ராமானுஜர் மிக உயர்ந்த சீர்திருத்தவாதி.
வட பாரதத்தில் பதிநான்காம் நூற்றாண்டில்
சுவாமி ராமானந்தர் பக்தியின் உரிமையை
அனைவருக்கும் அளித்தார்.அவர் அனைவருமே
சரணாகதிக்கு உரிமையுள்ளவர்கள் என்கிறார்.
இந்த மனோபாவம் அவருக்கு
ராமாநுஜரிடம் இருந்து வந்தது.
பிரபத்தி என்பது ஆழ்வார்கள் மூலம் சரணாகதிக்கு க்
கொடுத்த சொற்பொருள் விளக்கமாகும்.
ஆழ்வார்கள் பக்தியை இயக்க குறிப்பிட
ஸ்ரீ ராமானுஜர் "பிரபத்தி சொல்லை
மீண்டும் பிரயோகித்தார்.
ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் வேத சாஸ்த்திரங்கள்
மற்றும் மத நூல்களை படிக்க மற்றும் கற்பிக்க
எல்லா இன -ஜாதி மக்களுக்கும்
எளிதாக்கப் பட்டன. இப்பொழுது சாமானியனும்
ஆழ்வார் பக்தர்கள் மூலம் மக்கள் மொழி தமிழில் எழுதப்பட்ட பவித்திரமான பஜனைகள், திராவிடவேதங்கள்
திவ்விய பிரபந்தம் என்ற பெயரில் கிடக்கின்றன.
இவ்வாறு தன் 120 வருட தீர்க்க வாழ்க்கை காலத்தில்
ஹிந்து தர்ம நூல்களுக்கு காலத்திற்கேற்றவாறு
விளக்கமளித்து சமுதாயத்தின் முன் வைத்தார்.
தீண்டப்படாத ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா அறநூல்களையும் படிக்க ஏற்பாடு செய்தார். சூத்திரர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்க ஏற்பாடு செய்தார். ஐந்தாம் ஜாதி என்று சூத்திரர்களைவிட தாழ்ந்தவர்களுக்கு ஆளாய பிரவேசம் அளித்து வைஷ்ணவ தர்ம தீக்ஷை அளித்தார்.
சூத்திர குருவினர்களின் சீடனாகி வேதம் பயின்றார். அநேக சூத்திரர்களை தன் சீடராக ஏற்றார். ஒரு முகலாயப்பெண்ணிற்கும் ஆலயத்திற்குள்
அழைத்து பூஜை பக்திசெய்ய அனுமதித்தார்.
ராமானுஜர் மூலம் நிறுவப்பட்ட நூற்றுக் கணக்கான
மடங்கள் ,ஆஷ்ரமங்கள் ,வித்தியாலயங்கள் மூலம்
ஆயிரக்கணக்கான சாதுக்களை நாடுமுழுவதும் யாத்திரைக்கு அனுப்ப முயன்றார். இவ்வாறு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என எல்லா திசைகளிலும் வைணவ சமுதாயத்தை விரிவாக்கினார்.
இவ்வாறு ராமானுஜரின் முயற்சியால் வைணவ தர்மம்
பரவி மக்களுக்கு பக்திப்புரட்சி ஏற்படச்செய்தார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரந்து விரிந்த பகுதி புரட்சி என்ற கனல் ஸ்ரீ ராமானுஜரின் தீப்பிழம்பாகும்.
ராமானுஜர் போற்றுதலுக்கு உரியவர்.
No comments:
Post a Comment