பக்தி உணர்வும் சமுதாயமும் --3
கபீர் தாசரும் இந்த வையகக்
கடலைத் தாண்ட ஹரியின் பெயர் மட்டுமே
உதவியாகும் என்கிறார் .
குரு நானக்கும் ராமநாமம் ஜபித்தால் மட்டுமே
மு ன்னேற்றம் ஏற்படும் என்கிறார்.
சாது தரியா என்பவரும் ராமன் பெயரை
ஜெபிக்காமல் உலக வினையில் இருந்து
விடுபடுவது கடினம் என்கிறார்.
சாதுக்களின் சேர்க்கை ,
ஹரி பஜனை இடைவிடாமல்
ஜபிக்கவில்லை என்றால்
வரும் ஜனன-மரண வருகையில்
இருந்து தப்ப முடியாது.
அந்த சூழலில் சுற்றிக்கொண்டே இருப்பதுதான்நடக்கும்.
புனித நாமதேவரும் ராமநாமம் தான்
மிக உயர்ந்த பொருளாகும் என்கிறார்.
புனித சாது கபீர் ராமநாமம் ஜபித்ததால்
தான் உலகப் புகழ்பெற்று விளங்குகிறார்.
பிறவி எடுப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.
தாழ்ந்த நேர்மையற்றுப் பிறந்த சண்டாளன்
ராமநாமம் ஜபித்தால் உயர்ந்தவனாகிவிடுவான்.
உயர்ந்த குலத்தில் பிறந்தும் ராமநாமம்
ஜபிக்கவில்லை என்றால் தாழ்ந்தவன் ஆகிவிடுவான்.
இப்படி புனித சாதுக்கள் பரம்பரை
ராம நாமம் ஜெபிப்பதை
பகவான் பக்திக்கு ஆதாரமாக ஏற்று
பிரச்சாரம் செய்தனர்.
ஸ்ரீ குரு தேகபஹாதுர் :-
ஹரியின் பெயர் எப்பொழுதும் சுகம் தருவது.
அஜாமில் இறைநாமம் சொல்லி முக்தி அடைந்தான்.
கணிகையும் முக்தி அடைந்தாள்.
பக்தியால் தான் மனிதனின் பெயர் உயர்கிறது .
ப்ருஹந்நாராதீய நூலில் விஷ்ணுபக்த சாண்டாள்
பிராமணனை விட உயர்ந்தவனாகவும் பக்தி இல்லாத
பிராமணன் சாண்டாளனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
இந்த பக்த கவிஞர்கள் வெவ்வேறு இனத்தை ஜாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் எல்லோரின் கருத்தும் ஒன்றே .
ஹரிநாமம் தான் உயர்ந்தது.இதில் ஜாதி-இன -மொழி பற்றிய சிந்தனை வீணானது.
பகவானை பஜனை செய்யும் அதிகாரம் உரிமை அனைவருக்கும் உண்டு.
ஜாதி -இனம் யாரும் கேட்கவே வேண்டாம். ஹரியை பஜனை செய்பவன் ஹரியாகவே ஆகிவிடுவான்.
எல்லா ஆன்மீக மஹான்களும் கடவுளின் நாமத்தை ஜெபிப்பதே கடவுளை சந்திக்க ஒரே எளிய வழி என்கின்றனர்.
இதில் ஜாதி-இன -உயர் குலம் -தாழ் குலம்
ஆகியவற்றிற்கு எவ்வித மகத்துவமும் இல்லை.
பூஜை=கர்ம காண்டங்கள்
வெளி ஆடம்பரங்கள் ,மந்திரங்கள்,
சுலோகங்கள் ஆகிய எதுவும் தேவை இல்லை.
ஹரி ஸ்மரணை எளிதாக ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தது.
அதனால் எல்லா வேற்றுமைகளையும் போக்க
இது ஒரு முன்னுரையாக இருந்தது.
No comments:
Post a Comment