஞானமும் அறிந்தவன்.
அரசனின் புத்திரர்களும் சேவகர்களும்
மிக பயங்கரமான அரக்கர்களாகப் பிறந்தனர்.

 அவர்கள்  அனைவரும்  பல ஜாதிகளாக,
விரும்பிய வடிவம் எடுப்பவர்களாக,
துஷ்டர்களாக, கொடியவர்களாக, அறிவற்றவர்களாக,
இரக்கமற்றவர்களாக, கொடியவர்களாக, பாவிகளாக,
உலகிற்கே துன்பம் விளைவிப்பவர்களாக, இருந்தனர்.
இந்த கொடுங்கோலர்கல்களை வர்ணிக்க இயலாது.

புலஸ்திய  ரிஷியின் பவித்திரமான,
களங்கமற்ற  இணையற்ற உயர்ந்த
குலத்தில்  பிறந்தாலும்
 அந்தணர்களின் சாபத்தின் காரணமாக
பாவிகளாயினர்.
   மூன்று சகோதரர்களும்
 பலவித கடும் தவம் செய்தனர்.
தவம் கேட்டு பிரம்மா அவர்கள் முன் தோன்றினார்.
நான் உங்கள் தவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வரம் கேள் என்றார்.
   ராவணன் அவர் பாதரவிந்தங்களைப் பற்றி சொன்னான் --
ஜகதீஸ்வரரே! நாங்கள் வானரர்கள்,மனித  இனம் தவிர
வேறு யார் அடித்தாலும்   மரணம்  அடையக்கூடாது.
இந்த வரம் அளியுங்கள்.

  சிவபகவான்   சொல்கிறார் ---நானும் பிரம்மாவும் சேர்ந்து
 ராவணன்  கோரிய வரத்தை அளித்தோம்.
அவன் மிகப் பெரிய தவம் செய்திருக்கிறான்.
பிறகு பிரம்மா கும்பகர்ணனிடம் சென்றார்.
   அந்த துஷ்டன் தினந்தோறும் ஆகாரம்  செய்தால் ,
  உலகம்  முழுவதையும் பாழாக்கிவிடுவான்.
இப்படி நினைத்து  பிரம்மா   சரஸ்வதியைத்  தூண்டி
அவன் புத்தியை மாற்றிவிட்டார்.
அதனால் அவன் ஆறுமாதம் தூங்கும் வரம் கேட்டான்.
பிறகு பிரம்மா  விபீஷணனிடம் சென்றார்.
அவன்  பகவானின் பாத தாமரையில்
 களங்கமற்ற அன்பைக் கேட்டான்.
அவர்களுக்கு வரம் அளித்துவிட்டு பிரம்மா சென்றுவிட்டார்.
மூன்று சகோதரர்களும் மகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றனர்.


மய  என்ற அரக்கனுக்கு மிகவும் அழகும்
நல்லொழுக்கத்தில்
சிறந்த ஒரு மகள்  இருந்தாள்.
அவள்பெயர்  மண்டோதரி.
   ராவணன்   ராக்ஷசர்களுக்கு   அரசன்  ஆவான்  என்று
  மயனுக்குத் தெரிந்து விட்டது.
ஆகையால் தன் மகளை அழைத்துவந்து
 ராவணனுக்கு கொடுத்தான்.
நல்ல  மனைவியைப்பெற்று  ராவணன் மகிழ்ச்சி அடைந்தான்.
பிறகு அவன் தன் இரண்டு சகோதரர்களுக்கும்
திருமணம் செய்து வைத்தான்.
 சமுத்திரத்திற்கு நடுவில் பிரம்மா
 கட்டிய  மிகப்பெரிய கோட்டை இருந்தது.

மயன்மிகப்பெரிய மாயாவி . சிறந்த கட்டிடக் கலை நிபுணன் .
 அவன் அந்தகோட்டையை மறுபடியும்  அலங்கரித்தான்.
 அதில் மணிகள் பத்தித்த  பல மாளிகைகள் இருந்தன.
பாதாள லோகத்தில் நாக குளம் வசிக்க
 போகாவதி புரி இருக்கிறது.
இந்திரலோகத்தில் இந்திரபுரி.
அதைவிட  மிக அழகான உறுதிவாய்ந்த கோட்டை
  லங்காபுரி கோட்டை புகழ் பெற்றது.
அதன் நான்கு பக்கத்திலும்  சமுத்திரத்தின்
ஆழாமான  அகழி இருந்தது.
மணிகள் பதித்த  தங்க மதில் சுவர் ,
அதன் கட்டிடக் கலை சிறப்பை வர்ணிக்க இயலாது.
  இறைவனின் தூண்டுதலால்  தோன்றிய
அரக்கர்களின் அரசன்  ராவணன்
அந்த கோட்டையில்  அந்த நகரத்தில்
   தன்  சேனையுடன்   அந்த நகரத்தில் வசிக்கிறான்
அவன் சூரன்.வீரன் ஒப்பிடமுடியா பலசாலி.
   முதலில் அங்கே ராக்ஷஸ வீரர்கள் வசித்துவந்தனர்.
தேவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர்.
இப்பொழுது அங்கே
இந்திரனின் தூண்டுதலால்
 குபேரனின் ஒரு கோடி யக்ஷர்கள் இருக்கிறார்கள்.

   ராவணனுக்கு அந்த செய்தி கிடைத்ததுமே ,
சேனையுடன் சென்று கோட்டையை முற்றுகை இட்டான்.
அந்த பெரிய பயங்கர வீரர்களையும்
அவனுடைய பெரிய சேனையையும்  பார்த்து
யக்ஷர்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிவிட்டனர்.
அப்பொழுது ராவணன் அந்த நகரம் முழுவதையும்
நன்கு சுற்றிப்பார்த்தான்.

   அவனுக்கு இடம் சம்பந்தமான கவலை போய்விட்டது.
அந்த நகரத்தின் இயற்கையான அழகைக் கண்டு
பாதுகாப்பானதாக உணர்ந்து அதை  தன்  நாட்டின்
.தலை நகர மாக்கினான் .
தகுதிக்குத்தகுந்தபடி  வீடுகளை பங்கிட்டு எல்லா அரக்கர்களையும்
மகிழ்வித்தான். அவன் குபேரன் மீது படையெடுத்து
அவன் புஷ்பக விமானத்தை  தனதாக்கிக் கொண்டான்.

பிறகு விளையாட்டாக கைலாய மலையை தூக்கிக் கொண்டான்.
தன பூஜை வலிமையை அளவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வந்துவிட்டான்.
நாளுக்கு நாள் அவனுடைய  சுகம் ,சொத்து , மகன்கள், சேனை,உதவியாளர்கள்,வெற்றி ,பலம், வீரம் அறிவு ,புகழ் அனைத்தும் அதிகரித்துக்கொண்டே  இருந்தது. ஒவ்வொரு லாபத்திலும் பேராசை
அதிகரிக்கிறது.
 மிகவும் பலசாலியான கும்பகர்ணன் அவன் சகோதரன். அவனுக்கு இணையான  போர்வீரன் உலகத்தில் பிறக்கவே இல்லை.
அவனுடைய வீரத்தை வர்ணிக்க இயலாது.
அவன் மது குடித்து ஆறுமாதங்கள் தூங்குவதை வழக்கமாகக்கொண்டவன்.
அவன் தூங்கி எழுந்ததுமே மூவுலகும் அவனைக்கண்டு பயப்படும்.
அவன் தினந்தோறும் சாப்பிட்டால் உலகம் முழுவதும் சீக்கிரமே நஷடமாகிவிடும்.

ஸ்ரீ லங்காவில் இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையில் வீரர்கள்
இருந்தனர்.

மேகநாதன் ராவணனின் மூத்த மகன். அவனும் மிகப்பெரிய போர்வீரன்.
போரில் அவனை யாரும் எதிர்க்க முடியாது. அவன் பயத்தால் ஸ்வர்கத்தில் தினம் பயந்து ஓடும் காட்சிகள் நடக்கும்.

இவர்களைத்த தவிரவும்  துர்முக் ,அக்கம்பன்,வஜ்ரதந்த் ,தூமகேது அதிகாய்
.முதலியஸ் அநேக வீரர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தனியாகவே
உலகத்தை வெல்லமுடியும்.
எல்லா ராக்ஷஸர்களும் தன்  மனம் விரும்பும் வடிவம் எடுக்க முடியும்.
அவர்கள் அசுர  மாயை அறிந்தவர்கள்.
அவர்களுக்கு தயை -தர்மம் என்பது கனவிலும் தெரியாது.

ஒருமுறை  ராவணன் தான் ராஜ தர்பாரில் தன்னுடைய எண்ணிக்கையில் அடங்கா   குடும்பத்தைப் பார்த்தான்.







ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --ஐம்பது

  ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --ஐம்பது

     கபடமுனி ,    ராஜா  பிரதாப் பானுவின் மனம் மாற
    மென்மையான குரலில்
பல  கதைகளை சொல்ல ஆரம்பித்தான்.

கர்மம், தர்மம், மற்றும் பலவித வரலாற்றை சொல்லி
 ஞானம் மற்றும் வைராக்கியத்தை
 நிரூபிக்க ஆரம்பித்தான்.
 படைப்பின்   உற்பத்தி ,
வளர்ப்பு,சம்ஹாரம் பற்றிய அளவில்லா
ஆச்சரியப்படுத்தும்
கதைகளைச் சொன்னான்.

  அரசன்   முனிவர் சொல்  கேட்டதும்
 அந்த கபட தவசியின்  பேச்சில் வசமானான்.
 முற்றிலும் அரசன்  தன் வசமானதும்  அவன்
தன் பெயரைச்சொன்னான்.
அரசே! நான் உங்களை  அறிவேன்.
நீ கபடம்  செய்தாய். எனக்கு  அது   பிடித்திருந்தது.
 அரசே!  அரச நீதிப்படி அவர்கள் எல்லா இடங்களிலும்
தன்  பெயரை சொல்லமாட்டார்கள்.
உன்னுடைய கெட்டிக்காரத்தனத்தால்
நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.

 உன்னுடைய பெயர் பிரதாப்பானு.
மகாராஜ் சத்யகேது  உன்னுடைய அப்பா.
அரசனே! குருவின் கிருபையால்  அனைத்தும் அறிவேன்.
ஆனால் எனக்கு தீங்கு வந்துவிடும்  என்று
 யாரிடமும்  சொல்வதில்லை .
 உன்னுடைய  இயற்கையான எளிமை ,
அன்பு  , நம்பிக்கை , நீதி நிபுணத்துவம்  கண்டு எனக்கு
உன்மேல் அன்பு அதிகரித்து விட்டது.
அதனால் நீ கேட்டுக்கொண்டதால்  என் கதையைச் சொல்கிறேன்.

  இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
 சந்தேகப்பட வேண்டாம்.

   உனக்கு பிடித்ததைக்  கேள்.
  கபட தவசியின்அ ன்பான வார்த்தைகள்  கேட்டு
  அரசன்  மகிழ்ச்சி அடைந்தான்.
 முனிவரின் கால்களைப் பிடித்து பல விதமாக
  வேண்டினான்.

    அரசன்  முனிவரிடம் ,"முனிவரே! உங்கள் தரிசனம் கிடைத்ததும்
 நான்கும் (அதாவது தர்மம் , அர்த்தம், காமம் , மோக்ஷம்  ஆகியவை)
என் பிடியில் வந்துவிட்டது. நீங்கள்  தயை கடல்.
 உங்களின்  மகிழ்ச்சி கண்டு  ஒரு துர்லப மான  வரம்  கேட்டு ,
 சோகமில்லாமல் இருப்பேன்.

  எனக்கு மூப்பு, மரணம் மற்றும் துன்பமில்லா வாழ்க்கை கிட்டட்டும்.
என்னை  போரில் யாரும் வெல்லமுடியா நிலை வேண்டும்.
பூமியில்  நூறு கல்பம் வரை என்னுடைய  ஒரே  குடையின்  கீழ்
இடையூரில்லா  ஆட்சி   இருக்க வேண்டும்.
   தவசி  சொன்னான் , "அப்படியே  ஆகட்டும் .
 ஒருகடினமான விஷயம் உள்ளது . அதையும் கேட்டுக்கொள்."

  பூபதியே ! அந்தணர் குலம்  தவிர காலனும் உன் பாதம் பணிவான்.

தவ  வலிமையால் அந்தணர்கள் எப்பொழுதும் பலசாலியாக  இருப்பார்கள்.

அவர்கள் கோபத்தில்  இருந்து காப்பவர்கள் ஒருவரும் இல்லை.
நீ அந்தணர்களை  வசப்படுத்தினால்  பிரம்மா, விஷ்ணு , மகேஸ்வரர் முதலியவர்களும்  உனது ஆதிக்கத்தில் வந்து விடுவார்கள்.

  அந்தணர் குலத்தில்   சக்தியோ,
 கட்டயப்படுத்தலோ  எதுவும் நடக்காது.
நான் எனது இரண்டு புஜங்களையும் உயர்த்தி
சத்தியத்தை  சொல்கிறேன்.
அந்தணர்கள்  சாப மின்றி உனக்கு
 எந்த காலத்திலும்
அழிவு  வராது.

   அரசன் அவர் பேச்சைக்  கேட்டு மிக மகிழ்ந்தான்.
  சுவாமி !என்னுடைய  அழிவு இப்பொழுது ஏற்படாது.
  உங்கள் கருணையால் எனக்கு
  எப்பொழுதும் நல்லவைகளே  நடக்கும்.

  இப்படியே நடக்கட்டும்.  என்று கபட முனிவர்  சொல்லி விட்டு ,

எச்சரித்தான்--"என்னுடைய  சந்திப்பு , வழி மறந்ததை  யாரிடமும்
சொல்லக் கூடாது. சொன்னால்
 நடக்கும் விளைவுகளுக்கு
என்  மீது குறை சொல்லக் கூடாது.
நான்  குற்றவாளி அல்ல".

   நீ  இந்த நிகழ்ச்சி பற்றி சொன்னால் ,
  உனக்கு மிகப்பெரிய  தீங்கு ஏற்படும். ஆகையால்  உன்னைத்
 தடுக்கிறேன். இந்த நிகழ்வு அடுத்தவர் காதில் விழுந்ததுமே ,
 உனக்கு  அழிவு  ஏற்படும் . இதை  சத்தியம் என்று  அறியவும்.

  பிரதாப் பானு ," இந்த நிகழ்வை வெளிப்படுத்தினாலும்
    அந்தணர்களின்  சாபத்தாலும்  உனக்கு அழிவு ஏற்படும்.
  பிரம்மாவும் , சங்கரரும் கோபப்பட்டாலும் உனக்கு மரணம் ஏற்படாது.

அரசன்  முனிவரின் கால்களைப்பிடித்து   சொன்னான்-
-"சுவாமி! சத்தியம் தான்.
 அந்தணர் மற்றும் குருவின்  கோபத்திலிருந்து , யார்  காப்பாற்ற முடியும்?  பிரம்மா கோபித்தால் குரு காப்பாற்றுவார்.
 குருவை  பகைத்தால்
உலகில் யார் காப்பாற்றுவார்கள்".

  நீங்கள் சொன்னபடி நான் செய்யவில்லை என்றால்
  எனக்கு அழிவு ஏற்படட்டும்.
  எனக்கு இதைப்பற்றிய கவலை இல்லை.
 எனக்கு  ஒரே பயம் தான் .
அந்தணர்கள் கோபமும் சாபமும்
பயங்கரமானது.
 அவர்களை எப்படி  வசப்படுத்துவது?
என்பதை மற்றும் சொல்லுங்கள்.
உங்களைத்தவிர  வேறு யாரையும் எனது
நலம் விரும்பியதாக நினைக்கவில்லை.

 அரசே ! உலகில் உபாயங்கள் அதிகமாக உள்ளது .
ஆனால் அவை கஷ்ட சாத்தியமானது.
அதிலும் வெற்றி கிட்டுமா கிட்டாதா என்பது உறுதியானதல்ல.
ஒரே ஒரு வழி உள்ளது.ஆனால் அது  ஒரு கடினமானது .
அரசே !அந்த யுக்தி என் கையில்  உள்ளது.
ஆனால் நான் உன் நகரத்திற்கு செல்லமுடியாது.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை யாருடைய வீட்டிற்கோ  அல்லது
கிராமத்திற்கோ  சென்றதில்லை.
ஆனால் இப்பொழுது செல்லவில்லை என்றால்  
 உன்னுடைய வேலை கெட்டுவிடும்.
 இன்று நான் மிகப்பெரிய
இரண்டுங்கெட்டான்  நிலையில் உள்ளேன்.

இதைக்கேட்டதும்  அரசன் பணிவாக சொன்னான்--
"சுவாமி! வேதங்களின் நீதிப்படி  பெரியவர்கள் சிறியவர்களை நேசிக்கிறார்கள்.
மலை தன்த லையில் புல்-பூண்டுகளுக்கு  இடமளிக்கிறது.
ஆழமான சமுத்திரம் தலையில் கடல் நுரைக்கு இடமளிக்கிறது.
மேலும் பூமி எப்பொழுதும் தூசியை தன்  மேல் போட்டுக்கொள்கிறது.
என் மேல் கிருபை  காட்டுங்கள் .
 நீங்கள் சாது . எளியவர்கள் மேல்
இர க்கம்   காட்டுபவர். பிரபு! எனக்காக இதைச் செய்யுங்கள்."

  அரசன் முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது  அறிந்து

கபடத்தில் நிபுணனான முனிவன்  ,
"அரசே ! இந்த உலகத்தில் என்னால்
செய்ய முடியாத துர்லப மான செயல் எதுவுமே கிடையாது.
நான் உன் பணியை கட்டாயம் செய்வேன்.
நீ சொல்லாலும் செயலாலும் உடலாலும் என் பக்தன் .அனால்
யோகம், யுக்தி , தவம் , மந்திர சக்தி போன்றவைகள்
மறைந்து செய்தால்  தான்  பலன்  கிடைக்கிறது" .
"
"அரசே! நான் சமைத்து நீ அதை பரிமாறினால் ,
என்னை யாரும் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
சாப்பிடுபவன் எல்லாம் உனக்கு கீழ்படிந்து நடப்பான்.
 நீ பரிமாறிய உணவை சாப்பிட்டவனின் குடும்ப உறுப்பினர்களும்
உன் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள்.
அரசே! வருடம் முழுவதும் உணவு பரிமாறும் சங்கல்பம் எடுக்க ஒரு உபாயத்தைச் செய் .
தினந்தோறும் ஒரு லக்ஷம்  அந்தணர்களை குடும்பத்துடன்
போஜனம் செய்ய அழைக்கவும். நான் சங்கல்பம் முடியும் வரை
உணவு சமைத்துத் தருகிறேன்.
அரசே!இவ்வாறு  அதிக உழைப்பின்றி எல்லா அந்தணர்களும்
உன்னுடைய வசத்திற்கு வந்து விடுவார்கள்.
அந்தணர்கள்  வேள்வி , யாகம் , சேவை , பூஜை செய்வார்கள்.
அந்த நிகழ்வால் தேவர்களும் சஹஜமாக உன் வசத்தில்  வந்து விடுவார்கள்."

"நான் இந்த வடிவத்தில் உன்னுடன் வரமாட்டேன்.
 நான் என் மாயையால் உன்னுடைய புரோஹிதனை கடத்தி   வருவேன்.
தவ வலிமையால் அவனை என்னைப்போல ஆக்கி ஒருவருடம் வைத்திருப்பேன். நான் அவனுடைய  வடிவெடுத்து எல்லாவிதத்திலும்
உன்னுடைய பணியை வெற்றி பெறச் செய்வேன் .
அரசே! இரவாகிவிட்டது. இப்பொழுது தூங்கு. இன்றிலிருந்து
மூன்றாவது நாள் நான்  உன்னை சந்திப்பேன். தவ வலிமையால் தூங்கும்போதே  உன்னை குதிரையுடன் வீட்டில் விட்டுவிடுவேன்,
நான் அதே புரோஹிதர் வேடத்தில்  வருவேன்.
நான் தனிமையில் அழைத்து எல்லா நிகழ்வுகளையும் சொல்லுவேன் .
அப்பொழுது நீ என்னை அறிந்துகொள்."
   அரசன் முனிவனின் ஆணை பெற்று படுத்துக்கொண்டான்.
  கபட முனி ஆசனத்தில் அமர்ந்தான்.
 அரசன் களைத்திருந்ததால் ஆழ்ந்து  தூங்கி விட்டான்.
 ஆனால்  வஞ்சிப்ப்வனுக்கு , கபட வேடம் போட்டவனுக்கு
 எப்படி தூக்கம் வரும்?
அவனுக்கு அதிகம் கவலை வந்துவிட்டது.

அப்பொழுது அங்கே காலகேது என்ற ராக்ஷசன் வந்தான்.
அவன் தான் பன்றி வேடத்தில் அரசனை  வெகு தொலைவு
அழைத்து வந்து வழி தெரியாமல் செய்தவன்.
அவன் முனிவனுக்கு நெருங்கிய நண்பன்.
 வஞ்சிப்பதில் திறமை  வாய்ந்தவன்.
அவனுக்கு நூறு புதல்வர்கள். பத்து சகோதரர்கள்.
அவர்கள் மிகவும் கொடியவர்கள். அவர்களை யாரும் வெல்லமுடியாது.
தேவர்களுக்கு துன்பம் அளிப்பவர்கள்.
அரசன் முன்பே  அந்தணர்கள் , தேவர்கள், சாதுக்கள்  போன்றவர்கள்
இன்னலுருவதைக் கண்டு அவர்கள் எல்லோரையும் முன்பே கொன்றுவிட்டான்.

அந்த துஷ்டன் முன் விரோதம் காரணமாக
பழி வாங்க இந்த கபட முனியுடன் சேர்ந்து கொண்டான்.
 அவனுன் சேர்ந்து சூழ்ச்சி வலை பின்னத் தொடங்கினான்.
அவனுக்கு எப்படியாவது அரசனை பழி வாங்கவேண்டும்.
அரசன் உணர்வு வசப்பட்டதால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
  பலம் வாய்ந்த விரோதி தனியாய் இருந்தாலும்
 அவனை எதுவும் செய்ய முடியாது.
     அவனை சிறியவனாக கருதக்கூடாது.
தலைமட்டும் உயிருடன் இருக்கும் ராஹு
  இன்றுவரை
சூரியனுக்கும் நிலவிற்கும் துன்பம்
கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.

 



 








 











   

Wednesday, January 18, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்தொன்பது.

 
 அரசன் பிரதாப் பானு ஒரு  நாள் வேட்டைக்குப் புறப்பட்டான்.

விந்தியமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில்
  மிகவும் உத்தமவகை
மான்களை வேட்டை ஆடினான்.
வனத்தில் சுற்றி அலையும்  பொழுது
ஒரு விசித்திரமான  பன்றியைப் பார்த்தான்.
அதனுடைய பற்கள் நிலவு தேய்ந்தது போல்  இருந்தன.
அது நிலவை விழுங்க முடியாமல் , வாயிக்குள் அடங்காமல்
இருப்பது போன்று தோன்றியது.
இதுதான் பயங்கரமான  பன்னியின் அழகு.
அதன் உடல் மிகப்பெரிதாக பருத்து இருந்தது.
சிறிய காலடி சத்தம் கேட்டதுமே அது எச்சரிக்கையுடன் ஓடியது.

அரசன் அதை வேட்டை ஆட  தொடர்ந்தான். அவன் பன்றியிடம் நீ உன்னைக்காக்க முடியாது என்று அறைகூவல் விடுத்தான்.
மிகவேக மாக  குதிரையை விரட்டினான். பானங்களைத்தொடுத்தான்.
ஆனால் பன்றி தப்பித்து வேகமாக ஓடியது, அரசனும் பின் தொடர்ந்தான்.
வெகு தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டான்.
பன்றி ஒரு மலை குஹைக்குள் சென்று விட்டது.
அடர்ந்த காட்டுக்குள் சென்றதால் அரசனுக்கு வலி தெரியவில்லை.
தாகமும் அதிகரித்தது. தண்ணீர் தேடிச் சென்றான். அங்கே ஒரு முனிவரின் ஆஷ்ரமம் தென்பட்டது.
அந்த ஆஷ்ரமத்தில் கபட வேடமிட்ட ,,
 பிரதப்பானுவால் தோற்கடிக்கப்பட்ட
அரசன் தான் இருந்தான்.
தாகத்தின் தாக்கத்தால் பிரதாப் பானுவுக்கு
 அவனை அடையாளம் தெரியவில்லை.
 ஆனால் முனிவர் வேடத்தில் இருந்த
அந்த மன்னனுக்கு  பிரதாப் பானுவை தெரிந்துவிட்டது.
அவன் போரில் தோற்றதால் வேதனை அடைந்து
வீட்டிற்குச் செல்லாமல்,
காட்டிற்குள் வந்து ஆஷ்ரமம் கட்டி வசித்துவந்தான்.
பிரதாப் பானுவிற்கு நல்ல நேரம் தனக்கு கெட்ட  நேரம் என உணர்ந்து  மனதில் வெறுப்புடன்   காட்டிற்கு வந்து  தங்கிவிட்டான்.
தரித்திரன் போன்று கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு
தவ வேடத்தில் வாழ்ந்துவந்தான்.
அவன் தன ராஜபோக வாழ்க்கையை நினைத்து வருந்தினான்.



அந்த முனிவரின் தோற்றம் கண்டு பிரதாப் பானு
அவனை மிகப்பெரிய முனி என்று நினைத்தான்.
அந்த முனிவரை வணங்கினான்.
ஆனால் அந்த  ராஜா  தன் பெயரைச் சொல்லவில்லை.
அரசன் தாகத்தில் இருந்ததால் அவன்
அரசருக்கு தண்ணீர் இருக்கும் ஏரியைக் காட்டினான்.
 அரசன் நீர் அருந்தி , ஸ்நானம் செய்து களைப்பைப்
போக்கிக்கொண்டான்.
 அந்த முனிவர் அரசனத்  தன்  ஆஷ்ரமத்திற்கு
அழைத்துச் சென்றான்.தவசி  ராஜாவிடம் மென்மையாகப் கேட்டான் :-

நீ யார்? அழகான இளைஞனாக இருந்தாலும் ,
உயிரை பொருட்படுத்தாமல் ,
காட்டில் ஏன் தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்?
உன்னுடைய  சக்கரவர்த்தி அரச லக்ஷணம் பார்த்து எனக்கு
உங்கள் மேல் தயை ஏற்படுகிறது.

 அரசன்  பதில் சொன்னான் --
"முநீஸ்வரரே ! நான் ராஜா உதய பானுவின்
அமைச்சர். வேட்டை தேடி சுற்றும் பொது வழி தவறிவிட்டது.
அதிக அதிர்ஷ்டம் செய்ததால்
இங்கே வந்து உங்களை தரிசனம் செய்தேன்.

  எனக்கு உங்கள் தர்சனம் துர்லபமானது.
அதனால் எனக்கு நன்மை ஏற்படும் என்று தெரிகிறது.
முனிவர் சொன்னார் --"இருள ஆரம்பித்துவிட்டது.
உன்னுடைய நகரம் இங்கிருந்து எழுபது மைல் தூரத்தில் உள்ளது.
நல்லவனே,  பயங்கர இருண்ட இரவு. அடர்ந்த காடு. வழியில்லை. நீ இங்கேயே தங்கிவிடு. காலையில் போ".

   துளசிதாசர் சொல்கிறார்--எதிர்காலம் எப்படி உள்ளதோ,
 அப்படியே உதவி கிடைக்கிறது. அதுவாகவே  கிடைக்கிறது,
அல்லது  உதவி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

   ராஜா  மிக நன்று. உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு
தங்குகிறேன். குதிரையை மரத்தில் கட்டிவிட்டு,
அவரை பல விதத்திலும் புகழ்ந்தார். அவரின் சரணங்களை வணங்கி
தன்  பாக்கியத்தை நினைத்து புகழ்ந்துகொண்டார்.

   பிறகு தவசியிடம் ,  "பிரபோ!நான் தங்களை என் தந்தையாக நினைக்கிறேன்.  முனிவரே!என்னை தங்கள் மகனாக கருதி ,
சேவகனாக பாவித்து  உங்கள் பெயரையும் ,இடத்தையும்
விரிவாகக் கூறவும்.
அரசனுக்கு அவரைத் தெரியவில்லை.
ஆனால் அவனுக்கு ராஜாவைத் தெரிந்தது.

  ராஜாவின் இதயம் சுத்தமானது.
அவன் கபடத்தில் கெட்டிக்காரன்.
அவன் விரோதி. க்ஷத்திரியன். கபடம் செய்வதில்  கெட்டிக்காரன்.

அவன் வஞ்சனையாலும் ,
பலத்தாலும் தன்வேலையை  முடிக்க விரும்புகிறார்.
அவன் கபடத்துடன் மென்மையாகப் பேசினான்---
இப்பொழுது என் பெயர் பிச்சைக்காரன்.
ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை.
வீடு-வாசல் இல்லை.
பிரதாப்  பானு சொன்னான்---உங்களைப்போன்ற விஞ்ஞான
 ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்,மேலும் அபிமானம் இல்லாமல் இருப்பவசர்கள்  தங்கள் ஸ்வரூபத்தை எப்பொழுதும் மறைத்துவிடுகிறார்கள்.
ஏனென்றால் கெட்ட  வேடதாரியாக  இருப்பதில்  தான்  எல்லாவிதமான நன்மையையும் இருக்கிறது.  சாதுவேஷத்தில் மரியாதை இருந்தாலும்
வீழ்ச்சியும் சேர்ந்தே இருக்கிறது. முற்றிலும் அகங்காரம்,மமதை மரியாதை
 இன்றி இருத்தல்  இறைவனுக்குப் பிடித்த விஷயம்.
உங்களைப்போன்ற  ஏழை , பிச்சைக்காரன் , வீடுவாசல்  இல்லாதவர்களைப்
பார்த்து சிவனும் பிரம்மாவும் சந்தேகப்படுவார்கள்.
இவர்கள் உண்மையான சாதுக்களா எ அல்லது  பிச்சைக்காரர்களா ?

  நீங்கள் எப்படிப்பட்டவர்   ஆனாலும்   உங்கள் சரணங்களை வணங்குகிறேன்.  நீங்கள் என்மேல் கிருபை காட்டுங்கள்.
தன்மேல் அரசனின் இயற்கையான அன்பையும்
நம்பிக்கையையும்  பார்த்து , எல்லாவிதத்திலும்
 ராஜனை தன் வசப்படுத்தி , அதிக அன்பைக்காட்டி அந்த கபட தவசி சொன்னான்----அரசே!கேள், நான் உன்னிடம் உண்மையை சொல்கிறேன்.
நான் இங்கே இருந்து நீண்ட காலம் கழிந்துவிட்டது.

இப்பொழுதுவரை என்னை  யாரும்  சந்திக்கவில்லை.
 நான் யாரிடமும் என்னை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
ஏனென்றால்  கௌரவம் நெருப்பு போன்றது. அது தவம் என்ற வனத்தை
பஸ்மாமாக்கிவிடுகிறது.

துளசிதாசர் சொல்கிறார் :--

அழகான வேடத்தைப்பார்த்து
முட்டாள் மட்டுமல்ல , கெட்டிக்காரனும் ஏமாந்து விடுகிறான்,
அழகான மயிலைப்பார். அதன்   உணவு பாம்பு.

ஸ்ரீ ஹரியைத்தவிர யாரிடமும் எந்த பலனும் இல்லை. ஸ்ரீ ஹரி க்கு
சொல்லாமலேயே அனைத்தும்  தெரியும். சொல்,
உலகத்தை நேசிப்பதால் என்ன சித்திகள் கிடைக்கும்.?

  நீ பவித்திரமானவன். சிறந்த புத்திமான்.அதனால்  நீ எனக்கு அன்பானவன்.

உனக்கும் என்மேல் அன்பும் நம்பிக்கையும் உள்ளது.
இப்பொழுது உன்னிடம் ஏதாவது  மறைத்தால் எனக்கு பயங்கர தோஷம் உண்டாகும்.

  தபஸ்வி உதாசீனமாகப் பேச பேச ராஜாவுக்கு
 அவன் மேல் நம்பிக்கை அதிகமாகியது.
 கொக்கு போன்று தியானம் செய்யும் கபட முனி
 அரசனை சொல், செயல்,மனத்தால்
அவன் வசம் ஆகிவிட்டத்தை தெரிந்து கொண்டு
சொன்னான்----சகோதரா! என் பெயர் ஏகதனு.
இதைக்கேட்டு ராஜா  ,என்னை உங்கள் அன்பனாக நினைத்து
உங்கள் பெயரின்  பொருளை விளக்குங்கள்  என்றார்.

மகனே! ஆச்சரியப்படாதே. தவத்தால் எதுவுமே கடினமல்ல.
தவத்தின் வலிமையினால் தான் விஷ்ணு உலகத்தைப்
காப்பவர்  ஆனார்.
தவத்தின்  வலிமையால்  தான் ருத்திரர் சம்ஹாரம் செய்கிறார்.
உலகில் தவத்தால் கிட்டாத பொருள் ஏதும் இல்லை.
இதைக்கேட்டதும்   அரசனுக்கு மிகுந்த பற்று உண்டாகியது.
அப்பொழுது அவன் பழைய கதைகளைச் சொல்ல  ஆரம்பித்தான்.


  

Tuesday, January 17, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தேழு

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தேழு

    பகவானின் நீலத்தாமரை,  நீலமணி ,நீலமேகம் போன்ற  கருப்புநிறம் ,

உடல் அழகு கண்டு  கோடிக்கணக்கான  காமதேவர்களும்
வெட்கப்படுவார்கள். |
அவர்   முகம்  நிலவு போன்று  அழகின்  எல்லை .
கன்னமும் , தாடையும்  மிக அழகு.
கழுத்து சங்கு போன்றது. சிவந்த உதடு,
பற்கள்,மூக்கு அனைத்துமே அழகு.
சிரிப்பு நிலவின் கதிர்களை தாழ்த்திவிடும்.
கண்களின் அழகு மலர்ந்த தாமரை போன்று அழகாக இருந்தது.
வளைந்த புருவங்கள் காமதேவனின்  வில் போன்று அழகாய் இருந்தன.
நெற்றியில் ஒளிபொருந்திய திலகம். காதுகளில் மகர குண்டலங்கள் ,
தலையில் மகுடம் அழகாக இருந்தது.  கரு  வண்டுகள் போன்ற அடர்ந்த
கருங்கூந்தல். இதயத்தில்   ஸ்ரீ வத்ச,
அழகான மாலை, ரத்னமாலை,அழகாக இருந்தன.
சிங்கம் போன்ற கழுத்து, அழகான பூணூல்,
யானை துதிக்கை  போன்று புஜங்கள் .
இடுப்பில் மரவுரி , கையில் வில் -அம்பு.
அனைத்துமே மிகவும் அழகாக இருந்தன.

பீதாம்பரம் பொன்னிறமாக  மின்னலையே  நாணச்செய்வது.
வயிற்றில் அழகான மூன்று  கோடுகள் ,
 அழகான நாபி,யமுனையின் சுழலை  ஈர்ப்பது போன்று.

பகவான்   சரண கமலங்கள்  வர்ணிக்க முடியாத அழகு.
இறைவனின் இடது பாகத்தில் ,
எப்பொழுதும்  அனுகூலமாக இருக்கின்ற அழகின் நிதி ,
வையகத்தின் அடிப்படை காரணமான ஆதி சக்தி ஸ்ரீ ஜானகி
. அந்த அம்சத்தில்  இருந்து தான்  லக்ஷ்மி, பார்வதி ,சரஸ்வதி போன்ற எண்ணிக்கையில்லா
மூன்று தேவியின் சக்திகள் தோன்றுகின்றன,

அவரின் புருவ அசைவில்  தான்
உலகத்தின் படைப்புகள் நடக்கின்றன.
அதே சீதை ராமரின் இடதுபக்கம் இருக்கிறார்.

   அழகின் சமுத்திரமான ஸ்ரீ ஹரியின்
 அழகைப் பார்த்து மனுவும் -சத்ரூபாவும்  
 கண்இமை கொட்டாமல் ,பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த இணையற்ற அழகை , அவர்கள் மரியாதையுடன்  பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதிக ஆனந்தத்தில் மெய்மறந்து இருந்தனர்.
அவர்கள் இறைவனின் சரணங்களைப் பிடித்து
நேரடியாக தண்டமிட்டு வணங்கினர்.
அவர்களை கிருபாசாகரமான  இறைவன்
தலையில் கைவைத்து ஆசிவழங்கி  தூக்கினார்.
பிறகு சொன்னார் --
"நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து ,
மிகப்பெரிய கொடைவள்ளலாக ஏற்று
 மனம் விரும்பும் வரம் கேளுங்கள். "
பிரபுவின் சொல்லைக்கேட்டு  ,
 இருவரும் கைகூப்பி உங்கள் சரண கமலங்களைப்
  பார்த்ததுமே எங்கள் மன விருப்பங்கள் பூர்த்தி அடைந்து விட்டன  என்றனர்.

பிறகும் மனதில் ஒரு ஆசை.
அது பூர்த்தி ஆவது சுலபம். அதே சமயம் கடினம்.
அதனால் சொல்ல முடியவில்லை.
பகவானே! அது உங்களுக்கு மிக  எளிது.
ஆனால் என்னுடைய இயலாமையால்
 எனக்கு கடினமாகப்படுகிறது.
 ஒரு தரித்திரன் கற்பக விருக்ஷத்தைக் கண்டும்
 அதிக செல்வம் கேட்கத் தயங்குவான்.
ஏனென்றால் அவன் அதன் மகிமையை அறியமாட்டான்.
அவ்வாறே என் மனதில் சந்தேகமும் நாணமும் தோன்றுகிறது.
நீங்கள் அந்தர்யாமி.  நீங்கள் அதை அறிவீர்கள்.
என்னுடைய மன விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
பகவான்  அவரிடம் நாணத்தை விட்டு என்னிடம் கேளுங்கள்.
உனக்கு கொடுக்கமுடியாதது என்பது எதுவும் என்னிடம் இல்லை.

அரசன் சொன்னான்--வள்ளல்களில் உயர்ந்தவரே! கிருபையின் இருப்பிடமே!
நாதா!எனக்கு உங்களைப்போன்றே ஒரு  மகன்  வேண்டும்.
இதுதான் என் மனதின் உண்மையான விருப்பம். எனது மனோபாவம்.
உங்களிடம் மறைக்க என்னிடம் என்ன இருக்கிறது.
சகலமும் தாங்கள் அறிந்ததே.

 " ராஜன்  அப்படியே ஆகட்டும்
.நான் என்னைப்போல  ஒருவனை
 எங்கே தேடுவேன்? நானே உங்களுக்கு
மகனாக பிறக்கிறேன் "  என்று பகவான் பகர்ந்தார்.
சதரூபா கை கூப்பி நிற்பதைப்பார்த்து ,அவளிடம்
உனக்கு என்ன வரம்  வேண்டும் ? என்று கேட்டார்.
எனது கணவர் கெட்டிக்காரர். அவர்
அரசன் கேட்ட வரமே எனக்குவேண்டும் என்றாள் சதரூபா.
ஆனால் தீர்க்கமுடியாதாதாகிவிட்டது .
இருந்தாலும் தாங்கள் பக்தர்களுக்கு நல்லது செய்பவர்.
அந்த தீக்கமுடியாத எங்கள் விருப்பமும் உங்களுக்கு
நல்லதாகவே தோன்றும்.

  நீங்கள் பிரம்மாவுக்கே  தந்தை.
ஜகந்நாதர்.எல்லோரின் மனதில் இருப்பதை
 அறியும் பிரம்மா.
இப்படி சிந்திக்கும்போது  மனதில்  சந்தேகம் வருகிறது.
ஆனால் தாங்கள் கூற்று சாத்தியமானது.
உங்களுடைய சொந்தங்கள் எந்த அலௌகீக ஆனந்தம்
அடைகிறார்களோ, எந்த சுகமும் பரம கதியும் அடைகிறார்களோ ,
அதையே எங்களுக்கும் தாருங்கள்.
ராணியின் மென்மையான , மந்தணம் நிறைந்த , அழகான
வாக்கிய அமைப்பைக் கேட்டு , கிருபைக் கடலான  பகவான்
மென்மையான சொற்களால் சொன்னார்--
"உன்னுடைய மனதில் இருக்கும் விருப்பமே நிறைவேறும்.
ஐயப்படவேண்டாம்".
    அம்மா! என்னுடைய கிருபையால் உன்னுடைய அலௌகீக ஞானம்
ஒருபோதும் நஷ்டமடையாது. அப்பொழுது மனு மீண்டும் பகவனை வணங்கி வேண்டினார் -"எனக்கு மற்றொரு விருப்பமும் உள்ளது. என்மனதில் ஒரு மகன் தன தந்தையின் மேலுள்ள பிரியமும் பாசமும் தான் எனக்கு உங்கள் மேல் உள்ளது. நீங்கள் என்னை முட்டாள் என்று அறிந்துகொண்டாலும் கவலையில்லை.
 எப்படி மணி இன்றி பாம்பும் , நீரின்றி மீனும் உயிர்வாழ முடியாதோ ,
அப்படியே  என்னுடைய வாழ்க்கை நீங்கள் இன்றி இருக்க முடியாது.

இப்படி வரம் கேட்டு ராஜா இறைவனின் பாதங்களை உறுதியாக கட்டிக்கொண்டார்.
பகவான்  சொன்னார் , உன் விருப்பம் நிறைவேறும் .
நீ என் ஆக்ஞை ஏற்று இந்திரசபாவில் போய் இரு.
அங்கு சுவர்க்கத்தை அனுபவித்த பின் நீ அயோத்தியவிற்கு அரசனாவாய்.
அப்பொழுது நான் உனக்கு புத்திரனாவேன்.

இச்சையால் நிர்மித்த மனிதனாகி, நான் உன்னுடைய கிரஹத்தில் தோன்றுவேன்.
நான் என் அம்ஷங்களுடன் மனித அவதாரம் எடுப்பேன். பக்தர்களுக்கு
சுகம் அளிக்கும் பாத்திரமாவேன்.
எனது பாத்திரத்தின் மதிப்பை உணர்ந்து , கேட்டு , மரியாதையுடன் வணங்கி
அன்பு , ஆணவத்தைத்  துறந்து  பவசாகரத்தை கடப்பார்கள்.

  ஆதி சக்தியான என் மாயையும் அவதாரம் எடுப்பாள்.
இவ்வாறு நான் உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு சொல்லி இறைவன் மறைந்தார்.

அந்த திவ்ய தம்பதிகள் சில காலம் அந்த ஆஷ்ரமத்தில் இருந்தனர்.
பிறகு தக்க தருணத்தில் உடலை விட்டு விட்டு இந்திரனின் அமராவதி
நகரத்திற்கு சென்று வசித்தனர்.
யாக்யவல்க்கியர் பாரத்வாஜரிடம்  கூறினார் --
"இந்த மிகவும் புனிதமான  கதையை  சிவபகவான்  பார்வதியிடம் கூறினார்.
இப்பொழுது ராமாவதரத்தின் மற்றொரு காரணத்தையும் கேள்.

Monday, January 16, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்தாறு

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்தாறு

 ஒவ்வொரு  பிறவியிலும்  இறைவன் அவதாரம் எடுக்கிறார்.
பலவித அழகான லீலைகள் புரிகிறார்.
இறைவனின் அநேகவிதமான  அழகு, சுகம் தரக்கூடியது,
அலௌகீக  பிறப்பு, செயல்.

  முநீஸ்வரர்கள்  மிகவும் பவித்திரமான , காவியங்களைப் படைத்து,
புகழ்ந்திருக்கிறார்கள்.  விதவிதமான  அபூர்வ மான கதைகளை வர்ணித்திருக்கிறார்கள். இதைக்கேட்டு அறிவுள்ளவர்கள் ஆச்சரியப்படுவதில்லை.

 ஸ்ரீ ஹரி முடிவற்றவர். அவர்  பற்றிய கதைகளும் முடிவற்றது.
எல்லா சாதுக்களும் -ரிஷிகளும் பலவிதங்களில் சொல்கிறார்கள்.
கேட்கிறார்கள்.  ஸ்ரீ ராமரின் அழகான சரித்திரத்தை கோடி வேதங்களிலும் பாட முடியாது.

பார்வதி! ஞானி முனிகளும் இறைவனின் மாயையில் மோகித்துவிடுகிறார்கள்.  பிரபு லீலைகள் புரிபவர்.
அவரை சரணடைந்தவர்களுக்கு நல்லது செய்பவர்.
அவருக்கு சுலபமாக நன்மை செய்பவர்.
எல்லா துன்பங்களையும் போக்குபவர்.

தேவர்கள், மனிதர்கள், முனிவர்களில்
 இறைவனின் மஹா மாயையில்
மோகிக்காதவர்கள் யாருமே  இல்லை.
மனதில் இதை எண்ணி, அந்த மகாமாயையை தூண்டுகின்ற
ஸ்ரீ பகவானை பஜனை செய்ய வேண்டும்.

மலைமகளே! இப்பொழுது ஹரியின்
அவதாரத்தின் மற்றொரு
காரணத்தையும் சொல்கிறேன்.
பிறவியற்ற ,உருவமற்ற, பிரம்மா ஏன் அயோத்தியாவிற்கு
அரசன் ஆனார்? என்ற கதையையும் விஸ்தாரமாகக் கூறுகிறேன்.

  நீ ராமரையும் லக்ஷ்மணனையும்  முனிவர் வேடத்தில் காட்டில் பார்த்தாய்.
அவரைப்பார்த்து சாதியின் உடலில் நீ பைத்தியமாகிவிட்டாய்.
இப்பிறவியிலும் அந்த மோஹம் உன்னை விடவில்லை.
அந்த பிரமை என்ற ரோகத்தை  போக்குகின்ற கதையைக்கேள் .

   அந்த அவதாரத்தில் , இறைவன் செய்த லீலைகளை,
என் அறிவுக்கு ஏற்ற படி சொல்கிறேன்.

யாக்யவல்கியர்  பாரத்வாஜரிடம் சொன்னார் --
சங்கரர் கூறியதைக்  கேட்டு, பார்வதி நாணத்துடன்
புன்சிரிப்பு சிரித்தார். பகவான் சிவன் பார்வதியிடம் ராமர் கதையைக்
கூறத்தொடங்கினார்.
பாரத்வாஜ முனிவரே கேளுங்கள் --
நான் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுகிறேன்.
மனம் ஈடுபட்டு கேளுங்கள்.
ஸ்ரீ ராமரின் கதை கலியுகத்தில் பாவங்களைப் போக்க கூடியது.
நன்மை செய்யக் கூடியது.
மிகவும் சுந்தரமானது.(அழகானது ).
ஸ்வாயம்புவ மனு, அவரின் மனைவி  சத்ரூபா மூலம்
மனிதர்களின் இணையற்ற உவமை இல்லா படைப்புகள் உண்டாகின.
இந்த தம்பதிகளின் நடத்தை  மிகவும் உயர்ந்தது.
இன்றும் வேதங்கள் இவர்களின் மரியாதையை புகழ்கின்றன.

ராஜா உத்தானபாதர்  அவருடைய புத்திரர்.  அவருடைய மகன் ஹரி பக்தரான  துருவன்.  அவருடைய இளைய மகன் , பிரியவிரதனை இன்றும் வேதங்கள் புகழ்கின்றன. அவருடைய மகள் தேவஹூதி. அவர் கர்தப் முனிவரின் அன்பு மனைவி. அவர்களுக்குப் பிறந்தவன் கபிலமுனி.
அவர் மிகவும் இரக்கமுள்ளவர். கிருபைகாட்டுபவர். சமர்த்தர்.
தத்துவங்களை   சிந்திப்பதில் வல்லவரான கபிலர் ,
புள்ளியியலை வர்ணித்தார். மனுவின் ஆட்சி நீண்டகாலம்  நடந்தது.
அவர் எல்லா விதத்திலும் இறைவனின் கட்டளையை கடைப் பிடித்தார் .
மனுவிற்கு முதுமையிலும் கேளிக்கை ஆசைகளில் வைராக்கியம் வரவில்லை.
ஹரியின் மேல் பக்தியின்றி இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வருந்தினார்.

மனு  தன்  மகனிடம் கட்டாயப்படுத்தி  ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு
மனைவியுடன்  மிகவும் புனிதமான சாதகர்களுக்கு சித்தி தரக்கூடிய
நைமிஷாரண்யத்திற்குச் சென்றார்.
அங்கு முனிவர்களும் சித்தர்களும் வசிக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் ஞானமும் பக்தியும்  அவதரித்ததுபோல்
ராஜமார்கத்தில்  செல்லும் போது  மிகவும் அழகாகக் காட்சி அளித்தனர்.

அவர்கள் இருவரும் கோமதி நதியின் கரையை அடைந்தனர்.
மகிழ்ச்சியுடன் புனித நதியில் குளித்தனர். அவர்களை  அறநெறியில் சிறந்த
ராஜரிஷி என அறிந்து முனிவர்களும் ரிஷிகளும் சந்திக்க வந்தனர்.

   வனத்தில் எங்கெல்லாம் அழகிய தீர்த்தங்கள் இருந்தனவோ ,
அங்கெல்லாம் அவர்களை அழைத்துச் சென்றனர். அவர் முனிவர்களைப்போன்று  மரவுரி  அணிந்துகொண்டார்.
சாதுக்களின் சமுதாயத்தில் தினந்தோறும் புராணங்களைக் கேட்டுவந்தார்.

   ஓம் நமோ பகவதே வாசுதேவாய  என்ற
பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை
ஜபித்துக் கொண்டிருந்தார்கள்.
ராஜா-ராணி  இருவருமே  இறைவனின் மீது மனம் ஈடுபட்டிருந்தது.

அவர்கள் பச்சைக்காய்கறிகள், பழங்கள், கிழங்குகளை ஆகாரமாக சாப்பிட்டனர்.  அவர்கள் ஹரியை சந்திக்க தபம் செய்தனர்.
சச்சிதானந்த பிரம்மாவை ஜபித்தனர்.
பின்னர் பழங்கள்  சாப்பிடுவதையும் விட்டு விட்டு தண்ணீரையே ஆகாரமாக சாப்பிட்டனர்.

 ராஜா -ராணி இருவருக்கும் இடைவிடா ஒரே ஆசை ராமச்சந்திர பிரபுவை நேரடியாக  பார்க்கவேண்டும் என்பதே.
பரமார்த்த வாதிகள் ,பிரம்ம ஞானிகள், தத்துவ ஞானிகள்  அந்த ஆதியும் அந்தமும் இல்லா இறைவனைப்பார்ப்பதே தங்கள் ஒரே குறிக்கோளாக
வாழவார்கள்.
வேதங்கள் இதுவும் இல்லை , இதுவும் இல்லை என்றே நிரூபிக்கின்றன.
அவர் ஆனந்த ஸ்வரூபர்,பட்டயமும் பட்டமும் இல்லாதவர். உவமை இல்லாதவர்.  அவரின் அம்ஷமாகத்தான் சிவன் ,விஷ்ணு, பிரம்மா வெளிப்படுகிறார்கள்.
 இப்படிப்பட்ட பகவான் சேவகர்களின் வசத்தில் இருப்பார். பக்தர்களுக்காக லீலை வினோதங்கள் புரிகிறார். வேதங்களில் சொல்லப்பட்டது  உண்மையானால், நம்முடைய ஆசைகள் கட்டாயம் நிறைவேறும்.
இவ்வாறு மனுவிற்கும் அவர் மனைவிக்கும் தண்ணீரே ஆகாரமாக தவம் செய்து  ஆறாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிறகு  ஏழாயிரம் ஆண்டுகள் அவர்கள் காற்றையே சுவாசித்து வாழ்ந்தனர்.
பத்தாயிரம் ஆண்டுகள் வாயுவை சுவாசிப்பதையும் விட்டுவிட்டனர்.
பிறகு ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தனர். அவர்களுடைய
கடும் தவம் கண்டு மூன்று தேவர்களும் மனுவிடம் வந்தனர்.
அவர்கள் மனுவிற்கு பலவித ஆசைகள் பேராசைகள் காட்டி வரம் கேட்கச் சொன்னார்கள்.

    ஆனால் கணவன் -மனைவி இருவருமே உறுதியாக இருந்தனர்.
அவர்களுடைய உடல் எலும்புச்சட்டமாகைவிட்டது.
ஆனால் அவர்கள் மனதில் வருத்தமே இல்லை.

சகலமும் அறிந்த கடவும் அவர்களை தன தாசனாக உணர்ந்தார்.

அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது--"வரம் கேள்."

   சவத்தையும் உயிர்ப்பிக்கும் அந்த இனிய குரல் கேட்டு ,
அரசனும் அரசியும் அழகான பழைய தோற்றத்தைப் பெற்றனர்.
இப்பொழுதுதான் அரண்மனையில் இருந்து வந்தது போன்ற தோற்றப்பொலிவு.

காதுகளில் அமிர்தமான குரல் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
அன்பு இருதயத்தில் அடங்காது.
இறைவனே!நீங்கள் தொண்டர்களுக்கு கற்பகவிருக்ஷம் , காமதேனு போன்றவர்.
உங்களுடைய பாத துகள்களை முப்பெரும் தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு, சிவன் மூவரும்  வணங்குகின்றனர்.
நீங்கள் சரணடைந்தவர்களை காப்பவர். அசைவன-அசையாதன அனைத்திற்கும்  பகவான்.
  நீங்கள் அனாதைகளுக்கு நன்மை அளிப்பவர்.
உங்களுக்கு எங்கள் மேல் அன்பிருந்தால் ,
சிவனின் மனதில் உள்ள உங்கள் வடிவம்  என்ன என்றறியும் வரம் கொடுங்கள். யாரை அடைய முனிவர்கள் முயற்சி எடுக்கிறார்கள். ?
தாங்கள் காகபுசுண்டியின் மனம் என்ற மானசரோவரில் நீந்தும் அன்னப்பறவை. தங்கை உருவமற்றவர்-உருவமில்லாதவர் என்று வேதங்கள் புகழ்கின்றன.தாங்கள் அந்த உருவத்தை எங்களுக்கு காட்டுங்கள்.
   நாங்கள் கண்குளிர உங்களை தரிசிக்கவேண்டும்.
ராஜா-ராணியின் மென்மையான, பணிவான,அன்பு நிறைந்த சொற்களில் மகிழ்ந்து   இறைவன் அவர்களுக்கு முன் தோன்றினார்.