ராமானுஜர் தன் குரு திருமலையாண்டான்
மற்றும் ஆளவந்தார் ஆள்வானிடம்
திருவாயமொழியின் ஞானத்தைப் பெற்றார்.
பிருமலை நம்பியிடம் ராமாயணம் பயின்றார்.
இவ்வாறு ராமானுஜரின் ஞானம் விரிவடைந்தது.
தன் இருபத்து மூன்று வயதிலேயே
கிருஹஸ்தாஸ்ரமத்தை விடுத்து
துறவறம் பூண்டார்.
அவர் மனித சமுதாயத்தை குற்றமற்ற
குணம் நிறைந்த சமுதாயத்தை
மாற்றும் உன்னத செயலில் ஈடுபட்டார்.
பயணங்களும் இலக்கியப்படைப்பும் :-
ஸ்ரீ ராமானுஜர் உலக விழிப்புணர்வுக்கு ஆதாரம்
பக்தியே என்றார் .பக்தியை பிரச்சாரம் செய்யவும் பக்தி முன்னேற்றத்திற்கும் அவர் மற்ற ஊர்களுக்குச் சென்றார்.
அவர் ராமேஸ்வரத்தில் இருந்து பத்திரி நாத் வரை பயணம் செய்தார்.மேற்கில் மஹாராஷ்டிரத்தில் இருந்து கிழக்கில் ஒரிசா சென்று தென்னகம் திரும்பினார். தன் அன்பு சீடரான கூரத்தாழ்வாருடன் ஸ்ரீ நகர் சென்று ஸ்ரீ ரங்கத்திற்குத் திரும்பினார். திரும்பியதிலிருந்து பாஷ்யம் எழுதத் தொடங்கினார்.பின்னர் வேதாந்த தீபம் ,வேதாந்த சாரம்,கீதாபாஷ்யம் ,நித்ய பாராயணம்,கத்யத்திரயம்
ஆகிய நூல்களை எழுதினார். அவர் ஆழ்வார்பக்தர்களுடன் தொடர்புள்ள இடங்களுக்குப் பயணம் செய்தார். மீண்டும் வட இந்திய ப் பயணம் மேற்கொண்டார். ஆஜ்மீர்,மதுரா,பிருந்தாவன்,பத்ரிநாத் ,காசி ,இறுதியாக பூரி சென்று அங்கு ஒரு மதத்தை நிறுவினார். தென்னிந்தியாவில்
பல இடங்களில் தன மடத்தை நிறுவினார் .அவருக்கு ஆழ்வார்களின் ப்ரபந்ததங்கள் மீது மிகவும் பற்று இருந்ததற்குச் சான்று அவர் தன் ஆலயங்களில் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாட்டு முறைகளாக்கினார்.
வைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கு மூலமாக இருப்பது பிரபந்தங்களே .ஸ்ரீ நம்மாழ்வார் சூத்திரர்.ஆனால் நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி வைஷ்ணவ பக்திக்கும் ,சம்பிரதாயங்களுக்கும் ,தத்துவங்களுக்கும்
ஆதாரமான நூலாகும். இராமானுஜர் பிரபந்தங்களில் கூறப்பட்ட அடிப்படைக்கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.ப்ரபந்தங்களின் எண்ணங்களை யுகத்திற்கேற்ற படி அறிவியல் விளக்கம் அளித்தார்.
புகழ் பெற்ற எழுத்தாளர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாருக்கு முன்பே ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்கள் மூலம் பக்தியின் அழகான பூமியை அமைத்திருந்தனர்.ஸ்ரீ ராமானுஜர் விரிவு படுத்தினார். ஸ்ரீ ராமானுஜர் கர்நாடகத்தின் மேல்கோட்டையை தனது பிரச்சாரமையமாக்கினார்.
அவருடைய அதிக சீடர்கள் பிற்பட்ட கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்கள் .எல்லோருமே மிகச் சிறந்த பக்தர்கள்.
ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் தேர் இழுப்பவர்கள் கீழ்ஜாதிச் சீடர்களே. அதே பரம்பரையைச் சார்ந்தவர்களேஇன்றும் அப்பணியைச் செய்கின்றனர்.மாலிக்காபூர் தன படையெடுப்பின் போது இங்குள்ள அழகான சிலையைக் கவர்ந்து தில்லிக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீ ராமானுஜர் தன் சீடர்களின் ஒத்துழைப்பால் அதை மீண்டும் தில்லியில் இருந்து மீட்டுவந்தார்.ஆகையால் அந்த ஜாதியினருக்குத் தேர் இழுப்பதில் முன்னுரிமை அளித்தார். அவர்கள் இழுத்தபிறகே மற்றவர்கள் தேர் இழுக்கமுடியும்.
ஸ்ரீ ராமானுஜரின் குரு மஹாபூர்ண குருதேவ் சூத்திர பக்தனின் சவத்திற்கு இறுதிச்சடங்கு செய்தார்.
அதனால் அவரை கடுமையாக விமர்சித்தனர். அவருடைய ரத்த உறவுகளும் அவரை விலக்கிவைத்தனர் .
ராமானுஜர் இந்த நிகழ்ச்சியால் மிகவும் வருத்தமுற்றார்.
உறவினர்கள் நடத்தைப்பற்றி தன குருவிடம் வினா எழுப்பினார். அதற்கு குரு சொன்னார் தர்மம் என்பது மஹான்கள் செல்லும் வழியைப் பின்பற்றுவதே.
மனித யோனியில் பிறக்காத பறவை யோனியில் பிறந்த ஜடாயுவிற்கு ஸ்ரீ ராமர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.
யுதிஷ்டர் க்ஷத்திரியராக இருந்தாலும் விதுரனை வழிபட்டார்.
உண்மையான பக்தர்களுக்கு ஜாதியில்லை.அவர்கள் எல்லா ஜாதியினர்களைவிட உயர்ந்தவர்கள். ஸ்ரீராமர் ,யுதிஷ்டர் போன்ற அறங்காவலர்கள் மூலம் ஒருபொழுதும் தகுதியற்ற ஆசாரங்கள் நடக்காது. நான் இன்று இறுதிச் சடங்கு செய்த சூத்திரன் என்னைவிட ஆயிரம் மடங்கு அதிகமுள்ள பக்தன்.
அவனுக்குத் தொண்டு செய்ததை நான் மிகவும் நன்றியுள்ளவனாகக் கருதுகிறேன்.

No comments:
Post a Comment