Friday, August 24, 2018

பக்தி உணர்வும் ஹிந்து சமுதாயமும் -ராமானுஜம் 6.

 ராமானுஜர்   பால பருவத்தில் "யாதவ் பிரகாஷ் "என்ற பெயருள்ள அத்வைத்  வித்வானிடம்  கல்வி பயின்றார்.
பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.பிறகு  யமுனாச்சாரியாரின் சீடனாகி ஸ்ரீ சம்பிரதாயத்தைத்  தோற்றுவித்தார்.யமுனாச்சாரியாரின்
வைகுண்டவாசத்திற்குப்பின்  தன்னுடைய அசாதாரண
செல்வாக்கும்  ஞானத்தின் காரணமாக வைஷ்ணவ மதத்தின் சிம்மாசனத்தின் வாரிசானார்.
  ஸ்ரீ ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஸ்ரீ பெரியநம்பி தான் ஸ்ரீ ராமானுஜரின் குரு ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். ராமானுஜர் வேதங்களையும் நாலாயிர திவ்விய  பிரபந்தத்தையும் ஸ்ரீ ராமானுஜர் பெரியநம்பி அவர்களிடம் தான் பூர்த்தி செய்தார்.
பெரிய நம்பித்தான் ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ சம்பிரதாய தீக்ஷை அளித்தார்.
  ஸ்ரீ ராமானுஜரின் அடுத்த குரு திருக்கோஷ்டியூர்  நம்பி ஆவார். திருக்கோஷ்டியூர் நம்பி சூத்திரர். அனால் வேதத்தில் மேதாவி.மிகப்பெரிய பக்தர். அதனால் அவர் அவரிடம் பயின்றார்.
திருக்கோஷ்டியூர்  நம்பி ராமாநுஜரிடம் கேட்டார்--
"நான் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சூத்திரன்.
நீ பிராமணன் .நான் எப்படி உனக்கு குரு ஆக முடியும்?
 ஸ்ரீ ராமானுஜர் அதற்கு பதிலாக வினா எழுப்பினார்-
பூணூல் போடுவதால் ஒருவர் பிராமணனாக முடியுமா?
இறைவன் மேல் பக்தியுள்ளவன் தான் உண்மையான பிராமணன்.உயர்ந்த ஆழ்வார்கள் பக்தர்கள்.வெவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.ஆனால் எல்லோருமே பகவானின் பக்தர்கள். தாழ்ந்த குலத்தில்  பிறந்த திருப்பாணாழ்வார்
தன்  தகுதியின் காரணமாக அநேக பிராமணர்களால் பூஜிக்கப்படுபவர் . ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் திறமையையும் பக்தியும் கண்டு திருக்கோஷ்டியூர் நம்பியும்
அவருக்கு கற்பிக்க சம்மதித்தார்.
  ஸ்ரீ  ராமானுஜருக்கு "ஓம் நமோ நாராயணா"என்ற எட்டெழுத்து  மந்திரத்தைக் கற்பித்து,இதை ரகசியமாக வைத்திரு. யாரிடமும் சொல்லாதே. சொன்னால் நரகம் தான்
கிடைக்கும் என்கிறார்.  ராமானுஜர் ஆலய கோபுரத்தின்
உச்சியில் ஏறி நின்று மக்களை ஒன்று திரட்டி உயர்ந்த குரலில் தன்  குருவின் மந்திரமான "ஓம் நமோ நாராயணா "வை அனைவருக்கும் சொல்லி இதனால் முக்தி கிடைக்கும் என்று சொன்னார். மீண்டும் குரு அவரிடம் உனக்கு பாவம் உண்டாகும் என்றார். அப்பொழுது ராமானுஜர் சொன்னார் --
"இத்தனைபேருக்கு முக்தி  கிடைக்கும் என்றால்  நான் நரகத்தில்  இருக்க விரும்புவேன் என்கிறார்.

No comments: